Viral Video : பிறக்கும்போதே 32 பற்களுடன் பிறந்த குழந்தை? இணையத்தில் வைரலாகும் வீடியோ! - Tamil News | A Video of new born baby with teeth goes viral on internet | TV9 Tamil

Viral Video : பிறக்கும்போதே 32 பற்களுடன் பிறந்த குழந்தை? இணையத்தில் வைரலாகும் வீடியோ!

பற்களுடன் பிறந்த குழந்தை | இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில், எனது குழந்தை பிறக்கும்போது 32 பற்களுடன் பிறந்தது. இது ஒரு மருத்துவ பிரச்னை. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த வீடியோவை பதிவிடுகிறேன் என்று அந்த குழந்தையின் தாய் பதிவிட்டுள்ளார்.

Viral Video : பிறக்கும்போதே 32 பற்களுடன் பிறந்த குழந்தை? இணையத்தில் வைரலாகும் வீடியோ!

வைரல் வீடியோ

Updated On: 

23 Jul 2024 14:36 PM

வைரல் வீடியோ : உலக நாடுகளில் மனிதர்கள் வாழ்வியல் சற்று வேறுபட்டாலும், மனிதர்களுக்கான பன்புகள் ஒரே மாதிரியாக தான் உள்ளன. பொதுவாக குழந்தைகள் பிறக்கும்போது பற்கள் இல்லாமல் பிறக்கின்றனர். அவர்கள் பிறந்து 1 அல்லது 2 வயதில் தான் பால் பற்கள் முளைத்து பிறகு அவை விழுந்து மீண்டும் உறுதியான பற்கள் முளைக்கும். அதிலும் குறிப்பாக 21 வயதுக்கு மேல் தான் கடைவாய் பற்கள் முளைத்து பற்களின் வளர்ச்சி முழுமயடையும். இப்படிதான் உலகில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் பிறந்து வளர்கிறது. ஆனால் இன்ஸ்டாவில் பதிவிடப்பட்ட வீடியோ அனைவரையும் ஆய்ச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிறக்கும்போதே 32 பற்களுடன் பிறந்த பெண் குழந்தையும்

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில், எனது குழந்தை பிறக்கும்போது 32 பற்களுடன் பிறந்தது. இது ஒரு மருத்துவ பிரச்னை. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த வீடியோவை பதிவிடுகிறேன் என்று அந்த குழந்தையின் தாய் பதிவிட்டுள்ளார். உண்மையில் இது ஒரு மருத்துவ பிரச்னை தான். அதற்கு பெயர் “Natal Teeth” என அழைக்கப்படுகிறது. இதனால் குழந்தைகளுக்கு எந்த வித பாதிப்பும் இல்லை. ஆனால் இதனால் பாலூட்டும் தாய்மார்களுக்கு சில பிரச்னைகள் உண்டு. அதுமட்டுமன்றி இந்த பிரச்னை உள்ள குழந்தைகளை மிகவும் கூர்மையாக கவனித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

வைரலாகும் குழந்தையின் வீடியோ – குழப்பத்தில் நெட்டிசன்கள்

பொதுவாக குழந்தைகள் பிறந்த 6 முதல் 7 மாதங்களில் தவழ தொடங்குவர். அவ்வாறு குழந்தை தவழும் போது தவறி விழுந்துவிட்டால் பற்களை உடைந்து காயம் ஏற்பட வாப்புள்ளது. இது தவிர இதில் வேரேதும் பிரச்னை இல்லை. இந்நிலையில் இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் குழந்தையின் புகைப்படங்களும், வீடியோக்களும் அடங்கியுள்ளன. அதில் குழந்தைக்கு பெரியவர்களின் பற்களை போலவே அனைத்து பற்களும் உள்ளன.  இந்த வீடியோவை பார்க்கும் பயனர்கள் இது உண்மையா அல்லது சித்தரிக்கப்பட்டவையா என தெரியாமல் குழம்பி வருகின்றனர்.

இதையும் படிங்க : Viral Video : பிரதமர் மோடி முதல் கிம்  ஜோங் உன் வரை.. உலக தலைவர்களுக்கு ஃபேஷன் ஷோ நடத்திய எலான் மஸ்க்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

பிறந்து சில மாதங்களே ஆன கைக்குழந்தைக்கு பற்கள் முளைத்திருக்கிறதா இதை என்னால் நம்பவே முடியவில்லை என்று ஒரு பயனர் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ அழகாகவும் அதே சமயம் அதிர்ச்சியூட்டும் விதமாகவும் உள்ளது என்று மற்றொரு பயனர் பதிவிட்டுள்ளார். வேறொருவர், இது ஒரு உலக சாதனை என தனது ஆச்சர்யத்தை வெளிபடுத்தும் விதமாக பதிவிட்டுள்ளார்.

12 வயதுக்குள் உங்கள் குழந்தை கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம்!
உங்கள் பயணங்களை சிறப்பான மாற்ற சில டிப்ஸ்!
கீரை ஃப்ரெஷாக இருக்க சில டிப்ஸ்
காலையில் எழுந்தவுடன் செல்போன் பார்ப்பதால் இவ்வளவு பிரச்னையா?