Viral Video : இடம் இல்லாததால், ரயில் பெட்டியில் படுக்கை தயாரித்த பயணி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Train Berth | இந்தியாவில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பொது போக்குவரத்துகளில் ரயில் போக்குவரத்து முக்கிய பங்கு வகிக்கிறது. காரணம், ரயில்களில் குறைந்த செலவில் நீண்ட தூரம் பயணிக்கலாம். இதன் காரணமாகவே பலர் ரயிலில் பயணம் செய்கின்றனர்.

Viral Video : இடம் இல்லாததால், ரயில் பெட்டியில் படுக்கை தயாரித்த பயணி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

வைரல் வீடியோ

Published: 

05 Nov 2024 17:02 PM

ரயிலின் பொது பெட்டியில் பயணிக்கும் ஒருவர், படுக்க இடம் இல்லாததால் தானே படுக்கைகளுக்கு இடையில் புதிய படுக்கையை உருவாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ இணையத்தில் பதிவிடப்பட்டது முதலே வைரலாகி வரும் நிலையில், இந்த வீடியோ குறித்து நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் இடம்பெற்றிருப்பது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் ரயில் சேவை

இந்தியாவில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பொது போக்குவரத்துகளில் ரயில் போக்குவரத்து முக்கிய பங்கு வகிக்கிறது. காரணம், ரயில்களில் குறைந்த செலவில் நீண்ட தூரம் பயணிக்கலாம். இதன் காரணமாகவே பலர் ரயிலில் பயணம் செய்கின்றனர். இவ்வாறு ஏராளமான மக்கள் நாள்தோறும் ரயிலில் பயணிப்பதால், பெரும்பாலான ரயில்கள் மிகவும் கூட்ட நெரிசலுடன் காணப்படும். இதனால், ரயில் பெட்டியில் அமறுவதற்கு கூடம் இருக்காது. இத்தகைய சூழலில் நின்றுக்கொண்டே பயணிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

இதையும் படிங்க : Viral Video: விபத்தில் சிக்கிய இந்திய போர் விமானம்.. நூலிழையில் உயிர்தப்பிய விமானிகள்.. திக்திக் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

அவ்வாறு கூட்ட நெரிசல் காரணமாக படுக்க இடம் இல்லாததால் பயணி ஒருவர் அதிரடி முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், கூட்ட நெரிசல் மிகுந்த ரயில் பெட்டியில் பொதுமக்கள் பயணிக்கின்றனர். கூட்ட நெரிசல் காரணமாக நிற்க கூட இடம் இல்லாததால் சூழல் உள்ளது. இந்த நிலையில், அந்த பெட்டியில் பயணிக்கும் பயணி ஒருவர், தன்னிடம் இருந்த சணல் கயிறை எடுத்து ஏற்கனவே ஆட்கள் படுத்துக்கொண்டிருக்கும் படுக்கைகளுக்கு இடையில் உள்ள இடைவெளியை பயன்படுத்தி படுக்கை தயாரிக்கிறார்.

இதையும் படிங்க : Nellai Crime News: ”அதிக லக்கேஜ் ஏன் ஏத்துற?” பயணி கன்னத்தில் அறைந்த நடத்துனர்.. அதிர்ச்சி வீடியோ!

அதாவது இறும்பு கட்டில்களை கயிறு கொண்டு பின்னுவது போல இரண்டு படுக்கைகளுக்கு இடையில் இருந்த இடைவெளியை பயன்படுத்தி படுக்கையை பின்னுகிறார். அவர் பின்னி முடித்ததும் அது படுத்து உறங்குவதற்கு ஏற்றதான ஒரு படுக்கை போல காட்சியளிக்கிறது. இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நெட்டிசன்கள் கருத்து

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த நபரின் சிந்திக்கும் திறனை பாராட்டுவதாக ஒருவர் பதிவிட்டுள்ளார். இந்தியர்கள் எந்த காலத்திலும், சூழலிலும் வாழும் திறமை படைத்தவர்கள் என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார். மேலும் வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை என்றால் அதனை நாம் தான் உருவாக்க வேண்டும் என்று அந்த இளைஞரின் செயல் காட்டுவதாக மற்றொருவர் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க : Viral Video : ஏசி தண்ணீரை கடவுளின் தீர்த்தம் என குடித்த பக்தர்கள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இணையத்தில் மிக வேகமாக வைரலாகும் வீடியோக்கள்

தற்போது சமூக ஊடகங்களின் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக, எந்த ஒரு அசாத்தியமான மற்றும் ஆச்சர்யமான விஷயம் என்றாலும் அது மிக வேகமாக இணையதளத்தில் வைரலாகி விடுகிறது. முன்பெல்லாம் வெளி மாநிலங்களிலோ அல்லது வெளி நாடுகளிலோ ஏதேனும் அசாத்தியமான, முக்கிய நிகழ்வுகள் நடந்தால் அந்த சம்பவத்தின் தகவல் மற்ற நாடுகளுக்கோ அல்லது மாநிலங்களுக்கோ தெரிய வருவதற்கே ஒரு நாள் ஆகிவிடும்.

இதையும் படிங்க : Viral Video: சிறுவனை பலி வாங்கிய சைக்கிள் சாகசம்.. அதிர்ச்சியடைய வைக்கும் காட்சிகள்!

ஆனால் இப்போது அதற்கான அவசியம் எதுவுமில்லை. ஏனென்றால், இப்போதெல்லாம் தகவல் தொழில் நுட்பத்தின் உதவியால் எந்த ஒரு சம்பவம் நடந்தாலும், சம்பவம் நடந்த சில நொடிகளிலேயே உலகம் முழுவதும் தகவல் சென்று சேர்ந்து விடுகிறது. அவ்வாறு செய்தி விரைவாக சென்று சேர்வது பல வகைகளில் நன்மையாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக விரைவாக தகவல் பரிமாறப்படுவதன் மூலம் குற்ற சம்பவங்கள் எளிதாக கண்டறியப்பட்டு அவற்றுக்கு விரைவில் தண்டனைகளும் வழங்கபடுவது குறிப்பிடத்தக்கது.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!