5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Ratan Tata : ரத்தன் டாடாவின் உடலை விட்டு வர மறுத்த செல்லப்பிராணி “Goa”.. இணையத்தில் வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ!

Funeral | மருத்துவமனையில் உயிரிழந்த ரத்தன் டாடாவின் உடல் அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. பிறகு அங்கிருந்து NCPA வளாகத்தில், பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அப்போது அங்கு வந்த ஏராளமான பொதுமக்கள் அவரின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

Ratan Tata : ரத்தன் டாடாவின் உடலை விட்டு வர மறுத்த செல்லப்பிராணி “Goa”.. இணையத்தில் வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ!
வைரல் வீடியோ
vinalin
Vinalin Sweety | Published: 11 Oct 2024 13:51 PM

இந்தியாவின் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நல குறைவால் உயிரிழந்த நிலையில், மும்பையில் உள்ள வோர்லி மயானத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அதற்கு முன்பாக பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது உடல் NCPA வளாகத்தில் வைக்கப்பட்டிருந்தது. அப்போது அங்கு வந்த ஏராளமான பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். அந்த நிலையில் ரத்தன் டாடாவின் செல்லப்பிராணி “Goa” அவருக்கு அஞ்சலி செலுத்திய நெகிழ்ச்சி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

யார் இந்த ரத்தன் டாடா?

கடந்த 1937 ஆம் ஆண்டு புகழ்பெற்ற டாடா குழுமத்தில் பிறந்தவர் ரத்தன் டாடா. ஆரம்ப காலக்கத்தில் சவாலான சூழல்களை சந்தித்த டாடாவுக்கு அதுவே வாழ்க்கை பாடமாக மாறியது. இதனால் பக்குவமடைந்த அவர், தொழில் வளர்ச்சியிலும் தனது அனுபத்தை நிலைநாட்டினார். அதன்படி, கடந்த 1962 ஆம் ஆண்டு டாடா குழுமத்தில் இணைந்த அவர், டாடா மோட்டர்ஸில் பணியாற்ற தொடங்கினார். தனது திறமையால் இந்தியாவின் பிரபல தொழிலதிபர்களில் ஒருவராக உருவானார் ரத்தன் டாடா. அதன் மூலம் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக பதவி வகித்தார்.

இதையும் படிங்க : Milton Hurricane : புளோரிடாவை புரட்டி போட்ட மில்டன் சூறாவளி.. முகாம்களில் தஞ்சமடைந்த பொதுமக்கள்!

ரத்தன் டாடா சிறந்த தொழிலதிபர் மட்டுமன்றி, ஏழைகளின் காப்பாளராகவும் திகழ்ந்தார். ரத்தன் டாடா தனது சாமார்த்தியத்தால் குடும்ப வருமானத்தை மிகப்பெரிய சாம்ராஜிமாக மாற்றிய பெருமை கொண்டவர். அவர் டாடா குழுமத்தில் பொருப்பில் இருந்தபோது பல முன்னேற்றங்களை செய்தார். குறிப்பாக கடந்த 1911 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில், டாடா குழுமம் சுமார் 100 மில்லியன் டாலர் வருமானம் ஈட்ட செய்தார்.

இதையும் படிங்க : Ratan Tata Funeral : விடைபெற்றார் ரத்தன் டாடா.. அரசு மரியாதையுடன் நடந்த இறுதிச் சடங்கு!

உடல்நல குறைவால் உயிரிழந்த ரத்தன் டாடா

ரத்தன் டாடா கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன்பு உடல்நிலை மோசமாகி மீண்டும் மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி இரவு உயிரிழந்தார். அவரின் இறப்பு செய்தி இந்திய மக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. வணிகத்தை மட்டுமே நோக்கமாக கொண்டிருக்கும் தொழிலதிபர்கள் மத்தியில், மக்களின் நலனில் அக்கறை செலுத்திய ஒரே தொழிலதிபராக ரத்தன் டாடா விளங்கினார். இத்தகைய மகத்தான மனிதனின் இழப்பு ஒட்டுமொத்த இந்திய மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதையும் படிங்க : Rohit Sharma: ஆஸ்திரேலியா தொடரை மிஸ் செய்யப்போகும் ரோஹித்.. அடுத்த டெஸ்ட் கேப்டன் யார்?

ரத்தன் டாடா உடலுக்கு அஞ்சலி செலுத்திய செல்லப்பிராணி Goa

மருத்துவமனையில் உயிரிழந்த ரத்தன் டாடாவின் உடல் அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. பிறகு அங்கிருந்து NCPA வளாகத்தில், பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அப்போது அங்கு வந்த ஏராளமான பொதுமக்கள் அவரின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். அந்த வகையில் ரத்தன் டாடாவின் செல்லப்பிராணி Goa அஞ்சலி செலுத்துதற்காக அழைத்துச்செல்லப்பட்டது. அப்போது ரத்தன் டாடாவின் உடலின் அருகில் சென்று நின்ற கோவா, கீழே இறங்காமல் அருகிலே அமர்ந்துக்கொண்டது. இது பார்பவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Latest News