Viral Video : இருசக்கர வாகனம் ஓட்டிய பள்ளி சிறுமி.. சர்ச்சையை கிளப்பிய வீடியோ.. இணையத்தில் வைரல்!

School Girl | சாலையில் வாகனம் ஓட்ட வேண்டும் என்றால் சில விதிகள் உள்ளது. அது ஒவ்வொரு நாட்டிற்கும் வேறுபடும். அந்த வகையில், இந்தியாவை பொருத்தவரை சாலையில் வாகனம் ஓட்ட வேண்டும் என்றால் அந்த நபருக்கு 18 வயது நிரம்பி இருக்க வேண்டும். முக்கியமாக அந்த நபர் வாகனம் ஓட்டுவதற்கான லைசன்ஸ் பெற்றிருக்க வேண்டும்.

Viral Video : இருசக்கர வாகனம் ஓட்டிய பள்ளி சிறுமி.. சர்ச்சையை கிளப்பிய வீடியோ.. இணையத்தில் வைரல்!

வைரல் வீடியோ

Published: 

23 Oct 2024 14:37 PM

இந்தியாவில் 18 வயது நிரம்பிய லைசன்ஸ் பெற்றவர்கள் மட்டுமே சாலையில் வாகனம் ஓட்ட வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ள நிலையில், பள்ளி சிறுமி ஒருவர் தனது தந்தையை பின்னால் அமர வைத்து இருசக்கர வாகனம ஓட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சட்டத்திற்கு புரம்பாகவும், பாதுகாப்புகள் ஏதும் இன்றியும் சிறுமி வாகனம் ஓட்டும் நிலையில், அந்த வீடியோவுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில், இந்த சம்பவம் எங்கு நடந்தது, என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இணையத்தில் வைரலாகும் வீடியோ

சாலையில் வாகனம் ஓட்ட வேண்டும் என்றால் சில விதிகள் உள்ளது. அது ஒவ்வொரு நாட்டிற்கும் வேறுபடும். அந்த வகையில், இந்தியாவை பொருத்தவரை சாலையில் வாகனம் ஓட்ட வேண்டும் என்றால் அந்த நபருக்கு 18 வயது நிரம்பி இருக்க வேண்டும். முக்கியமாக அந்த நபர் வாகனம் ஓட்டுவதற்கான லைசன்ஸ் பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான், சாலையில் வாகனம் ஓட்ட அனுமதிப்படும். ஆனால் இணையத்தில் வைராலி வரும் அந்த வீடியோவில், பள்ளி சிறுமி ஒருவர் தனது தந்தையை பின்னால் அமர வைத்து இருசக்கர வாகனம் ஓட்டுகிறார். வாகனம் ஓட்டும் அந்த சிறுமி, பள்ளி சீருடையும் அணிந்துள்ளார். பள்ளி சிறுமி வாகனம் ஓட்டுவதை சிலர் வீடியோ எடுக்க, அந்த சிறுமியின் தந்தையோ மிகவும் பெருமையுடன் சிரிக்கிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Viral Video : 14வது மாடியில் இருந்து குதிக்க முயன்ற நபர்.. அடுத்து நடந்தது என்ன.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

வைரல் வீடியோவுக்கு கண்டனம் தெரிவிக்கும் நெட்டிசன்கள்

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து, நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். பிள்ளைகளுக்கு எது சரி, எது தவறு என்று சொல்லிக்கொடுக்க வேண்டிய பெற்றோர்களே இத்தகைய தவறுகளுக்கு துணை போவது தவறான முன்னுதாரனமாக இருக்கும் என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். விதிகளை கடைபிடிப்பது மனிதர்களுக்கு தேவையான முக்கிய குணமாகும். அதை அந்த தந்தை தனது குழந்தைக்கு கற்பிக்க தவறிவிட்டார் என்று பதிவிட்டுள்ளார். மற்றொருவர், சாலை விதிகளை மீறி, பாதுகாப்பின்றி சிறுமியை வாகனம் ஓட்ட அனுமதித்த அவரது தந்தை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். இந்த நிலையில், சட்டத்திற்கு புறம்பாகவும், பாதுகாப்பின்றியும் சிறுமி வாகனம் ஓட்டிய வீடியோ, கடும் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : மணப்பெண்ணை கிரிக்கெட் பேட்டால் தாக்கிய தாய்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இணையத்தில் மிக வேகமாக வைரலாகும் வீடியோக்கள்

சமூக ஊடகங்களின் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், எந்த ஒரு அசாத்தியமான அல்லது ஆச்சர்யமான விஷயம் என்றாலும் அது எளிதாக இணையத்தில் வைரலாகி விடுகிறது. முன்பெல்லாம் வெளி மாநிலங்களிலோ அல்லது வெளி நாடுகளிலோ ஏதேனும் அசாத்தியமான அல்லது முக்கிய நிகழ்வுகள் நடந்தால் அது தெரிய வருவதற்கே ஒரு நாள் ஆகிவிடும். ஆனால் இப்போது அப்படியெல்லாம் இல்லை. சம்பவம் நடந்த சில நொடிகளிலேயே தகவல சென்று சேர்ந்து விடுகிறது. இவ்வாறு செய்தி விரைவாக சென்று சேர்வது பல வகைகளில் நன்மையாக இருக்கிறது. இவ்வாறு விரைவாக தகவல் பரிமாறப்படுவதன் மூலம் குற்ற சம்பவங்கள் எளிதான கண்டறியப்பட்டு அதற்கு விரைவில் தண்டனைகளும் வழங்கபடுவது குறிப்பிடத்தக்கது.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!