Viral Video : ரீல்ஸ்க்கு நடனமாடிய தாய்.. தங்கையின் உயிரை காப்பாற்றிய சிறுவன்.. வைரலாகும் விடியோ!
Instagram Reel | இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், பெண் ஒருவர் உற்சாகமாக ரீல்ஸ் எடுத்து கொண்டிருக்கிறார். அப்போது, அந்தப் பெண்ணின் பெண் குழந்தை சாலையை நோக்கி ஓடுகிறது. அவற்றை எல்லாம் கண்டுகொள்ளாத அந்த பெண், ரீல்ஸ் எடுப்பதில் கவனம் செலுத்துகிறார்.
பொதுமக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் சமூக ஊடகங்களை அதிகம் பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர். தினமும் காலையில் எழுவது முதல் உறங்க செல்வதற்கு முன்பு வரை சமூக ஊடகங்களில் பல மணி நேரம் செலவிடுகின்றனர். குறிப்பாக, இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செய்திகள் மீது பொதுமக்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர். காரணம், இன்ஸ்டாகிராம் செயலியில் அதிக அளவு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்துள்ளன. அதில் குறிப்பாக ரீல்ஸ் மிகவும் பிரபலமாக உள்ளது. பொதுமக்கள், இன்ஸ்டாகிராம் செயலியில் ரீல்ஸ் பார்ப்பது மட்டுமின்றி தாங்களும் ரீல்ஸ் பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்து கொண்டிருந்த தாய், தனது குழந்தைகளை கவனிக்க தவறிய நிலையில் சிறுவன் தனது தங்கையை காப்பாற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
The mother was making a reel on the phone and the little girl was just about to reach the road, suddenly her son comes and point her out 🫡
pic.twitter.com/QS59ak69Sy— Ghar Ke Kalesh (@gharkekalesh) December 9, 2024
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், பெண் ஒருவர் உற்சாகமாக ரீல்ஸ் எடுத்து கொண்டிருக்கிறார். அப்போது, அந்தப் பெண்ணின் பெண் குழந்தை சாலையை நோக்கி ஓடுகிறது. அவற்றை எல்லாம் கண்டுகொள்ளாத அந்த பெண், ரீல்ஸ் எடுப்பதில் கவனம் செலுத்துகிறார். தனது தங்கை சாலையை நோக்கி ஓடுவதை கவனித்த அந்த சிறுவன், உடனடியாக தனது தாயை வந்து அழைக்கிறார். ஆனால் அந்த பெண்ணோ, அந்த குழந்தை இடம் மொபைல் போனை காட்டி சமாளிக்கிறார். பிறகு அந்த சிறுவன், தனது தங்கை சாலையை நோக்கி சென்று கொண்டிருப்பதை தாயிசம் கூற, பிரச்சனை உணர்ந்து கொண்ட தாய் விரைவாக ஓடிச்சென்று அந்தக் குழந்தையை காப்பாற்றுகிறார். அந்த குழந்தையுடன் அந்த சிறுவனும் இணைந்து ஓடும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன.
இதையும் படிங்க : Viral Video : மனிதர்களை போல் இரண்டு கால்களால் நடக்கும் குரங்கு.. ஏன் தெரியுமா?.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து
இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் இந்த வீடியோ குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அதாவது, பொதுமக்களுக்கு சமூக ஊடகங்களின் மீது உள்ள ஈர்ப்பு எத்தகைய ஆபத்தை ஏற்படுத்த கூடும் என்பதை இந்த வீடியோ மூலம் தெரிந்துக்கொள்ளலாம் என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். சமூக ஊடகங்களின் மீது உள்ள ஈர்ப்பு காரணமாக தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று கூட அந்த பெண்ணால் புரிந்துக்கொள்ல முடியவில்லை என்று மற்றொருவர் கூறியுள்ளார். அந்த சிறுவன் இல்லையென்றால் அந்த குழந்தையின் நிலை என்னவாகி இருக்கும் என்று யோசித்து கூட பார்க்க முடியவில்லை என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார். மேலும், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும், வேறு எதுவாக இருந்தாலும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்க கூடாது என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க : Viral Video : விமான குழுவை தாக்கி விமானத்தை கடத்த முயன்ற பயணி.. இணையத்தில் வைரலாகும் பரபரப்பு காட்சிகள்!
இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், தனது தங்கையை காப்பாற்றி அந்த சிறுவன் ஹீரோவாக மாறிவிட்டதாக அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.