5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Viral Video : இந்த சின்ன வயசுல இவ்வளவு நல்ல குணமா.. இணையத்தில் வைரலாகும் பள்ளி சிறுவர்களின் வீடியோ!

Students Video | சமூக ஊடகங்களின் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், எந்த ஒரு அசாத்தியமான அல்லது ஆச்சர்யமான விஷயம் என்றாலும் அது எளிதாக இணையத்தில் வைரலாகி விடுகிறது. இதற்கு முக்கிய காரணமாக சமூக ஊடகங்களின் பயன்பாடு பார்க்கப்படுகிறது.

Viral Video : இந்த சின்ன வயசுல இவ்வளவு நல்ல குணமா.. இணையத்தில் வைரலாகும் பள்ளி சிறுவர்களின் வீடியோ!
வைரல் வீடியோ
vinalin
Vinalin Sweety | Updated On: 14 Oct 2024 15:04 PM

மாற்றுத்திறனாளி மாணவருக்கு பள்ளி சிறுவர்கள் சிலர் பணிவுடன் உதவி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் அந்த குழந்தைகள் நல்ல முறையில் வளர்க்கப்பட்டிருப்பதாகவும், ஒவ்வொரு குழந்தைகளுக்கும் இதுபோன்ற நல்ல குணங்களை சொல்லி வளர்க்கப்பட வேண்டும் என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் இடம் பெற்றிருப்பது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில, மதிய உணவு இடைவேளையின் போது சாப்பிட்டு முடித்துவிட்டு பள்ளி வளாகத்தில் சில மாணவர்கள் விளையாடிக்கொண்டிருக்கின்றனர். அப்போது, அங்கு ஒரு மாற்றுத்திறனாளி மாணவர் சர்க்கர நாற்காலியில் அமர்ந்துக்கொண்டிருக்கிறார். அங்கு அவரது அருகில் நின்றுக்கொண்டிருக்கும் மாணவர், ஒரு தட்டில் தண்ணீர் பிடித்துக்கொண்டுவந்து மாற்றுத்திறனாளி மாணவரின் வாயை துடைக்கிறார். அந்த மாணவர் வாயை துடைத்த விட்டதை அடுத்து, சர்க்கர நாற்காலிக்கு பின்னால் நிற்கும் மாணவர் ஒருவர் அந்த சர்க்கர நாற்காலியை மெதுவாக நகர்த்தி அந்த மாணவரை வகுப்பரைக்கு அழைத்துச் செல்கிறார். இதை அந்த பள்ளியின் அருகில் இருந்து யாரோ வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவிட்ட நிலையில், அது வேகமாக வைரலாக தொடங்கியது.

இதையும் படிங்க : Viral Video : ஆசிரியையின் கால்களை மசாஜ் செய்த அரசு பள்ளி மாணவர்கள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

மாணவர்களுக்கு குவியும் வாழ்த்துக்கள்

இந்த வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த சிறுவயதில் தங்களுடன் படிக்கும் சக மாற்றுத்திறனாளி மாணவரை இவ்வளவு பொறுப்பாக பார்த்துக்கொள்ளும் இந்த மாணவர்கள் வருங்காலத்தில் சிறந்த பண்புகளுடன் வளருவார்கள் என்று ஒருவர் பகிர்ந்துள்ளார். இந்த சிறு வயதிலும் தன்னுடைய நண்பனின் இயலாமையை புரிந்துக்கொண்டு அவருக்கு உதவி செய்யும் இந்த குழந்தைகள் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர் என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார். இந்த குழந்தைகளை பார்த்து மற்ற குழந்தைகளும் அந்த மாணவரை மரியாதையுடன், மனதை புன்படுத்தாமலும் நடந்துக்கொள்வர். இந்த மாணவர்கள் அனைவருக்கும் எடுத்துக்காட்டாக உள்ளனர் என்று மேலும் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : Viral Video : திருமண கோலத்தில் ஸ்போர்ட்ஸ் பைக் ஓட்டிய இளம் பெண்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இணையத்தில் மிக வேகமாக வைரலாகும் வீடியோக்கள்

சமூக ஊடகங்களின் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், எந்த ஒரு அசாத்தியமான அல்லது ஆச்சர்யமான விஷயம் என்றாலும் அது எளிதாக இணையத்தில் வைரலாகி விடுகிறது. முன்பெல்லாம் வெளி மாநிலங்களிலோ அல்லது வெளி நாடுகளிலோ ஏதேனும் அசாத்தியமான அல்லது முக்கிய நிகழ்வுகள் நடந்தால் அது தெரிய வருவதற்கே ஒரு நாள் ஆகிவிடும். ஆனால் இப்போது அப்படியெல்லாம் இல்லை. சம்பவம் நடந்த சில நொடிகளிலேயே தகவல சென்று சேர்ந்து விடுகிறது. இவ்வாறு செய்தி விரைவாக சென்று சேர்வது பல வகைகளில் நன்மையாக இருக்கிறது. இவ்வாறு விரைவாக தகவல் பரிமாறப்படுவதன் மூலம் குற்ற சம்பவங்கள் எளிதான கண்டறியப்பட்டு அதற்கு விரைவில் தண்டனைகளும் வழங்கபடுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Viral Video : கனடாவில் ஓட்டல் பணியில் சேர வரிசையில் காத்திருந்த இந்திய மாணவர்கள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

சமூக ஊடகங்களில் ஒருவர் உடல் குறைபாடையும், இயலாமையையும் விமர்சனம் செய்து கிண்டலாக பதிவிட்டு வரும் இந்த காலக்க்கட்டத்தில், தங்களுடன் பயிலும் சக மாணவரின் இயலாமையை உணர்ந்து அவருக்கு உதவி செய்யும் இந்த சிறுவர்களின் வீடியோ நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest News