Viral Video : ரயிலில் தொங்கியபடி ரீல்ஸ்.. இளம் பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
Reels | இலங்கையில் ரயிலில் தொங்கியபடி வீடியோ எடுத்த இளம் பெண் ஒருவர், ரயிலில் இருந்து தவறி விழும் காட்சிகள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில், கடற்கரை ஓரம் செல்லும் ரயில் ஒன்றில் இளம் பெண் ஒருவர் வாசலில் தொங்கியபடி பயணம் செய்கிறார்
உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்கள் தங்களின் பொழுபோக்கு மற்றும் நண்பர்களுடன் தொடர்புக்கொள்வதற்காக சமூக ஊடக செயலிகளை பயன்படுத்துகின்றனர். சமூக ஊடக செயலிகள், பொதுமக்களுக்கு போதுமான பொழுதுபோக்கு அம்சங்களை வழங்குவது மட்டுமன்றி, மக்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாகவும் உள்ளன. குறிப்பாக, சமூக ஊடகங்களில் ட்ரெண்ட் ஆக வேண்டும் என்பதற்காகவே பலரும் பல வித்தியாசமான செயல்களை செய்து பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். சமூக ஊடக கணக்குகளில் லட்சங்கள் மற்றும் மில்லியன் கணக்கில் பின்தொடர்பவர்கள் இருந்தால் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளார்கள் என்ற ஒரு கருத்து மக்களிடம் உள்ளதால், ஏராளமானவர்கள் தாங்களும் பிரபலமாக வேண்டும் என்ற எண்ணத்தில் ஏதேனும் ஆபத்தான செயல்களில் மாட்டிக்கொள்கின்றனர்.
View this post on Instagram
மக்கள் மத்தியில் அதிகரிக்கும் ரீல்ஸ் மோகம்
பொதுமக்கள் மத்தியில் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட செயலிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. குறிப்பாக இன்ஸ்டாகிராமில் வரும் ரீல்ஸ்குக்கு தனி ரசிகர்கள் உண்டு. ரீல்ஸ் பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் பிரபலம் ஆகிவிடலாம் என்ற பரவலான கருத்து மக்கள் மத்தியில் உள்ளது. இதன் காரணமாக, ஏராளமான இன்ஸ்டாகிராம் பயனர்கள் ரீல்ஸ் செய்து பதிவிடுகின்றனர். பொதுவாக அனைவரும் ரீல்ஸ் செய்வதை போல் பாடல்களுக்கு நடனமாடுவது, நடிப்பது உள்ளிட்டவையை வித்தியாசமாக ஏதேனும் செய்தால் அது மிக எளிதாக வைரல் ஆகிவிடுகிறது. அதனை பொதுமக்களும் ஆழமாக நம்புகின்றனர். அதன் காரணமாக, வாகனத்தில் பயணித்துக்கொண்டு வீடியோ பதிவு செய்வது, பெரிய நீர்வீழ்ச்சிகளுக்கு சென்று வீடியோ பதிவு செய்வது, ஓடும் ரயில் முன்பு நின்றுக்கொண்டு வீடியோ பதிவு செய்வது, யானை, புலி உள்ளிட்ட ஆபத்தான மிருகங்களுடன் வீடியோ பதிவு செய்வது என ஆபத்தான செயல்களை செய்து வருகின்றனர். அந்த வகையில், ரயிலில் தொங்கியபடி, வீடியோ பதிவு செய்த இளம் பெண் ஒருவர் ரயிலில் இருந்து கீழே விழும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : குப்பை கேட்டு குழந்தையை போல் அழும் குப்பைத் தொட்டி.. இணையத்தில் வைரலாகும் கியூட் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் இளம் பெண்ணின் வீடியோ
இலங்கையில் ரயிலில் தொங்கியபடி வீடியோ எடுத்த இளம் பெண் ஒருவர், ரயிலில் இருந்து தவறி விழும் காட்சிகள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில், கடற்கரை ஓரம் செல்லும் ரயில் ஒன்றில் இளம் பெண் ஒருவர் வாசலில் தொங்கியபடி பயணம் செய்கிறார். அவர் நீண்ட நேரம் கண்களை மூடிய நிலையில், தொங்கிக்கொண்டே பயணம் செய்யும் நிலையில், ரயிலின் உள்ளே நின்று யாரோ அதை வீடியோ எடுக்கிறார். சிறிது தூரம் சென்றதும் அந்த பெண், அங்கிருந்த ஒரு மரத்தில் மோதி கீழே விழுந்துவிடுகிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Viral Video : முன்னாள் மனைவியின் உருவ பொம்மையுடன் விவாகரத்தை கொண்டாடிய நபர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
இந்த வீடியோ டெய்லி ஸ்டார் என்ற இன்ஸ்டாகிராம் பக்கதில் பகிரப்பட்டுள்ள நிலையில், அந்த பெண் தற்போது நலமுடன் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது குறித்து அந்த பதிவில், இளம் பெண் தவறி விழுந்ததை அறிந்து ரயில் நிறுத்தப்பட்டதாகவும் ரயிலில் இருந்தவர்கள் இறங்கி சென்று அந்த பெண்ணுக்கு உதவி செய்தததாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், அந்த பெண்ணுக்கு பெரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.