Viral Video : உடல் முழுவதும் காயம்.. ரத்தக்கறை படிந்த உடை.. டெல்லி சாலையில் சுற்றித்திரிந்த பெண்.. என்ன காரணம்?

Delhi | இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் பெண் ஒருவர் முகம் மற்றும் உடல் முழுவதும் காயங்களுடன் ரத்தக்கறை படித்த வெள்ளை நிற உடையில் சுற்றி திரிகிறார். அவர் பார்ப்பதற்கு வித்தியாசமாக தோற்றமளிப்பதால் அங்கிருக்கும் சிறுவர்கள் அந்த பெண்ணை கண்டு அலறி அடித்துக்கொண்டு ஓடுகின்றனர்.

Viral Video : உடல் முழுவதும் காயம்.. ரத்தக்கறை படிந்த உடை.. டெல்லி சாலையில் சுற்றித்திரிந்த பெண்.. என்ன காரணம்?

வைரல் வீடியோ

Published: 

13 Nov 2024 18:19 PM

முகம் மற்றும் உடல் முழுவது காயங்களுடன், ரத்தக்கறை படிந்த உடையுடன் டெல்லியின் சாலைகளில் உலா வந்த பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ இணையத்தில் பதிவிடப்பட்டது முதலே மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோவுக்கு நெட்டிசன்களும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த வீடியோ எங்கு பதிவு செய்யப்பட்டது, அந்த வீடியோவில் இருக்கும் பெண் யார், அவருக்கு என்ன ஆனது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் பெண் ஒருவர் முகம் மற்றும் உடல் முழுவதும் காயங்களுடன் ரத்தக்கறை படித்த வெள்ளை நிற உடையில் சுற்றி திரிகிறார். அவர் பார்ப்பதற்கு வித்தியாசமாக தோற்றமளிப்பதால் அங்கிருக்கும் சிறுவர்கள் அந்த பெண்ணை கண்டு அலறி அடித்துக்கொண்டு ஓடுகின்றனர். அதனை தொடர்ந்து அந்த பெண் அங்கிருக்கும் கடை வீதிகளில் நடந்து செல்கிறார். அங்கிருப்பவர்களும் அந்த பெண்ணை வித்தியாசமாக பார்க்கின்றனர். இந்த காட்சிகள் அனைத்தும் அந்த வீடியோவில் பதவாகியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : அந்தரங்க வீடியோ சர்ச்சை.. இணையத்தில் வைரலாகும் மினாஹில் மாலிக்கின் நடன வீடியோ!

வீடியோவின் பின்னணி என்ன?

குழந்தைகள் பார்த்து அலறி அடித்துக்கொண்டு ஓடியது போல அந்த பெண் ஒரு பேயோ, அல்லது பொதுமக்கள் பார்த்தது போல அந்த பெண்ணுக்கு எந்தவித பிரச்னையும் இல்லை. அவர் எந்த வித பிரச்னையும் இல்லாத ஒரு சாதார பெண் தான். அவர் ஹாலோவீன் பண்டிகையை கொண்டாடும் வகையில் அவ்வாறு வேடம் அணிந்து வீதிகளில் உலா வந்துள்ளார். ஹாலோவீன் என்பது மேற்கத்திய நாடுகளில் கொண்டாடப்படும் பண்டிகையாகும். குறிப்பாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இந்த பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஹாலோவீன் பண்டிகை கொண்டாடிய பெண்

இந்த பண்டிகையின்போது பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பேய் வேடம் அணிந்து, இனிப்புகளை வழங்கி கொண்டாடுவர். இந்த பண்டிகை இந்தியாவில் கொண்டாடப்படுவது இல்லை என்றாலும் மேற்கத்திய நாகரிகத்தை பின்பற்றும் சிலர் இத்தகைய பண்டிகைகளை கொண்டாடுகின்றனர். அந்த வகையில் அந்த ஹாலோவீன் பண்டிகையை கொண்டாடும் வகையில் அவ்வாறு உடை அணிந்து, மேக் அப் செய்து வீதிகளில் உலா வந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Personality Test : இளவேனில் முதல் குளிர் காலம் வரை.. உங்களுக்கு பிடித்த காலமே உங்கள் பண்புகளை சொல்லும்!

இணையத்தில் வேகமாக வைரலாகும் வீடியோக்கள்

தற்போதைய காலக்கட்டத்தில் மக்கள் மத்தியில் சமூக ஊடகங்களின் பயன்பாடு பரவலாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, எந்த ஒரு அசாத்தியமான மற்றும் ஆச்சர்யமான விஷயம் என்றாலும், அந்த விஷயம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிக வேகமாக இணையதளத்தில் வைரலாகி விடுகின்றன. அதாவது, முன்பெல்லாம் வெளி மாநிலங்களிலோ அல்லது வெளி நாடுகளிலோ ஏதேனும் அசாத்தியமான அல்லது முக்கிய நிகழ்வுகள் நடந்தால் அந்த சம்பவத்தின் தகவல் வெளியே மற்ற நாடுகளுக்கோ அல்லது மாநிலங்களுக்கு தெரிய வருவதற்கே ஒரு நாள் ஆகிவிடும்.

டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பாதிப்பு

ஆனால் இப்போது அவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டிய தேவையில்லை. காரணம், இப்போதெல்லாம் தகவல் தொழில் நுட்பத்தின் உதவியால் எந்த ஒரு சம்பவம் நடந்தாலும், அந்த சம்பவம் நடந்த சில நொடிகளிலேயே உலகம் முழுவது தகவல் சென்று சேர்ந்து விடுகிறது. அவ்வாறு செய்தி விரைவாக சென்று சேர்வது, மக்களுக்கு பல் வகைகளில் நன்மையாக இருக்கிறது. குறிப்பாக விரைவாக தகவல் பரிமாறப்படுவதன் மூலம் குற்ற சம்பவங்கள் எளிதாக கண்டறியப்பட்டு அவற்றுக்கு விரைவில் தண்டனைகளும் வழங்கப்படுகின்றன. அதே சமையம், சில சம்பவங்களில் தனிப்பட்ட தகவல்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை சீர்குலைய செய்கிறதும் குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் மெகா ஏலம் எப்போது, ​​எங்கு நடைபெறுகிறது?
ராஷ்மிகாவிற்கு புஷ்பா 2 படத்தில் சம்பளம் இவ்வளவா?
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி... யார் தெரியுதா?
மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்