Viral Video : இது புதுசா இருக்கே.. திருமணம் முடிந்து கணவன் வீட்டுக்கு செல்லும்போது உற்சாக நடனமாடிய பெண்!

Marriage | தற்போது இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவில் வழக்கத்திற்கு மாறாக உள்ளது. இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில், இளம் பெண் ஒருவர் சிவப்பு நிற உடை அணிந்து திருமண கோலத்தில் நிற்கிறார். அது பார்ப்பதற்கு அந்த பெண் திருமணம் முடிந்து கணவன் வீட்டிற்கு தயாராவது போல் இருக்கிறது.

Viral Video : இது புதுசா இருக்கே.. திருமணம் முடிந்து கணவன் வீட்டுக்கு செல்லும்போது உற்சாக நடனமாடிய பெண்!

வைரல் வீடியோ

Published: 

27 Nov 2024 21:34 PM

இணையத்தில் அவ்வப்போது சில வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருவதை வழக்கமாக கொண்டுள்ளது. அந்த வகையில் தற்போது ஒரு விடீயோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோ காண்போரை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் விதமாக அமைந்துள்ளது. காரணம், இளம் பெண் ஒருவர் திருமணம் முடிந்து மனமகன் வீட்டிற்கு செல்லும் போது, மகிழ்ச்சியாக நடனமாடும் வீடியோ தான் அது. இந்த வீடியோ பதிவிடப்பட்டது முதலே வைரலாகி வரும் நிலையில், அதற்கு பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோ குறித்த முழுமையான விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், திருமண கோலத்தில் இளம் பெண் ஒருவர் உற்சாகமாக நடனமாடுகிறார். பொதுவாக, திருமணம் என்றால் பெண்களுக்கு ஒருவிதமான பயம் அல்லது தயக்கம் ஏற்படும். காரணம், திருமணம் முடிந்தால் பெண்கள் தங்களின் கணவன் வீட்டிற்கு செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. இருப்பினும் அதற்கு தயாராக இருக்கும் பெண்கள் திருமணம் செய்துக்கொள்கின்றனர். ஆனாலும், திருமணம் முடிந்து கணவன் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றால் எந்த பெண்ணாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவ்வாறு திருமணம் முடிந்து பெண்கள் தங்களின் கணவன் வீட்டிற்கு செல்லும் நிகழ்வு, மிகவும் உணர்ச்சிகரமானதாக இருக்கும். தான் பிறந்து வளர்ந்த வீடு, தன்னை வளர்த்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் என அனைவரையும் பிரிந்து செல்கையில் பெண்கள் கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுப்பது இயல்பான ஒன்று.

இதையும் படிங்க : Viral Video : பார்லே ஜி-ல் பிரியாணி செய்த இளம் பெண்.. ஷாக் ஆன 90ஸ் கிட்ஸ்.. வைரலாகும் வீடியோ!

பிரியாவிடையை உற்சாகமாக கொண்டாடிய இளம் பெண்

ஆனால் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவில் வழக்கத்திற்கு மாறாக உள்ளது. இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில், இளம் பெண் ஒருவர் சிவப்பு நிற உடை அணிந்து திருமண கோலத்தில் நிற்கிறார். அது பார்ப்பதற்கு அந்த பெண் திருமணம் முடிந்து கணவன் வீட்டிற்கு தயாராவது போல் இருக்கிறது. ஆனால் வழக்கமாக பெண்கள் திருமணம் முடிந்து கணவன் வீட்டிற்கு செல்வது போல் அந்த பெண் இல்லை. அந்த பெண் வழக்கத்திற்கு மாறாக நடந்துக்கொள்கிறார். அதாவது, வீடியோவின் தொடக்கத்தில் தனது குடும்ப உருப்பினர்களை பிரிவது வருத்தம் தருவதை போல் அழுகிறார். அவரை, குடும்ப உறுப்பினர் ஒருவர் கட்டி அணைத்ததும் மிகவும் மகிழ்ச்சியாக நடனமாடுகிறார். அவர், நடனமாடும்போது அவரது உடைகள் கலையும் நிலையில், பெண் ஒருவர் அவற்றை சரிசெய்கிறார். ஆனால், அந்த இளம் பெண்ணோ பெரும் மகிழ்ச்சியுடன் நடனமாடுகிறார்.

இதையும் படிங்க : Viral Video : சாலைகளில் பிச்சை எடுக்கும் இன்ஜினியர்.. இணையத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய வீடியோ!

வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில் பலரும் இந்த வீடியோ குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், இந்த இளம் பெண் இதுவரை இவ்வளவு மகிழ்ச்சியாக இருந்ததில்லை என்று தோன்றுகிறது. இந்த பெண்ணின் நடனத்தை பார்த்தால் அவர் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்திருப்பார் என புரிகிறது என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். கூண்டில் இருந்து விடுபட்ட கிளியை போல அந்த பெண் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக மற்றொருவர் பதிவிட்டுள்ளார். இந்தப் பெண்ணுக்கு சுதந்திரமான வாழ்க்கை கிடைத்திருக்கிறது போல், அதனால் தான் இவ்வளவு மகிழ்ச்சியாக நடனம் ஆடுகிறார் என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கல்யாணம் கன்ஃபார்ம்... வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட போட்டோ
இணையத்தை கலக்கும் பர்த்டே பேபி அனிகாவின் போட்டோஸ்
ஹீமோகுலோபின் அதிகரிக்க இந்த 7 ஜூஸ் ட்ரை பண்ணுங்க..
இந்த பிரச்சனை இருப்பவர்கள் கத்திரிக்காயை நிச்சயம் சாப்பிடக்கூடாது.