Viral Video : திருமண கோலத்தில் ஸ்போர்ட்ஸ் பைக் ஓட்டிய இளம் பெண்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ! - Tamil News | A video of young woman riding bide in bridal attire goes viral on internet | TV9 Tamil

Viral Video : திருமண கோலத்தில் ஸ்போர்ட்ஸ் பைக் ஓட்டிய இளம் பெண்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Bike Ride | இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், இளம் பெண் ஒருவர் மணமகள் போல உடை மற்றும் நகைகளை அணிந்துக்கொண்டு வேகமாக ஸ்போர்ட்ஸ் பைக் ஓட்டுகிறார். அதை சிலர் வீடியோ எடுக்கும் நிலையில், அந்த சாலையில் காரில் செல்லும் இளைஞர்கள் சிலர் அந்த பெண்ணை ஊக்குவிக்கும் விதமாக கைகளை காட்டுகின்றனர்.

Viral Video : திருமண கோலத்தில் ஸ்போர்ட்ஸ் பைக் ஓட்டிய இளம் பெண்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

வைரல் வீடியோ

Published: 

09 Oct 2024 22:08 PM

சமீப காலமாக வித்தியாசமான முறைகளில் திருமணம் செய்வது, திருமணம் போட்டோ ஷூட் எடுப்பது ட்ரெண்ட் ஆக உள்ளது. திருமணத்திற்கு எலிகாப்டரில் வருவது, பிரம்மாண்ட கார்களில் வந்து இறங்குவது போல சிலர் மாஸாக எண்ட்ரி கொடுத்து வரும் நிலையில், மாட்டு வண்டியில் வருவது, சைக்கிளில் வருவது என வித்தியாசமாகவும் சில மணமக்கள் எண்ட்ரி கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் இளம் பெண் ஒருவர் திருமண கோலத்தில் ஸ்போர்ட்ஸ் பைக் ஓட்டும் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : கனடாவில் ஓட்டல் பணியில் சேர வரிசையில் காத்திருந்த இந்திய மாணவர்கள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் இளம் பெண்ணின் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், இளம் பெண் ஒருவர் மணமகள் போல உடை மற்றும் நகைகளை அணிந்துக்கொண்டு வேகமாக ஸ்போர்ட்ஸ் பைக் ஓட்டுகிறார். அதை சிலர் வீடியோ எடுக்கும் நிலையில், அந்த சாலையில் காரில் செல்லும் இளைஞர்கள் சிலர் அந்த பெண்ணை ஊக்குவிக்கும் விதமாக கைகளை காட்டுகின்றனர். மேலும் சிலர் திருமண கோலத்தில் ஸ்போர்ட்ஸ் பைக் ஓட்டும் பெண்ணை வியப்புடன் பார்க்கின்றனர். இவை அணைத்தும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

 

இளம் பெண்ணுக்கு இணையத்தில் குவியும் எதிர்ப்புகளும், வாழ்த்துகளும்

அந்த வீடியோவில் திருமண கோலத்தில் ஸ்போர்ட்ஸ் பைக் ஓட்டும் இளம் பெண் உண்மையாகவே திருமணம் முடிந்த கையோடு பைக் ஓட்டினாரா அல்லது வீடியோவுக்காக திருமண கோலத்தில் பைக் ஓட்டினாரா என்பது குறித்த தகவல் எதுவும் தெரியவில்லை. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவுக்கு பாராட்டுக்களும் அதே  சமயம் கடும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க : Viral Video : போரின் நடுவே நடனமாடிய காதல் ஜோடி.. வைரலாகும் வீடியோ!

நெட்டிசன்கள் கருத்து

இளம் பெண்ணின் இந்த செயலுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தாலும் சிலர் இளம் பெண்ணின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். பொதுவெளியில் இத்தகைய செயல்களை செய்வது, பொதுமக்களை பாதிக்க கூடும் என்றும், சாலையில் வண்டி ஓட்டியபடி ரீல்ஸ் எடுப்பதால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் சிலர் தலையில் ஹெல்மெட் அணியாமல் வேகமாக விபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டிய இளம் பெண் மீது நடவடிக்கை போலீசார் எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க : Viral Video : குழந்தையின் கையிலிருந்த போனை திருடிய நபர்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

இணையத்தில் மிக வேகமாக வைரலாகும் வீடியோக்கள்

சமூக ஊடகங்களின் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், எந்த ஒரு அசாத்தியமான அல்லது ஆச்சர்யமான விஷயம் என்றாலும் அது எளிதாக இணையத்தில் வைரலாகி விடுகிறது. முன்பெல்லாம் வெளி மாநிலங்களிலோ அல்லது வெளி நாடுகளிலோ ஏதேனும் அசாத்தியமான அல்லது முக்கிய நிகழ்வுகள் நடந்தால் அது தெரிய வருவதற்கே ஒரு நாள் ஆகிவிடும். ஆனால் இப்போது அப்படியெல்லாம் இல்லை. சம்பவம் நடந்த சில நொடிகளிலேயே தகவல சென்று சேர்ந்து விடுகிறது. இவ்வாறு செய்தி விரைவாக சென்று சேர்வது பல வகைகளில் நன்மையாக இருக்கிறது. இவ்வாறு விரைவாக தகவல் பரிமாறப்படுவதன் மூலம் குற்ற சம்பவங்கள் எளிதான கண்டறியப்பட்டு அதற்கு விரைவில் தண்டனைகளும் வழங்கபடுவது குறிப்பிடத்தக்கது.

மன அழுத்தம் குறைய இதை செய்யுங்கள்!
இரவு உணவை தாமதமாக சாப்பிட்டால் என்னாகும்?
செரிமானத்தை மேம்படுத்த வேண்டுமா ? அப்போ இதை பாலோ பண்ணுங்க
மோகன் லால் உடன் இருக்கும் இந்த சிறுமி யார்?
Exit mobile version