Viral Video : சாலையில் சென்ற காரை தாக்கிய இளைஞர்கள்.. அடுத்து நடந்த ட்விஸ்ட்.. வைரலாகும் வீடியோ!
Bengaluru Police | காவல்துறை வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் இரண்டு இருசக்கர வாகனங்களில், எந்த வித பாதுகாப்பும் இன்றி இளைஞர்கள் பயண்ம செய்கின்றனர். ஒருவர் பின் ஒருவராக சாலையில் சென்றுக்கொண்டிருந்த அந்த இளைஞர்கள், திடீரென சாலையின் ஓரம் சென்றுக்கொண்டிருந்த காரை கால்களால் எட்டி உதைக்கின்றனர்.
வைரல் வீடியோ : சமூக ஊடகங்களின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், எந்த ஒரு செய்தியும் மிக வேகமாக இணையத்தில் வைரலாக தொடங்கியது. வளர்ச்சியடைந்த தொசில்நுட்பத்தின் காரணமாக சிசிடிவி காட்சிகள் மூலம் குற்ற சம்பவங்களும், குற்றவாளிகளும் விரைவாக கைது செய்யப்படுகின்றனர். இதனை போல தான் இணையத்தில் வைரலான் வீடியோ மூலம் சில இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை எச்சரித்த போலீஸ், இதுபோன்ற சம்பவங்களில் பொதுமக்கள் ஈடுபடாமல் இருக்க அதை, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
சாலையில் சென்ற காரை இருசக்கர வாகனத்தில் சென்று எட்டி உதைத்த இளைஞர்கள்
காவல்துறை வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் இரண்டு இருசக்கர வாகனங்களில், எந்த வித பாதுகாப்பும் இன்றி இளைஞர்கள் பயண்ம செய்கின்றனர். ஒருவர் பின் ஒருவராக சாலையில் சென்றுக்கொண்டிருந்த அந்த இளைஞர்கள், திடீரென சாலையின் ஓரம் சென்றுக்கொண்டிருந்த காரை கால்களால் எட்டி உதைக்கின்றனர். அவர்களை தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வரும் 3 இளைஞர்கள் காரை எட்டி உதைக்க முயற்சி செய்து, காரில் இருப்பவர்களை மிரட்டுகின்றனர். இந்த காட்சிகள் அனைத்தும் பின்னால் வந்த காரில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோவில் பதிவாகியிருந்தது.
இதையும் படிங்க : Viral Video : திடீரென அலுவலகத்தில் நுழைந்த பாம்பு.. அசால்டாக பிடித்த இளம் பெண்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
உடனடி நடவடிக்கை எடுத்த போலீஸ்
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக தொடங்கியதை அடுத்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்களை பெங்களூரு போலீசார் கைது செய்தனர். அதுமட்டுமன்றி, இதுபோன்ற குற்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்காக அதை தனது எக்ஸ் தளத்திலும் காவல்துறை பதிவிட்டுள்ளது. அதில் சாலைகளில் உள்ளாசமாக இருந்தவர்கள் இப்போது காவல்நிலையத்தில் உள்ளாசமாக இருக்கின்றனர் என்று இளைஞர்கள் காவல்நிலையத்தில் இருக்கும் புகைப்படங்களை எடிட் செய்து பதிவிட்டுள்ளது.
Thrills on the roads can quickly turn into chills at the station! Stunts belong in movies, not on our streets!#WeServeWeProtect pic.twitter.com/4AUCR15r4f
— ಬೆಂಗಳೂರು ನಗರ ಪೊಲೀಸ್ BengaluruCityPolice (@BlrCityPolice) July 26, 2024
காவல்துறையினருக்கு இணையத்தில் குவியும் பாராட்டுக்கள்
காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். காவல்துறை எடுக்கும் இத்தகைய நடவடிக்கைகளால் இனி யாரும் இப்படி செய்ய மாட்டார்கள் என்று சில பயனர்கள் பதிவிட்டுள்ளனர். தலைகவசம் அணியாமல், ஒரு இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்வதே தவறு. அதிலும் இவர்கள் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளிடம் தகராறு செய்துள்ளனர். இது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று மற்றொரு பயனர் பதிவிட்டுள்ளார். தப்பு செய்பவர்கள் அதற்கான தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும் என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Viral Video : ஊபரில் போகக் கூடாது அட்டோவில் தான் வர வேண்டும்.. இளைஞரிடன் தகராறு செய்த ஆட்டோ ஓட்டுநர்கள்!