Viral Video : கைகள் இல்லை.. தன்னம்பிக்கை மட்டும்தான்.. இணையத்தை வியப்புக்குள்ளாக்கிய சோமேட்டோ ஊழியரின் வீடியோ! - Tamil News | A video of Zomato delivery partner with no hands goes viral on internet | TV9 Tamil

Viral Video : கைகள் இல்லை.. தன்னம்பிக்கை மட்டும்தான்.. இணையத்தை வியப்புக்குள்ளாக்கிய சோமேட்டோ ஊழியரின் வீடியோ!

Zomato Delivery Partner | இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், இரண்டு கைகள் இன்றி ஒருவர் சொமேட்டோவில் டெலிவரி ஊழியராக பணியாற்றும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அந்த நபருக்கு இரண்டு கைகளிலும் உள்ளங்கை இல்லை. உள்ளங்கைக்கு முன்பு இருக்கும் பகுதி வரை தான் இருக்கிறது.

Viral Video : கைகள் இல்லை.. தன்னம்பிக்கை மட்டும்தான்.. இணையத்தை வியப்புக்குள்ளாக்கிய சோமேட்டோ ஊழியரின் வீடியோ!

வைரல் வீடியோ

Updated On: 

28 Oct 2024 17:46 PM

ஆரோக்கியமான உடல்நலம் இருந்தாலும் ஏதேனும் ஒரு காரணத்தை கூறி பொருப்பை தட்டி கழிக்கும் மனிதர்களுக்கு மத்தியில், இரண்டு கைகளும் இன்றி சொமேட்டோவில் டெலிவரி ஊழியராக பணியாற்றும் நபரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரது வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள் அவரது தன்னம்பிக்கையை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த வைரல் வீடியோ குறித்த விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், இரண்டு கைகள் இன்றி ஒருவர் சொமேட்டோவில் டெலிவரி ஊழியராக பணியாற்றும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அந்த நபருக்கு இரண்டு கைகளிலும் உள்ளங்கை இல்லை. உள்ளங்கைக்கு முன்பு இருக்கும் பகுதி வரை தான் இருக்கிறது. 5 விரல்களில் ஏதேனும் ஒரு விரல் இல்லை என்றாலே பல வேலைகளை செய்ய முடியாமல் போய்விடும் என்ற அச்சம் அனைவருக்கும் இருக்கும். ஆனால், அந்த சொமேட்டோ ஊழியரோ, இரண்டு உள்ளங்கைகளும் இல்லாமல் சாதாரனமாக வாகனம் ஓட்டுகிறார்.  சோமேட்டோ ஊழியர் இரண்டு கைகள் இல்லாமல் பணி செய்வதை கவனிக்கும் நபர் அவரை பின்தொடர்ந்து செல்கிறார். அங்கு டிராஃபிக் சிக்னலில் நின்றுக்கொண்டிருக்கும் அந்த ஊழியரிடம் அந்த நபர் எதோ கேட்க அவர் சிரித்துக்கொண்டே பதில் சொல்கிறார். பிறகு சிக்னல் சரியானதும் தனது பணியில் கவனம் செலுத்தும் வகையில் அங்கிருந்து புறப்படுகிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு வெளியான சூப்பர் நியூஸ்.. ரூ. 320 கோடி நிதி ஒதுக்கீடு..

சொமேட்டோ ஊழியருக்கு இணையத்தில் குவியும் பாராட்டுகள்

இரண்டு கைகள் அற்ற அந்த சோமேட்டோ ஊழியரின் வீடியோ இணையத்தில் பதிவிடப்பட்டதை தொடர்ந்து அது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள், அந்த நபரின் தன்நம்பிக்கையை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். இரண்டு கைகள் மற்றும் இரண்டு கால்கள் இருந்தால் தான் அந்த மனிதன் முழுமையடைகிறான் என்று இல்லை. தன்நம்பிக்கை இருந்தால் போதும் கை, கால்கள் இல்லாமலும் வாழ முடியும் என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். உடல் ஊணத்தால் தன்னால் இதை செய்ய முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் வீட்டிலே அடைந்து கிடக்கும் பல ஆயிரம் பேருக்கு இந்த நபரின் வீடியோ ஒரு நம்பிக்கையை கொடுக்கும் என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார். தன்நம்பிக்கையை விட அழகானது எதுவிமில்லை, அது நம்மை உயரத்திற்கு கொண்டு செல்லும், இந்த ஊழியரும் விரைவில் உயரத்தை எட்ட எனது வாழ்த்துக்கள் என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க : Tamilnadu Weather Alert: வரும் 1 ஆம் தேதி 8 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை.. எங்கே தெரியுமா?

இணையத்தில் மிக வேகமாக வைராகும் வீடியோக்கள்

தற்போதைய காலக்கட்டத்தில் சமூக ஊடகங்களின் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், எந்த ஒரு அசாத்தியமான அல்லது ஆச்சர்யமான விஷயம் என்றாலும் அது எளிதாக இணையத்தில் வைரலாகி விடுகிறது. முன்பெல்லாம் வெளி மாநிலங்களிலோ அல்லது வெளி நாடுகளிலோ ஏதேனும் அசாத்தியமான அல்லது முக்கிய நிகழ்வுகள் நடந்தால் அது மற்ற நாடுகளுக்கு அல்லது மாநிலங்களுக்கு தெரிய வருவதற்கே ஒரு நாள் ஆகிவிடும். ஆனால் இப்போது அப்படியெல்லாம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. சம்பவம் நடந்த சில நொடிகளிலேயே உலகம் முழுவதும் தகவல் சென்று சேர்ந்து விடுகிறது. இவ்வாறு செய்தி விரைவாக சென்று சேர்வது பல வகைகளில் நன்மையாக இருக்கிறது. குறிப்பாக விரைவாக தகவல் பரிமாறப்படுவதன் மூலம் குற்ற சம்பவங்கள் எளிதாக கண்டறியப்பட்டு அதற்கு விரைவில் தண்டனைகளும் வழங்கபடுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : November Changes : கேஸ் சிலிண்டர் முதல் தொலைத்தொடர்பு வரை.. நவம்பர் மாதம் வரவுள்ள அதிரடி மாற்றங்கள்!

இந்த நிலையில் இரண்டு கைகள் இல்லாமல் சொமேட்டோவில் டெலிவரி ஊழியராக பணியாற்றும் நபரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

நடிகை சினேகாவிற்கு பிடித்த நடிகர் இவர்தான்!
மாஸ் ஹீரோதான் இந்தப் பையன்... யார் தெரியுதா?
தனிப்பட்ட வளர்ச்சிக்கு தேவையான முக்கிய விஷயங்கள்!
சகோதரியிடம் உடன்பிறப்புகள் கற்றுக்கொள்ளும் முக்கிய விஷயங்கள்!