Viral Video : மாணவர்கள் மீது இடிந்து விழுந்த வகுப்பறை சுவர்.. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ! - Tamil News | A viral video of classroom wall collapsed on students shook the internet | TV9 Tamil

Viral Video : மாணவர்கள் மீது இடிந்து விழுந்த வகுப்பறை சுவர்.. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Published: 

20 Jul 2024 16:00 PM

Wall Collapsed CCTV : குஜராத்தில் மாணவர்கள் அமர்ந்திருந்த வகுப்பறையின் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் வடோடரா பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், நேற்று (ஜூலை 19) வகுப்பறையின் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

Viral Video : மாணவர்கள் மீது இடிந்து விழுந்த வகுப்பறை சுவர்.. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

விபத்து காட்சி

Follow Us On

பள்ளி வகுப்பறை சுவர் இடிந்து விபத்து : குஜராத்தில் மாணவர்கள் அமர்ந்திருந்த வகுப்பறையின் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் வடோடரா பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், நேற்று (ஜூலை 19) வகுப்பறையின் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த மாணவர்கள் சிகிச்சைகாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்த பள்ளி வகுப்பறை சுவர்

இந்த விபத்து குறித்து தெரிவித்த பள்ளியின் தலைமை ஆசிரியர், இந்த சம்பவம் வெள்ளி கிழமை மதியம் 12.30 மணிக்கு நடைபெற்றது. எஙக்ளுக்கு பயஙக்ர சத்தம் கேட்டது. இதனால் நாங்கள் அங்கு சென்று பார்த்தோம். அப்போது ஒரு மாணவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. உடனடியாக நாங்கள் மற்ற மாணவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தினோம். என்று பள்ளியின் தலைமை ஆசிரியர் ரூபல் ஷா தெரிவித்துள்ளர். மேலும் வகுப்பறையின் சுவர் அருகில் இருந்த மாணவர்களின் சைக்கிள் பார்கிங் மீது விழுந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறை

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறை பள்ளிக்கு விரைந்து வந்து மாணவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த 7 மாணவர்கள் சிறு காயங்களுடன் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க : Viral Video : விமான நிலையத்தில் மாரடைப்பு வந்து மயங்கி விழுந்த முதியவர்.. அடுத்து நடந்தது என்ன.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் சிசிடிவி காட்சி

இந்த சம்பவம் குறித்து வைரலாகும் சிசிடிவி காட்சியில், ஒரு வகுப்பறையில் மாணவர்கள்  அமர்ந்துக்கொண்டு உணவருந்துகின்றனர். அப்போது எதிர்பாராத விதமாக வகுப்பறையின் சுவர் இடிந்து விழுகிறது. இதன் காரணமாக சுவரை ஒட்டி அமர்ந்திருந்த மாணவர்களும் கீழே விழுகின்றனர். இதனை கண்டு அங்கிருந்த மாணவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடும் காட்சிகளும் அதில் பதிவாகியிருந்தன.

மாணவியின் தலையில் விழுந்த மின்விசிறி

இதேபோல கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய பிரதேச மாநிலம், செஹோர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், மாணவியின் தலையில் மின்விசிறி விழுந்த விபத்துக்குள்ளானது. இந்த சம்பத்தில் சிசிடிவி காட்சிகள் வெளியான சர்ச்சையான நிலையில், தற்போது மாணவர்கள் அமர்ந்திருந்த வகுப்பறை இடிந்து விழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:  Viral Video : வகுப்பறையில் மாணவியின் தலைமீது விழுந்த மின்விசிறி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ.. வலுக்கும் கண்டனம்!

Related Stories
Viral Video : ஓடும் பைக்கில் ரொமான்ஸ் செய்த ஜோடி.. வலுக்கும் கண்டம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
Viral Video : பாதுகாப்பின் உச்சம்.. மகளின் தலையில் சிசிடிவி கேரமா பொருத்திய தந்தை.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
Viral Video : ஆட்டோ ரைடை கேன்சல் செய்ததால் ஆத்திரம்.. கல்லூரி மாணவியின் கன்னத்தில் அறைந்த ஓலா டிரைவர்.. அதிர்ச்சி சம்பவம்!
Viral Video : ஆற்றை கடக்கும்போது ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு.. கார் மீது அமர்ந்துக்கொண்டு ஜாலியாக பேசிய தம்பதி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
Viral Video : தாயை காப்பாற்ற ஆட்டோவையே தூக்கிய சிறுமி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
Viral Video : தாசில்தார் வாகனத்தை தீ வைத்து கொளுத்திய இளைஞர்.. அதிர்ச்சி சம்பவம்!
இந்த உணவுகளை ஒருப்போதும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாது..!
தினமும் காலையில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வாரி வழங்கும் பூண்டு..!
நுரையீரலை பாதுகாக்க உதவும் உணவுகள்!
Exit mobile version