Viral Video : கனடாவில் ஓட்டல் பணியில் சேர வரிசையில் காத்திருந்த இந்திய மாணவர்கள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
Canada | இந்த சம்பவம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டிருந்த வீடியோ ஒன்றில் "பிராம்டனில் உள்ள ஒரு உணவகத்தில் பணியாளருக்கான (Waiters) தேர்வு நடைபெற்றது. இந்த நேர்காணலில் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்திய மாணவர்கள்.
கனடா உணவகத்தில் பணிக்கு சேர ஏராளமான இந்திய மாணவர்கள் வரிசையில் காத்திருக்கும் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலானது. ஓட்டல் பணியாளர் வேலைக்கு ஆயிரக்காணக்கான மாணவர்கள் வரிசையில் காத்திருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. இந்த வீடியோ வெளியாகி இணையத்தில் பேசுபொருளாக மாறிய நிலையில், உயர்கல்வி பயில வெளிநாடுகளுக்கு செல்லும் மாணவர்களின் வேலைவாய்ப்பு குறித்து கவலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க : Viral Video : காட்டில் பதிவு செய்யப்பட்ட “Big Foot” வீடியோ? அதில் இருக்கும் ராட்சத விலங்கு உண்மையானதா?
இணையத்தில் வைரலான வீடியோ
இந்த சம்பவம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டிருந்த வீடியோ ஒன்றில் “பிராம்டனில் உள்ள ஒரு உணவகத்தில் ஓட்டல் பணியாளருக்கான (Waiters) தேர்வு நடைபெற்றது. இந்த நேர்காணலில் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்திய மாணவர்கள். இது கனடாவில் உள்ள வேலைவாய்ப்பின்மையையும், கனடாவில் வாழ்வாதாரம் எவ்வளவு கடுமையாக உள்ளது என்பதையும், பலருக்கு வாழ்கையே நரகமாக இருப்பதையும் காட்டுகிறது. கனடாவுக்கு பல கனவுகளோடு வரும் மாணவர்களுக்கு தங்களது எதிர்காலம் குறித்த சுயபரிசோதனை இருக்க வேண்டும் என்றும் அதில் பதிவிடப்பட்டுள்ளது.
Scary scenes from Canada as 3000 students (mostly Indian) line up for waiter & servant job after an advertisement by a new restaurant opening in Brampton.
— The NewsWale (@TheNewswale) October 3, 2024
இது குறித்து நேர்காணலில் பங்கேற்க வரிசையில் காத்திருந்த இந்திய மாணவர் ஒருவர் கூறுகையில், நான் இங்கு மதியம் வந்தேன் ஆனால் மாலை வரை இங்கேயே தான் இருக்கிறேன். இங்கு என்னை போல் ஏராளமானவர்கள் வரிசையில் காத்துக்கொண்டிருக்கின்றனர். நாங்கள் எங்கள் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்பித்துள்ளோம். நேர்காணலுக்காக நேரில வருமாறு கூறியிருந்தார்கள். ஆனால், இங்கு நேர்காணல் நடப்பது போல் தெரியவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : Viral Video : பள்ளி கட்டணம் செலுத்தாத மாணவர்கள்.. பள்ளிக்கு வெளியே அமர வைத்த நிர்வாகம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவத் தொடங்கிய நிலையில், பலரும் இது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ கனடாவில் வேலையின்மை வெளிச்சம் போட்டு காட்டுவதாக ஒருவர் குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர், வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக வெளிநாடுகளுக்கு படிக்க செல்லும் மாணவர்கள், உணவகங்களில் ஊழியர்களாக பணியாற்ற விரும்புகின்றானர் என்று பதிவிட்டுள்ளார். வெளிநாடுகளில் படிக்க செல்லும் மாணவர்கள், தங்களின் திறனை வளர்த்துக்கொண்டு அதில் எப்படி உயர வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும். கல்வி அறிவு இல்லாதவர்கள் கூட உணவகங்களில் பணி செய்வார்கள், நாம் என்னவாக வாழ வேண்டும் என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Viral Video : ரயிலின் அப்பர் பர்த்தில் இருந்து எட்டி பார்த்த பாம்பு.. பதறிப்போன பயணிகள்.. அடுத்து நடந்தது என்ன?
இணையத்தில் வைரலாகும் வீடியோக்கள்
சமூக ஊடகங்களின் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், எந்த ஒரு அசாத்தியமான அல்லது ஆச்சர்யமான விஷயம் என்றாலும் அது எளிதாக இணையத்தில் வைரலாகி விடுகிறது. முன்பெல்லாம் வெளி மாநிலங்களிலோ அல்லது வெளி நாடுகளிலோ ஏதேனும் அசாத்தியமான அல்லது முக்கிய நிகழ்வுகள் நடந்தால் அது தெரிய வருவதற்கே ஒரு நாள் ஆகிவிடும். ஆனால் இப்போது அப்படியெல்லாம் இல்லை. சம்பவம் நடந்த சில நொடிகளிலேயே தகவல சென்று சேர்ந்து விடுகிறது. இவ்வாறு செய்தி விரைவாக சென்று சேர்வது பல வகைகளில் நன்மையாக இருக்கிறது. இவ்வாறு விரைவாக தகவல் பரிமாறப்படுவதன் மூலம் குற்ற சம்பவங்கள் எளிதான கண்டறியப்பட்டு அதற்கு விரைவில் தண்டனைகளும் வழங்கபடுவது குறிப்பிடத்தக்கது.