Viral Video: விபத்தில் சிக்கிய இந்திய போர் விமானம்.. நூலிழையில் உயிர்தப்பிய விமானிகள்.. திக்திக் வீடியோ!
விமான விபத்து: உத்தர பிரசேத மாநிலம் ஆக்ராவில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்தில் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் இந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. ஆனால், இதில் பயணித்த இரண்டு விமானிகள் பாராசூட் உதவியுடன விமானத்தில் இருந்து குதித்து உயர் தப்பினர்.
உத்தர பிரசேத மாநிலம் ஆக்ராவில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்தில் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் இந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. ஆனால், இதில் பயணித்த இரண்டு விமானிகள் பாராசூட் உதவியுடன விமானத்தில் இருந்து குதித்து உயர் தப்பினர். இந்தியாவில் போர் விமானங்கள் விபத்தில் சிக்குவது அடிக்கடி நிகழ்கிறது. அண்மையில் பயிற்சியின்போது இந்திய போர் விமானங்கள் ஏகப்பட்ட விபத்துகளை சந்தித்துள்ளன. ஆனால், பெரும்பாலான நேரங்களில் விமானிங்கள் உயிர் தப்பித்துள்ளனர்.
விபத்தில் சிக்கிய இந்திய போர் விமானம்
இந்த நிலையில், இதுபோன்ற சம்பவம் ஒன்று உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது. அதாவது, உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் விமானப்படையின் மிக் 29 விமானம் விபத்தில் சிக்கியது. பயிற்சியின்போது விமானப்படையின் பிரபலமான மிக் 29 விமானம் வானத்தில் இருந்து கீழே விழுந்து நொறுகியது.
விமானம் ஆக்ராவில் விமானப்படைக்கு சொந்தமான மிக் 29 விமானம் ஒன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அதில் இரண்டு விமானிகள் இருந்துள்ளனர். அப்போது, பயிற்சி மேற்கொண்டு இருந்தபோது, விமானத்தில் இருந்து விமானம் தீப்பற்றியது.
Scary 🚨
Last few seconds before the MIG-29 Crashed in Agra today 🔥
Thank God the Pilot ejected safely
Another day, another crash! pic.twitter.com/I5tI6nPLfA
— Deepanshu Singh (@deepanshuS27) November 4, 2024
Also Read : ”அதிக லக்கேஜ் ஏன் ஏத்துற?” பயணி கன்னத்தில் அறைந்த நடத்துனர்.. அதிர்ச்சி வீடியோ!
நூலிழையில் உயிர்தப்பிய விமானிகள்
இதனை அறிந்த விமானிகள் தப்பிக்க முடிவு எடுத்து, பாராசூட் மூலம் சாதுர்யமாக உயர் தப்பினர். விமானத்தில் இருந்து குதித்த விமானிகள் 2 பேரும் சம்பவ இடத்திற்கு இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதன் பின், விமானமும் தீப்பற்றியப்படி தரையில் விழுந்து நொறுங்கியது. இதனை பார்த்து அங்கிருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்னதர். உடனே இதுகுறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விமானத்தில் ஏரிந்த தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. மேலும், விமானி பாராசூட் மூலம் உயிர் தப்பிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Also Read : சிறுவனை பலி வாங்கிய சைக்கிள் சாகசம்.. அதிர்ச்சியடைய வைக்கும் காட்சிகள்!
தற்போதைய காலக்கட்டத்தில் சமூக ஊடகங்களின் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது. இதன் மூலம், எந்த ஒரு முக்கிய நிகழ்வுகளும் மிக சுலபமாக சமூக வளைத்தளங்களில் வைரலாகி விடுகிறது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முன்பு, வெளி மாநிலங்களிலோ அல்லது வெளி நாடுகளிலோ ஏதேனும் முக்கிய நிகழ்வுகள் நடந்தால் அந்த தகவல் வெளியே தெரிய வருவதற்கே ஒரு நாள் ஆகிவிடும்.
Scary 🚨
Last few seconds before the MIG-29 Crashed in Agra today 🔥
Thank God the Pilot ejected safely
Another day, another crash! pic.twitter.com/I5tI6nPLfA
— Deepanshu Singh (@deepanshuS27) November 4, 2024
ஆனால் தற்போது அவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. காரணம், இப்போதெல்லாம் தகவல் தொழில்நுட்பத்தின் முலம் எந்த ஒரு சம்பவம் நடந்தாலும், அது நடந்த சில நொடிகளிலேயே உலகம் முழுவதும் தகவல் சென்று சேர்ந்து விடும். இதுபோல செய்தி விரைவாக சென்று சேர்வது பல வகைகளில் நன்மையாக இருக்கிறது. அந்த வகையில் தற்போது உத்தர பிரசேதத்தில் நடந்த விமான விபத்து சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.