Viral Video : அதிகாரிகள் முன்பு சீருடையை கழட்டி எறிந்த காவலர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
SP Explanation | இந்த வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வரும் நிலையில், அது குறித்து அந்த மாவட்ட எஸ்.பி விளக்கமளித்துள்ளார். அதுகுறித்து பேசிய அவர், இந்த செயலில் ஈடுபட்டதற்காக அந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் கண்டிக்கப்பட்டார். அவருக்கு கவுன்சிலர் உடன் நில தகராறும் உடல்நல பிரச்னைகளும் இருந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது என்று தெரிவித்துள்ளார்.
இணையத்தில் வைரலாகும் வீடியோ : காவலர் ஒருவர் உயர் அதிகாரிகள் முன்பு ஆத்திரத்தில் சீருடையை கழட்டி எறியும் சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பாஜக நிர்வாகி மிரட்டியதால் காவலர் சீருடையை கழட்டி எறிந்ததாக கூறப்படும் நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அந்த வீடியோ எங்கு பதிவு செய்யப்பட்டது, காவலரை மிரட்டியது யார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : Atishi Marlena : டெல்லியின் புதிய முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார் அதிஷி மெர்லினா.. வெளியான முக்கிய தகவல்!
7 மாதங்கள் கழித்து இணையத்தில் வைரலாகும் சிசிடிவி
மத்திய பிரதேச காவலர் ஒருவர் உயர் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் முன்னிலையில் ஆக்ரோஷமாக சீருடையை கழட்டி எறியும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக நிர்வாகி மிரட்டியதால் மனமுடைந்த காவலர் இவ்வாறு செய்ததாகவும், இந்த சம்பவம் கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், தற்போது 7 மாதங்கள் கழித்து இணையத்தில் வைரலாகி வருவதாகவும் கூறப்படுகிறது.
अक्सर आपने फ़िल्मों में सुना होगा जब नेता पुलिस को कहते है तेरी वर्दी उतरवा दूँगा
एमपी के सिंगरौली में भी ऐसा ही हुआ
बीजेपी नेता ने एक मामले को लेकर ने पुलिस ASI से कहा “वर्दी उतरवा देंगे”
जवाब में ASI ने अपना आपा खो दिया और वर्दी फाड़ दी #MadhyaPradesh #Police pic.twitter.com/AqJRsgk5yJ
— Shubham Gupta (@shubhjournalist) September 16, 2024
பாஜக பிரமுகர் மிரட்டியதால் சீருடையை கழட்டி எறிந்த காவலர்
கோட்வாலி காவல் நிலையத்திற்கு உட்பட்ட குடியிருப்பு பகுதியில் சாக்கடை அமைக்கும் பணியின் போது துணை காவல் கண்காணிப்பாளர் வினோத் மிஸ்ராவுக்கும் உள்ளூர் காரர்களுக்கும் இடையே பிரச்னை உருவாகியுள்ளது. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் காவல்நிலையத்தில் ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்துள்ளனர். அப்போது அந்த பகுதி கவுன்சிலரின் கணவரும் பாஜக பிரமுகரும் ஆன அர்ஜுன் குப்தா என்பவர் காவலர் வினோத் மிஸ்ராவை மிரட்டியுள்ளார். மிரட்டியது மட்டுமன்றி சீருடையை கழட்டும்படி செய்துவிடுவேன் என்றும் அந்த பிரமுகர் தொடர்ந்து கூரியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காவலர் அனைவரது முன்னிலையிலும் தனது சீருடையை கழட்டி எறிந்துள்ளார். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : Tamilnadu Weather Alert: வறுத்தெடுக்கும் வெயில்.. இன்னும் இரண்டு நாட்களுக்கு தொடரும்… வானிலை மையம் தகவல்!
வைரல் வீடியோ குறித்து விளக்கமளித்த எஸ்.பி
இந்த வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வரும் நிலையில், அது குறித்து அந்த மாவட்ட எஸ்.பி விளக்கமளித்துள்ளார். அதுகுறித்து பேசிய அவர், இந்த செயலில் ஈடுபட்டதற்காக அந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் கண்டிக்கப்பட்டார். அவருக்கு கவுன்சிலர் உடன் நில தகராறும் உடல்நல பிரச்னைகளும் இருந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது என்று தெரிவித்துள்ளார். மேலும் அந்த வீடியோ 7 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சம்பவத்தின் வீடியோ என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
இதையும் படிங்க : India Vs Bangladesh: அஸ்வின் கைகளில் காத்திருக்கும் 5 சாதனைகள்.. வங்கதேச டெஸ்ட் தொடரில் வரலாறு படைப்பாரா?
காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம்
இந்த வீடியோ அரசியல் வட்டாரத்திலும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை குறித்து காங்கிரஸ் கட்சி பாஜக மீது கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளது. இந்த வீடியோ குறித்து மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், இது அதிகார துஷ்பிரயோகம் என்று பதிவிட்டுள்ளது. எப்படி பாஜக கவுன்சிலரின் கணவர், ஒரு காவல்துறை அதிகாரியைஎப்படி மிரட்டுகிறார் என பாருங்கள். மத்திய பிரதேசத்தில் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் அரசியல் அழுத்தத்தில் உள்ளனர் என்று பதிவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.