5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

BSNL : அதிரடி காட்டிய பிஎஸ்என்எல்.. அதிர்ச்சியில் உறைந்த ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள்.. ஏன் தெரியுமா?

Network Towers | அரசின் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது 4ஜி நெட்வொர்க் சேவையை விரிவு படுத்தும் வகையில் புதியதாக 50,000 நெட்வொர்க் டவர்களை நிறுவி உள்ளது. அதாவது நெட்வொர் வசதி இல்லாத இடங்களில் டவர்களை நிறுவியுள்ளது.

BSNL : அதிரடி காட்டிய பிஎஸ்என்எல்.. அதிர்ச்சியில் உறைந்த ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள்.. ஏன் தெரியுமா?
மாதிரி புகைப்படம்
vinalin
Vinalin Sweety | Updated On: 04 Nov 2024 14:43 PM

அரசின் பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி நெட்வொர்க் சேவையை விரிவு படுத்துவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது. குறிப்பாக இதற்கு முன் இணைய நெட்வொர் கிடைக்காத பகுதிகளுக்கு, நெட்வொர்க் சேவை வழங்க தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், புதியதாக 50,000 4ஜி நெட்வொர்க டவர்களை நாடு முழுவதும் நிறுவியுள்ளது. ஏற்கனவே பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் சுமார் 41,000 நெட்வொர்க் டவர்கள் உள்ள நிலையில், தற்போது புதியதாக 50,000 டவர்களை நிறுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Tech Tips: இனி வெளிநாடுகள் செல்லும்போது ஃபோன் பே, கூகுள்‌பே ஆகியவற்ற பயன்படுத்தலாம்…

பிளான்களின் விலைகளை அதிரடியாக உயர்த்திய நிறுவனங்கள்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏர்டெல் ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களின் ப்ரீ பெய்டு மட்டும் போஸ்ட் பெய்டு ரீச்சார்ஜ் திட்டங்களின் விலையை அதிரடியாக உயர்த்தின. அதுமட்டுமன்றி ஜியோ நிறுவனம் தனது 5ஜி சேவை பயன்படுத்துவதற்கு சில கட்டுப்பாடுகளையும் விதித்தது.  இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அரசின் பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு தங்கள் மொபைல் எண்களை மாற்றத் தொடங்கினர். குறைந்த நாட்களில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் மொபைல் எண்களை அரசின் பிஎஸ்என்எல் தொலைத்தொடர் நிறுவனத்திற்கு மாற்ற விண்ணப்பித்தை எடுத்து ஏர்டெல் ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் கடும் அதிர்ச்சி அடைந்தன.

இதையும் படிங்க : YouTube: புதிய மாற்றங்களை செய்யப் போகும் யூடியூப்… என்ன மாற்றம் என்று தெரிந்து கொள்ளுங்கள்…

அசத்தல் சலுகைகளை வழங்கும் பிஎஸ்என்எல்

இந்த நிலையில் இழந்த தங்களது பயனர்களை மீட்கும் விதமாக பல புதிய சிறப்பு அம்சங்களையும் சிறப்பு பிளான்களையும் வெளியிட்டு வருகின்றன. இதேபோல பிஎஸ்என்எல் நிறுவனமும் பல சிறப்பு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக குறைந்த விலைக்கு ரீச்சார்ஜ் திட்டம் வழங்குவது, குறைந்த விலைக்கு அதிக டேட்டா வழங்குவது என பல சேவைகளை வழங்கி வருகிறது. இதன் காரணமாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பயணர்களின் எண்ணிக்கை கனிசமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் தான் புதிய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது.

இதையும் படிங்க : WhatsApp : வாட்ஸ்அப்பில் இனி எதுவுமே மிஸ் ஆகாது.. விரைவில் புதிய அம்சத்தை அறிமுகம்!

50,000 நெட்வொர்க் டவர்களை நிறுவிய பிஎஸ்என்எல்

அரசின் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது 4ஜி நெட்வொர்க் சேவையை விரிவு படுத்தும் வகையில் புதியதாக 50,000 நெட்வொர்க் டவர்களை நிறுவி உள்ளது. அதாவது நெட்வொர்க் வசதி இல்லாத இடங்களில் டவர்களை நிறுவியுள்ளது. குறிப்பாக ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களின் டவர்கள் இல்லாத இடங்களில் நிறுவி உள்ளது. இதன் மூலம் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தொலைத்தொடர்பு சேவை விரிவடையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : Instagram Reels : இன்ஸ்டாகிராமில் ஆடியோ உடன் ரீல்ஸ் டவுன்லோடு செய்வது எப்படி.. சிம்பிள் ஸ்டெப்ஸ் இதோ!

1,00,000 டவர்கள் நிறுவ இலக்கு

தற்போது 95 சதவீத இந்திய பகுதிகளில் நெட்வொர்க் சேவை வழங்கப்படுகிறது. ஆனால், நெட்வொர்க் வசதி இல்லாத கடைக்கோடி கிராமங்களுக்கு நெட்வொர்க் வசதியை கொண்டு சேர்க்க பிஎஸ்என்எல் நிறுவனம் முனைப்பு காட்டி வருகிறது. குறிப்பாக 4ஜி சேவையை அறிமுகம் செய்தது முதலே பிஎஸ்என்எல் கடும் போட்டியில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையி, அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் சுமார் 1 லட்சம் நெட்வொர்க் டவர்களை நிறுவ பிஎஸ்என்எல் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Smartphone : ஸ்மார்ட்போனை எப்போது மாற்ற வேண்டும்.. இத கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!

2 மாதங்களில் 5.5 மில்லியன் புதிய பயனர்கள்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த அதிரடி நடவடிக்கையால், ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களின் பயனர்களின் எண்ணிக்கை குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் கடும் குழப்பத்தில் உள்ளனர். ஏற்கனவே வெறும் 2 மாதங்களில் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 5.5 மில்லியன் பயனர்கள் கிடைத்துள்ள நிலையில், இந்த நடவடிக்கை பயனர்களின் எண்ணிக்கையை மேலும் விரிவடைய செய்யலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

Latest News