Optical Illusion : V-க்குள் மறைந்திருக்கும் W-வை கண்டுபிடிக்க வேண்டும்..வெறும் 10 விநாடிகள் தான் அவகாசம்!
Viral Image | தற்போது இணையத்தில் ஒரு ஒளியியல் மாயை புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், சுமார் 100க்கும் மேற்பட்ட V என்ற எழுத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால், அந்த புகைப்படத்தில் ஒரே ஒரு W என்ற எழுத்து ஒளிந்துள்ளதாம். அதை கண்டுபிடிக்க வேண்டியதுதான் இந்த ஒளியியல் மாயை புகைப்படத்தின் புதிர்.
இணையத்தில் அவ்வப்போது சில ஒளியியல் மாயை புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில், தற்போது ஒரு ஒளியியல் மாயை புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது, V என்ற எழுத்துக்கள் நிறைந்துள்ள ஒரு புகைப்படத்தில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் W என்ற எழுத்து மறைந்துள்ளதாம். அந்த எழுத்தை வெறும் 10 விநாடிகளுக்குள் கண்டுபிடிப்பவர்களின் கண் பார்வை மற்றும் மூளையின் செயல் திறன் மிகவும் கூர்மையாக இருக்கும் என கூறப்படுகிறது. நீங்களும் உங்கள் மூளையின் செயல்திறன் கூர்மையாக உள்ளதா என்பதை இந்த ஒளியியல் மாயை புகைப்படத்தை வைத்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
இதையும் படிங்க : Optical Illusion : அணில் கூட்டத்தில் மறைந்திருக்கும் எலியை கண்டுபிடிக்க முடியுமா.. 10 நொடிகள் தான் அவகாசம்!
ஒளியியல் மாயை புகைப்படங்கள் என்றால் என்ன?
ஒளியியல் மாயை என்பது ஒரு வகையான புதிர் விளையாட்டு ஆகும். அதாவது, ஒரு புகைப்படத்தில் பல்வேறு உருவங்கள் அடங்கியிருக்கும். அத்தகைய ஒளியியல் மாயை புகைப்படங்களை முதலில் பார்ப்பதற்கு ஏதேனும் ஒரு உருவம் மட்டுமே கண்ணுக்கு தெரியும். ஆனால், அந்த புகைப்படத்தை நன்கு உற்று கவனிக்கும்போது தான் அதில் பல உருவங்கள் இடம் பெற்றிருப்பது தெரிய வரும். இவ்வாறு ஒவ்வொருவரின் கண்களுக்கும் ஒரு வகையான உருவங்கள் தெரிவதற்கு பின்னால் ஒரு உளவியல் காரணம் உள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமன்றி, ஒளியியல் மாயை புகைப்படத்தில் ஒருவருக்கு முதலில் தெரியும் உருவத்தை வைத்தே அந்த நபரின் ஆளுமை பண்பையே கூறலாம் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Optical Illusion : இரவில் ரகசியமாக வெளியே சென்று வந்த குழந்தை யார்.. வெறும் 5 நொடிகளில் உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?
இணையத்தில் வைரலாகும் ஒளியியல் மாயை புகைப்படம்
தற்போது இணையத்தில் ஒரு ஒளியியல் மாயை புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், சுமார் 100க்கும் மேற்பட்ட V என்ற எழுத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால், அந்த புகைப்படத்தில் ஒரே ஒரு W என்ற எழுத்து ஒளிந்துள்ளதாம். அதை கண்டுபிடிக்க வேண்டியதுதான் இந்த ஒளியியல் மாயை புகைப்படத்தின் புதிர். இந்த புகைப்படத்தில் மறைந்திருக்கும் W-வை கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபம் அல்ல. காரணம், V மற்றும் W ஆகிய இரண்டு எழுத்துக்களுமே ஒரு வடிவம் கொண்டவை. அதனால், V-களுக்கு மத்தியில் மறைந்திருக்கும் W-வை கண்டு பிடிப்பது சற்றும் சவாலானதாக தான் இருக்கும். ஆனால், அறிவுத் திறனை பயன்படுத்தி புதிரை தேடும் பட்சத்தில் உங்களுக்கு மிக எளிதில் அதற்கான விடை கிடைத்துவிடும்.
இதையும் படிங்க : Optical Illusion : கூர்மையான பார்வை கொண்டவரா நீங்கள்.. படத்தில் மறைந்திருக்கும் ஆமையை 5 விநாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?
புதிருக்கான விடையை கண்டுபிடிக்க முடியவில்லை
இந்த ஒளியியல் மாயை புகைப்படத்தின் புதிரை உங்களால் 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியவில்லையா. கவலை வேண்டாம், அதற்கான விடையை நாங்களே உங்களுக்கான சொல்கிறோம். புகைப்படத்தில் மொத்தம் 7 வரிகளில் V என்ற எழுத்துக்கள் இடம் பெற்றுள்ளது. அதில் 4வது வரிசையின் வளது பக்கத்தில் தான் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய W எழுத்து உள்ளது. இந்த புதிர் சற்று சவாலானது தான். காரணம் புகைப்படத்தில் இருக்கும் அனைத்து எழுத்துகளும் ஒரே மாதிரியான தோற்றத்தை கொண்டுள்ளன. இந்த நிலையில், இந்த ஒளியியல் மாயை புகைப்படத்தின் புதிரை சொல்லியபடியே நீங்கள் வெறும் 10 விநாடிகளுக்குள் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் உங்களது மூளையின் செயல்திறன் மிகவும் கூர்மையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.