5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Optical Illusion : படத்தில் மறைந்திருக்கும் சிங்கங்கள்.. 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?

Find the Lions | தற்போது இணையத்தில் வைரலாகி வரும் இந்த ஒளியியல் புகைப்படத்தில் காட்டுக்குள் இரண்டு சிங்கங்கள் தண்ணீர் குடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஆனால், இந்த புகைப்படத்தில் மேலும் இரண்டு சிங்கங்கள் உள்ளன என கூறப்படுகிறது.

Optical Illusion : படத்தில் மறைந்திருக்கும் சிங்கங்கள்.. 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?
ஒளியியல் மாயை
vinalin
Vinalin Sweety | Published: 14 Dec 2024 16:42 PM

ஏதேனும் வித்தியாசமான விஷயங்கள் என்றாலே அது இணையத்தில் மிக வேகமாக வைரலாகிவிடும். அந்த வகையில், ஒரே புகைப்படத்தில் பல புதிர்கள் மற்றும் உருவங்களை கொண்ட ஒளியியல் மாயை புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும். அந்த வகையில், டிசம்பர் 14 ஆம் தேதி ஒரு ஒளியியல் மாயை புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் மற்ற ஒளியியல் மாயை புகைப்படங்களை போல் இல்லாமல் முற்றிலும் வித்தியாசமாக உள்ளது. அதாவது, இந்த ஒளியியல் மாயை புகைப்படத்தில் இரண்டு சிங்கங்கள் குளத்தில் தண்ணீர் குடிக்கின்றன. ஆனால், அதில் மேலும் இரண்டு சிங்கங்கள் மறைந்துள்ளதாம். அதை கண்டுபிடிக்க வேண்டியதுதான் தற்போதைய ஒளியியல் மாயை புகைப்படத்திற்கான புதிராக உள்ளது. இதற்கு வெறும் 10 நொடிகள் மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Optical Illusion : உங்களால் இந்த புகைப்படத்தில் உள்ள பிழையை கண்டுபிடிக்க முடியுமா?.. 10 நொடிகள் தான் டைம்!

இணையத்தில் வைரலாகி வரும் ஒளியியல் மாயை

தற்போது இணையத்தில் வைரலாகி வரும் இந்த ஒளியியல் புகைப்படத்தில் காட்டுக்குள் இரண்டு சிங்கங்கள் தண்ணீர் குடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஆனால், இந்த புகைப்படத்தில் மேலும் இரண்டு சிங்கங்கள் உள்ளன என கூறப்படுகிறது. இந்த ஒளியியல் மாயை காட்சிப்பிழை ஏற்படுத்தும் படம் போல உள்ளதால், இந்த புகைப்படத்தில் மறைந்திருக்கும் சிங்கங்களை கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதானது அல்ல. எனவே, இந்த ஒளியியல் மாயை புகைப்படத்தில் மறைந்துள்ள அந்த சிங்கங்களை கண்டுபிடிக்க வேண்டும் என்றால், நீங்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். இந்த புகைப்படத்தில் மறைந்துள்ள சிங்கங்களை வெறும் 10 நொடிகளில் கண்டுபிடிப்பவர்களின் மூளை மற்றும் அறிவுத் திறன் மிகவும் கூர்மையாக இருக்கும் என கூறப்படுகிறது. எனவே, உங்களால் வெறும் 10 நொடிகளில் இந்த ஒளியியல் மாயை புகைப்படத்திற்கான விடையை கண்டுபிடிக்க முடிகிறதா என்பதை சோதனை செய்து பாருங்கள்.

இதையும் படிங்க : Optical Illusion : 590-க்குள் மறைந்திருக்கும் 580.. வெறும் 8 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?

விடையை கண்டுபிடிக்க முடியவில்லையா?

 உங்களால் இந்த ஒளியியல் மாயை புகைப்படத்தில் மறைந்துள்ள சிங்கங்களை கொடுக்கப்பட்ட 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலை வேண்டாம். அதற்கான விடையை நாங்களே உங்களுக்கு சொல்கிறோம். இந்த ஒளியியல் மாயை புகைப்படத்திற்கான விடையை கண்டுபிடிக்க வேண்டும் என்றால், புகைப்படத்தை நன்கு உற்று கவனிக்க வேண்டும். இந்த புகைப்படத்தில் இரண்டு சிங்கங்கள் தண்ணீர் குடித்துக்கொண்டிருக்கும் நிலையில், அதன் அருகில் மரங்கள் உள்ளன. அந்த மரங்களில் தான், நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய இரண்டு சிங்கங்கள் உள்ளன. அந்த மரங்களை நன்கு உற்று கவனியுங்கள், அவை மரங்கள் அல்ல. அவை தான் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய சிங்கங்கள். சிங்கங்களுக்கு பக்கவாட்டில் இருக்கும் அந்த இரண்டு மரங்களும் சிங்கத்தின் தோற்றத்தை கொண்டுள்ளன. அவற்றை மரங்கள் என கருதி பார்க்காமல், புகைப்படத்தை பார்த்தால் உங்களால் அதில் சிங்கங்கள் மறைந்திருப்பதை சுலபமாக கண்டுபிடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Optical Illusion : உங்கள் கண்கள் கூர்மையானதா? அப்போ இந்த புகைப்படத்தில் இருக்கும் “88”-ஐ 8 நொடிகளில் கண்டுபிடியுங்கள் பார்ப்போம்!

ஒளியியல் மாயை புகைப்படத்தில் மறைந்துள்ள சிங்கங்களை வெறும் 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலை வேண்டாம். ஒளியியல் மாயை புகைப்பட விளையாட்டை தொடர்ந்து விளையாடி வந்தால் சுலபமாக கண்டுபிடித்துவிடலாம்.

Latest News