Viral Video : வகுப்பறையில் மாணவியின் தலைமீது விழுந்த மின்விசிறி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ.. வலுக்கும் கண்டனம்! - Tamil News | CCTV of fan falling on 3rd standard student in private school of Madhya Pradesh goes viral | TV9 Tamil

Viral Video : வகுப்பறையில் மாணவியின் தலைமீது விழுந்த மின்விசிறி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ.. வலுக்கும் கண்டனம்!

Fan Falling CCTV | மத்திய பிரதேச மாநிலம், செஹோர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், மாணவியின் தலையில் மின்விசிறி விழுந்த சிசிடிவி காட்சிகள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பத்திற்கு கண்டனம் தெரிவித்து நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Viral Video : வகுப்பறையில் மாணவியின் தலைமீது விழுந்த மின்விசிறி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ.. வலுக்கும் கண்டனம்!

சிசிடிவி காட்சிகள்

Updated On: 

16 Jul 2024 20:15 PM

வைரல் வீடியோ : தரமற்ற சாலைகள், பாலங்கள் மற்றும் கட்டிடங்கள் குறித்து அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வீடியோக்கலும், புகைப்படங்களும் வெளியாகி வைரலாகும். அவற்றை பார்க்கும் நெட்டிசன்கள் மக்களுக்கு தரமற்ற கட்டிடங்களை கட்டித்தரப்படுவதை கண்டித்து பதிவிடுவர். அப்படி தான் தற்போது சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை பகிர்ந்த நெட்டிசன்கள் அதை கடுமையாக கண்டித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். பள்ளி வகுப்பரையில் மாணவியின் தலையில் மின்விசிறி விழும் அதிர்ச்சி சிசிடிவி காட்சி தான் அது.

வகுப்பறையில் மாணவியின் தலையில் விழுந்த மின்விசிறி

மத்திய பிரதேச மாநிலம், செஹோர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், மாணவியின் தலையில் மின்விசிறி விழுந்த சிசிடிவி காட்சிகள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு வகுப்பறை முழுவதும் மாணவர்கள் வரிசையாக அமர்ந்துக்கொண்டிருக்கின்றனர். அந்த வகுப்பரையில் ஒரு ஆசிரியர் நின்றுக்கொண்டு மாணவர்களுக்கு பாடம் எடுக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக மின்விசிறி கீழே விழுகிறது. மின்விசிரி மாணவியின் மீது விழுந்த நிலையில், அந்த மாணவி அலறி துடிக்கும் வீடியோ காட்சிகள் அதில் பதிவாகியிருந்தது.

உடனடியாக சம்பவம் நடத்த பள்ளிக்கு பறந்த அதிகாரிகள்

தகவலின் படி, அது மூன்றாம் வகுப்பு மாணவர்கள் படிக்கும் வகுப்பறை ஆகும். மின்விசிறி விழுந்து பாதிக்கப்பட்ட சிறுமி லேசான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மின்விசிறி விழுந்ததன் காரணமாக சில மாணவர்களுக்கு கையில் சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தின் வீடியோ வைரலானதை அடுத்து கல்வித்துறை அதிகாரிகள் அந்த பள்ளியில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமன்றி பள்ளியில் பொருத்தப்பட்டுள்ள அனைத்து மின்விசிறிகளையும் பழுது பார்க்கவும் அதன் தரத்தை சோதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கொதித்தெழுந்த நெட்டிசன்கள்

இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், இந்த சம்பவத்திற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் பாதுகாப்பாக கல்வி கற்பார்கள் என்ற நோக்கத்தில் பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர். ஆனால் பள்ளிகள் இவ்வளவு மோசமாக இயங்குவது கடும் கண்டனத்திற்கு உரியது என தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்கம் : IRS Officer : பெண்ணாக இருந்து ஆணாக மாறிய IRS அதிகாரி.. பாலினத்தை மாற்ற ஒப்புதல் வழங்கிய அமைச்சகம்!

மேலும் பள்ளிகள் மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

12 வயதுக்குள் உங்கள் குழந்தை கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம்!
உங்கள் பயணங்களை சிறப்பான மாற்ற சில டிப்ஸ்!
கீரை ஃப்ரெஷாக இருக்க சில டிப்ஸ்
காலையில் எழுந்தவுடன் செல்போன் பார்ப்பதால் இவ்வளவு பிரச்னையா?