Viral Video : விபத்துக்குள்ளான கேரள முதலமைச்சர் கான்வாய்.. அடுத்தடுத்து மோதிக்கொண்ட வாகனங்கள்.. சிசிடிவி காட்சி!
Pinarayi Vijayan | கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கோட்டயத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது முதலமைச்சரின் கான்வாயின் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட 6-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றின் பின் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயனனின் கான்வாய் விபத்துக்குள்ளாகும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கான்வாயில் சென்ற ஆம்புலன்ஸ் உள்ளிட்ட 6-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றின் பின் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகும் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இந்த விபத்து எப்போது, எப்படி நடைபெற்றது என்பது குறித்தி விரிவாக பார்க்கலாம்.
Kerala: The escort vehicles of Kerala Chief Minister Pinarayi Vijayan were involved in an accident in Vamanapuram, Thiruvananthapuram after a scooter rider abruptly crossed in front of the vehicles. This sudden manoeuvre led to a collision involving five vehicles in the convoy. pic.twitter.com/e4XtuJlOlX
— Sanjay Jha (@JhaSanjay07) October 28, 2024
விபத்துக்குள்ளான கேரள முதலமைச்சரின் கான்வாய்
இந்த விபத்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நேற்று (அக்டோபர் 28) நடைபெற்றுள்ளது. கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கோட்டயத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது முதலமைச்சரின் கான்வாயின் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட 6-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்றுக்கொண்டிருந்தன. திடீரென கான்வாயின் முன்னாள் சென்றுக்கொண்டிருந்த கார் நிற்கவே அதனை தொடர்ந்து சென்றுக்கொண்டிருந்த முதலமைச்சரின் வாகனம் மற்றும் பிற வாகனங்கள் ஒன்றின் மீது ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இதையும் படிங்க : Pakistan Cricket Board: பாகிஸ்தான் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர்.. 6 மாதத்தில் விலகிய கேரி கிர்ஸ்டன்.. காரணம் என்ன?
இணையத்தில் வைரலாகு வீடியோ
இணையத்தில் வைரலாகி வரும் அந்த சிசிடிவி காட்சியில், இருவழி சாலை ஒன்றில் முதலமைச்சரின் கான்வாய் சென்றுக்கொண்டிருக்கிறது. அப்போது திடீரென கான்வாயின் முன் சென்றுக்கொண்டிருந்த கார் நிற்கிறது. திடீரென கார் நிறுத்தப்பட்டதால் அதனை தொடர்ந்து சென்றுக்கொண்டிருந்த கார்கள், முன்னாள் இருக்கும் வாகங்கள் மீது மோதுகின்றன. இதனால் அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு படையினர் காரில் இருந்து இறங்கி ஓடுகின்றனர். மேலும் கான்வாயில் சென்றுக்கொண்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்து மடுத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் முதலுதவி பெட்டியை எடுத்துக்கொண்டு ஓடுகின்றனர். இவை அனைத்து அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க : Aadhaar : ஆதார் அட்டையை சான்றாக எடுக்க கூடாது.. உச்சநீதிமன்றம் சொன்ன முக்கிய தீர்ப்பு.. முழு விவரம் இதோ!
விபத்து நடந்ததற்கான காரணம் என்ன?
முதலமைச்சரின் கான்வாய் சென்ற சாலை இருவழி சாலை என்பதால், அதில் இரண்டு பக்கங்களிலும் வாகனங்கள் சென்றுக்கொண்டிருந்தன. சாலையில் போக்குவரத்தை நிறுத்தி வைக்காமல் இயல்பாக இருந்துள்ளது. அப்போது முதலமைச்சரின் கான்வாய் சாலையில் சென்றுக்கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த பெண் ஒருவர் கான்வாய் மீது மோதும் வகையில் வந்துள்ளார். இதனால் அந்த பெண் மீது மோதாமல் இருப்பதற்காக கான்வாயின் முன்னாள் சென்றுக்கொண்டிருந்த காரின் ஓட்டுநர் பிரேக் பிடித்துள்ளார். இதன் காரணமாக தான் இந்த விபத்து நடந்துள்ளது என விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படாத நிலையில், வாகனங்கள் மட்டும் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Viral Video: ஓடும் ரயில் முன் டிக்டாக் வீடியோ.. கணநேரத்தில் சிறுவனுக்கு நேர்ந்த கதி!
இணையத்தில் மிக வேகமாக வைராகும் வீடியோக்கள்
தற்போதைய சமூக ஊடகங்களின் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிற்து. இதன் காரணமாக, எந்த ஒரு அசாத்தியமான அல்லது ஆச்சர்யமான விஷயம் என்றாலும் அது எளிதாக இணையத்தில் வைரலாகி விடுகிறது. முன்பெல்லாம் வெளி மாநிலங்களிலோ அல்லது வெளி நாடுகளிலோ ஏதேனும் அசாத்தியமான அல்லது முக்கிய நிகழ்வுகள் நடந்தால் அந்த தகவல் வெளியே தெரிய வருவதற்கே ஒரு நாள் ஆகிவிடும். ஆனால் இப்போது அதற்கான அவசியம் இல்லை. இப்போதெல்லாம் சம்பவம் நடந்த சில நொடிகளிலேயே உலகம் முழுவதும் தகவல் சென்று சேர்ந்து விடுகிறது. இவ்வாறு செய்தி விரைவாக சென்று சேர்வது பல வகைகளில் நன்மையாக இருக்கிறது. குறிப்பாக விரைவாக தகவல் பரிமாறப்படுவதன் மூலம் குற்ற சம்பவங்கள் எளிதாக கண்டறியப்பட்டு அதற்கு விரைவில் தண்டனைகளும் வழங்கபடுவது குறிப்பிடத்தக்கது.