5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Viral: ரூ.4க்கு விற்கப்பட்ட சிக்கன் பிரியாணி.. சாலையை மறித்த பொதுமக்கள்!

Chicken Biryani For Rs.4: ஆந்திர மாநிலம் அனகாபல்லியில் கடை திறப்பு ஆஃபராக ரூ.4 க்கு சிக்கன் பிரியாணி விற்கப்பட்டது. இதை வாங்குவதற்கு ஏராளமான மக்கள் வரிசையில் மணிக்கணக்கில் நின்று வாங்கிச் சென்றனர். அதிக அளவில் மக்கள் சாலையில் கூடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Viral: ரூ.4க்கு விற்கப்பட்ட சிக்கன் பிரியாணி.. சாலையை மறித்த பொதுமக்கள்!
ரூ.4 சிக்கன் பிரியாணி வாங்குவதற்காக வரிசையில் நிற்கும் மக்கள்
mohamed-muzammil
Mohamed Muzammil | Published: 16 Dec 2024 18:25 PM

புதிதாக கடை திறப்பவர்கள் சில யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை தன் வசப்படுத்திக் கொள்வார்கள். ஆரம்ப காலத்தில் கொடுக்கப்படும் சில தள்ளுபடிகள் மூலம் ஈர்க்கப்படும் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து அந்த கடைக்கு செல்வது வாடிக்கையாகிவிடும். சிலர் தங்களின் கடைகளின் திறப்பு விழாவிற்கு செலிபிரிட்டியை அழைப்பார்கள். இதனால் அந்தக் கடையில் கூட்டம் அலைமோதி மக்கள் மத்தியில் பிரபலமாகும். அந்த வகையில் ஆந்திரப்பிரதேசம் மாநிலம் அனகாபல்லி மாவட்டத்தில் உள்ள நரசிப்பட்டினத்தில் அன்லிமிடெட் என்ற பெயரில் புதிதாக திறக்கப்பட்ட உணவு விடுதியில் சிக்கன் தம் பிரியாணி வெறும் ரூ.4க்கு விற்கப்பட்டதால் கூட்டம் அலைமோதியது. அதை கடந்து செல்லும் போது திரையரங்குகளில் புதுப்படம் ரிலீஸ் ஆனது போலவும் கோயிலில் கடவுளை தரிசிக்க பயபக்தியுடன் மக்கள் வரிசையில் நிற்பது போலவும் தெரிந்தது.

ஆனால் உண்மையில் ரூ.4க்கு பிரியாணியை வாங்குவதற்காக மக்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மழை நேரமாக இருப்பதால் இந்த குளிர்க்கு இதமாக மலிவு விலையில் பிரியாணி கிடைத்தால் யாருக்குத்தான் மனம் கேட்காது? இந்த ஹோட்டல் R&R விருந்தினர் மாளிகைக்கு அருகில் திறக்கப்பட்டுள்ளது.

Also Read: Viral Video: கம்பிக்கு நடுவில் சிக்கிய குழந்தையின் தலை.. மீட்டது எப்படி? திக்திக் வீடியோ!

குடும்பம் குடும்பமாக இந்த ரூ.4க்கு பிரியாணி வாங்குவதற்கு மணிக்கணக்கில் மக்கள் காத்திருந்தனர். கூட்டம் அதிக அளவில் இருந்ததால் ஒருவருக்கு ஒரு பிரியாணி பாக்கெட் மட்டுமே வழங்கப்பட்டது. கட்டுக்கடங்காமல் கூட்டம் அதிகரித்து சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து நிலைமையை சரி செய்தனர்.

ஒரு ரூபாய்க்கு பிரியாணி:

இதைப்போல் கடந்த ஆண்டு தெலுங்கானா மாநிலத்தில் ஒரு ரூபாய்க்கு பிரியாணி விற்கப்படுகிறது என்ற தகவல் வெளியாகி அந்த ஹோட்டல் முன்பு ஏராளமான மக்கள் குவிந்தனர். தெலுங்கானா மாநிலம் கரீம் நகரில் உள்ள எம்பயர் ஹோட்டலில் ஒரு ரூபாய்க்கு பிரியாணி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு ஏராளமான மக்கள் குவிந்தனர். ஆனால் ஒரு ரூபாய் நாணயமாக இல்லாமல் தாளாகக கொண்டு வர வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.

Also Read: இளைஞரின் கன்னத்தில் கடித்த மலைப் பாம்பு: ரீல்ஸ் மோகத்தில் விபரீதம்!

இருந்தாலும் ஒரு ரூபாய் தாளுடன் ஏராளமான மக்கள் அங்கு கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பிரியாணி விற்பனை தொடங்கி 10 நிமிடங்களுக்குள் 800 பிரியாணிகள் விற்று விட்டதாக கடை உரிமையாளர் தெரிவித்திருந்தார். ஆனால் பிரியாணி வாங்குவதற்கு வந்த மக்கள் தங்கள் வாகனங்களை தாறுமாறாக சாலைகளில் கண்டபடி நிறுத்தி வைத்திருந்ததால் போலீசார் அவர்களுக்கு 250 முதல் 500 வரை அபராதம் விதித்தார்கள். ரூ.1க்கு பிரியாணி வாங்க வந்தவர்கள் ரூ.500 அபராதம் கட்டிச் சென்ற நிலைமை ஏற்பட்டது.

ஆனால் அது போல் எதுவும் ஏற்படாமல் மக்கள் மகிழ்ச்சியாக ரூ.4க்கு பிரியாணியை வாங்கிச் சென்றனர். போலீசாரும் கூட்ட நெரிசலை சரியான முறையில் கையாண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News