தோசை, ஊத்தாப்பம் வழங்காததால் Zomato-க்கு ரூ.15,000 அபராதம்.. நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் அதிரடி!

Zomato | ஸ்விக்கி, சொமோட்டோ உள்ளிட்ட செயலிகள் மூலம் நாள்தோறும் ஏராளமான மக்கள் உணவு ஆர்டர் செய்கின்றனர். உரிய நேரத்தில் உணவை டெலிவரி செய்வது, உணவில் ஏதேனும் சிக்கல் இருந்தால் அதற்கு தீர்வு காண்பது என பல அம்சங்கள் உள்ளன. இந்த உணவு டெலிவரி செயலிகள் எவ்வளவு பயனுள்ளதாக உள்ளதோ, இதில் அவ்வளவு சிக்கலும் உள்ளது. தற்போது அப்படி ஒரு சிக்கல் தான் நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் வரை சென்றுள்ளது.

தோசை, ஊத்தாப்பம் வழங்காததால் Zomato-க்கு ரூ.15,000 அபராதம்.. நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் அதிரடி!

மாதிரி புகைப்படம்

Published: 

12 Aug 2024 14:05 PM

ஆன்லைன் உணவு டெலிவரி செயலி : முன்பெல்லாம் ஒரு பொருளை வாங்க வேண்டும் என்றால் கடைகளில் ஏறி, இறங்கி பார்த்து வாங்க வேண்டும். ஆனால், தற்போது அவற்றுக்கெல்லாம் அவசியமே இல்லை. ஒரே ஒரு மொபைல் செயலி மூலம் அனைத்தையும் வீட்டில் இருந்தபடியே செய்து முடித்துவிடலாம். உடைகள் முதல் உணவு வரை அனைத்தையும் ஆன்லைன் ஆர்டர் செய்ய முடியும். குறிப்பாக உணவு செயலிகளை அதிக அளவு மக்கள் பயன்படுத்துகின்றனர். ஸ்விக்கி, சொமோட்டோ உள்ளிட்ட செயலிகள் மூலம் நாள்தோறும் ஏராளமான மக்கள் உணவு ஆர்சர் செய்கின்றனர். உரிய நேரத்தில் உணவை டெலிவரி செய்வது, உணவில் ஏதேனும் சிக்கல் இருந்தால் அதற்கு தீர்வு காண்பது என பல அம்சங்கள் உள்ளன. இந்த உணவு டெலிவரி செயலிகள் எவ்வளவு பயனுள்ளதாக உள்ளதோ, இதில் அவ்வளவு சிக்கலும் உள்ளது. தற்போது அப்படி ஒரு சிக்கல் தான் நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் வரை சென்றுள்ளது. அது என்ன என விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Gold Rate : சவரனுக்கு ரூ.1120 உயர்ந்த தங்கம் விலை.. ஒரு வாரத்துக்குள் எகிறிய ரேட்.. 6 நாள் விலை பட்டியல்

சொமேட்டோவில் உணவு ஆர்டர் செய்தவருக்கு நடந்தது என்ன?

திருவள்ளூர் அருகே ஆனந்த் சேகர் என்பவர் மொபைல் செயலி மூலம் தோசை, ஊத்தாப்பம் ஆர்டர் செய்துள்ளார். அவருக்கு ஆர்டர் செய்து உணவு, டெலிவரி செய்யப்படாததை அடுத்து நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை விசாரித்த ஆணையம், உணவு டெலிவரி நிறுவனத்திற்கு ரூ.15,000 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. இது குறித்து விளக்கமளித்த ஆணையம், வாடிக்கையாளரிடமிருந்து சேவை கட்டணமாக ரூ.73 வசூலித்த சொமேட்டோ நிறுவனத்திற்கு, உணவு சரியாக வழங்கப்படுகிறதா என்பதை சரிபார்க்கும் பொறுப்பும் உள்ளதாக கூறியுள்ளது. உணவுக்காக செலவழிக்கப்பட்ட ரூ.498, மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.10,000 மற்றும் வழக்கு செலவுக்காக ரூ.5,000 வழங்க வேண்டும் என்று நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Shocking News : பெண்களின் கழிவறையில் மறைத்து வைக்கப்பட்ட செல்போன்.. கையும் களவுமாக சிக்கிய ஊழியர்!

வாடிக்கையாளரின் உணவை தானே சாப்பிட்ட டெலிவரி பாய்

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓலா ஃபுட்ஸ் செயலி மூலம் இளைஞர் ஒருவர் உணவு ஆர்டர் செய்துள்ளார். நீண்ட நேரம் ஆகியும் உணவு டெலிவரி செய்யப்படாததால், அந்த இளைஞர் செயலியில் வந்த தகவலின்படி, வீட்டின் கீழே சென்று பார்த்துள்ளார். அப்போது டெலிவரி பாய்,  தான் ஆர்டர் செய்த உணவை சாப்பிட்டுக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், அதனை வீடியோ பதிவு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தது குறிப்பிடத்தக்கது.

தோல்வியில் இருந்து குழந்தைகள் கற்றுக்கொள்ளும் பாடம்!
பனிக்காலத்தில் நாம் சுற்றுலா செல்ல வேண்டிய இடங்கள்!
காலை அல்லது இரவு? முட்டை எப்போது சாப்பிடலாம்?
தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா?