மோனிஷா ராணியா இல்லை மோனிகா பாபியா? ஓர் பெயர் சூட்டுங்க!
Indian version of Mona Lisa painting: உலகின் பிரபலமான ஓவியர் லியார்னடோ டாவின்சியின் புகழ்பெற்ற மோனலிசா ஒவியத்தின் இந்திய பதிப்பை டெல்லியை சேர்ந்த மாணவி ஒருவர் உருவாக்கியுள்ளார். இது, தற்போது வைரலாகி வருகிறது.
ஏ.ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பல்வேறு தரப்பினரின் கற்பனைக்கு புதிய அங்கீகாரத்தை கொடுத்துள்ளது என்றால் அது மிகையல்ல.
இந்நிலையில், டெல்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ராஷி பாண்டே என்ற மாணவி ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி லியோனார்டோ டா வின்சியின் புகழ்பெற்ற ஓவியமான மோனாலிசாவின் இந்தியப் பதிப்பை உருவாக்கியுள்ளார்.
இதையும் படிங்க: வைரலாகும், ‘பாம்புகளின் காதலி’.. யார் இந்த அஜிதா?
இது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்தப் படத்தை காண்போர் இந்தியன் பாபி எனத் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக மாணவி இந்தப் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, “மோனலிசாவின் இந்தியப் பதிப்பை ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வரைந்துள்ளேன். இதற்கு ஓர் பெயர் சூட்டுங்கள்” எனத் தெரிவித்து இருந்தார்.
I made the Indian version of Mona Lisa using AI.
Give her a name🫶 pic.twitter.com/ozcG5EigvF— Rashi Pandey (@rashi__pandey_) November 26, 2024
இதற்கு பதிலளித்துள்ள மோனாலி ஷா என்பவர், இது மோனாலி ஷா எனத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் மற்ற ட்விட்டர் எக்ஸ் சமூக வலைதள பயனர்கள், “மைதிலி சிசோடியா, மோனிஷா ராணி, மோனிகா பாபி” எனத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க : ரீல்ஸ் மோகத்தில் பள்ளத்தாக்கில் விழுந்த இளம்பெண்.. பகீர் வைரல் வீடியோ!