5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Viral Video : ஆர்டர் செய்த உணவை திருட்டுத் தனமாக பிரித்து சாப்பிட்ட டெலிவரி பாய்.. கையும் களவுமாகப் பிடித்த நபர்!

Delivery agent ate food | இது குறித்து உணவு டெலிவரி செய்யும் நபரிடம் அவர் கேட்ட போது, அதற்கு அவர் உன்னால் என்ன முடியுமோ செய்துக்கொள் என்று கூறியுள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திவிட்ட ஜெய்ஸ்வால், ஓலா, இப்படி தான் உங்கள் உணவு டெலிவரி பார்ட்னர்கள் வேலை செய்கின்றனர் என்று பதிவிட்டுள்ளார்.

Viral Video : ஆர்டர் செய்த உணவை திருட்டுத் தனமாக பிரித்து சாப்பிட்ட டெலிவரி பாய்.. கையும் களவுமாகப் பிடித்த நபர்!
வைரலாகும் வீடியோ
vinalin
Vinalin Sweety | Updated On: 25 Jul 2024 16:28 PM

ஓலா உணவு டெலிவரி : மக்களிடையே ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடும் பழக்கம் அதிகமாகிக்கொண்டே வருகிறது. ஓய்வற்ற வேலை, கலைப்பு காரணமாக பெரும்பாலான மக்கள் சமைத்து சாப்பிடுவதற்கு பதில் ஸ்விக்கி, சொமேட்டோ உள்ளிட்ட ஆன்லைன் உணவு டெலிவரி தளங்களில் ஆர்டர் செய்து சாப்பிடுகின்றனர். வேலை பளுவை குறைப்பதால் இது பலருக்கும் பயனுள்ளதாக உள்ளது. இது எந்த அளவிற்கு பயனுள்ளதாக உள்ளதோ அந்த அளவிற்கு சிக்கலானதும் கூட. இவ்வாறு ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்யப்படும்போது ஏமாற்றப்பட அதிக வாய்ப்பு உள்ளது. டெலிவரி செய்வதற்கு கூடுதல் கட்டணம் கேட்பது, தாமதமாக உணவு டெலிவரி செய்வது, பாதி சாப்பிட்ட உணவை டெலிவரி செய்வது என பட்டியல் நீண்டுக்கொண்டே போகும். அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் நொய்டாவை சேர்ந்த இளைஞருக்கு நடந்துள்ளது. அது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நொய்டா இளைஞருக்கு நடந்தது என்ன?

நொய்டாவை சேர்ந்த இளைஞர் ஒருவர், ஓலா உணவு டெலிவரி ஆப் மூலம் உணவு ஆர்டர் செய்துள்ளார். அப்போது உணவு டெலிவரி செய்யும் நவர் அவருக்கு போன் செய்து கூடுதலாக ரூ.10 தரும்படி கேட்டுள்ளார். முதலில் அதற்கு மறுப்பு தெரிவித்த இளைஞர் பிறகு தருவதாக கூறியுள்ளார். இதற்கு பிறகு சுமார் 45 நிமிடங்களாக அந்த இளைஞர் உணவுக்காக காத்து கொண்டிருந்துள்ளார். அப்போது தான் அந்த உணவு டெலிவரி செய்யும் நபர், தான் ஆர்டர் செய்த உணவை சாப்பிட்டுக் கொண்டிருப்பதை அந்த இளைஞர் கண்டுபிடித்துள்ளார்.

திமிராக பேசிய உணவு டெலிவரி செய்யும் நபர்

இது குறித்து உணவு டெலிவரி செய்யும் நபரிடம் அவர் கேட்ட போது, அதற்கு அவர் உன்னால் என்ன முடியுமோ செய்துக்கொள் என்று கூறியுள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திவிட்ட ஜெய்ஸ்வால், “ஓலா, இப்படி தான் உங்கள் உணவு டெலிவரி பார்ட்னர்கள் வேலை செய்கின்றனர். ரூ.10 கூடுதலாக தர மறுத்ததர்க்காக என்னை 45 நிமிடம் காக்க வைத்த உணவு டெலிவரி செய்யும் நபர், அதை குறித்து நான் கேட்ட போது இப்படி தான் எனக்கு பதிலளித்தார்” என்று அந்த டெலிவரி ஊழியர் பேசிய வீடியோவை பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Aman Birendra Jaiswal (@amanbjaiswal)

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இந்த வீடியோ பதிவிடப்பட்ட சில நிமிடங்களிலேயே வைரலாக தொடங்கிவிட்டது. இதே போன்ற சம்பவம் தனக்கும் நடைபெற்றதாக மற்றொரு பயனர் பதிவிட்டுள்ளார். “நான் ஓலாவில் உணவு ஆர்டர் செய்தேன். நான் ஆர்டர் செய்த உணவு டெலிவரிக்கு தயாரிகிவிட்டதாக எனக்கு தகவல் வந்தது. ஆனால் அதற்கு பிறகு என்னால் டெலிவரி செய்யும் நபரை தொடர்புக்கொள்ள முடியவில்லை. பிறகு இது குறித்து நான் புகார் அளித்த நிலையில் எனது பணம் திருப்பி செலுத்தப்பட்டது”. ஓலாவில் புகார் தெரிவிக்கும் வசதி இல்லாததால் இதுபோன்ற குற்றங்கள நடப்பதாக மற்றொரு பயனர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : Viral : அமேசான் டெலிவரியில் வந்த உடும்பு.. பதரிப்போன வாடிக்கையாளர்.. அடுத்து நடந்தது என்ன?

Latest News