Viral Video : ஏசி தண்ணீரை கடவுளின் தீர்த்தம் என குடித்த பக்தர்கள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ! - Tamil News | Devotees in Uttar Pradesh drunk AC water as holy water video goes viral on internet | TV9 Tamil

Viral Video : ஏசி தண்ணீரை கடவுளின் தீர்த்தம் என குடித்த பக்தர்கள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

UP Devotees | உத்தர பிரதேச மாநிலம், விருந்தாவனம் பகுதியில் ஒரு சிவன் கோயில் செயல்பட்டு வருகிறது. இந்த கோயிலின் உள் நடைபாதையில், யானை உருவத்தின் வாயில் இருந்து சொட்டு சொட்டாக தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்துள்ளது. இதனை கண்ட அவ்வழியாக சென்ற பக்தர்கள், அதனை புனித நீர் என நினைத்து குடிக்க தொடங்கியுள்ளனர்.

Viral Video : ஏசி தண்ணீரை கடவுளின் தீர்த்தம் என குடித்த பக்தர்கள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

வைரல் வீடியோ

Updated On: 

04 Nov 2024 12:25 PM

உத்தரபிரதேசத்தில் யானை சிலையின் வாயில் இருந்து வழிந்த ஏசி தண்ணீரை, புனித நீர் என நினைத்து பக்தர்கள் குடிக்கும்  வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ இணையத்தில் பதிவிடப்பட்டதை அடுத்த தற்போது வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள் பகதர்களின் இந்த செயல் ஆச்சர்யமளிப்பதாகவும், அதிர்ச்சியூட்டும் விதமாக இருப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், இந்த வீடியோ குறித்த முழு விவரத்தை விரிவாக பார்க்கலாம்.

ஏசி தண்ணீரை குடித்த பக்தர்கள்

உத்தர பிரதேச மாநிலம், விருந்தாவனம் பகுதியில் ஒரு சிவன் கோயில் செயல்பட்டு வருகிறது. இந்த கோயிலின் உள் நடைபாதையில், யானை உருவத்தின் வாயில் இருந்து சொட்டு சொட்டாக தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்துள்ளது. இதனை கண்ட அவ்வழியாக சென்ற பக்தர்கள், அதனை புனித நீர் என நினைத்து குடிக்க தொடங்கியுள்ளனர். ஆனால், யானையின் வாயில் இருந்து சொட்டிய நீர் சாமிக்கு அபிஷேகம் செய்த அல்லது புனித நீரோ கிடையாது என்றும், அது வெறும் ஏசி தண்ணீர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : கனடா இந்து கோயில் மீது தாக்குதல்.. காலிஸ்தானியர்களுக்கு வலுக்கும் கண்டனம்.. நடந்தது என்ன?

ஏசி தண்ணீரை புனித நீர் என நினைத்து குடித்த பக்தர்கள்

இணையத்தில் வைரகாகி வரும் அந்த வீடியோவில், கோயிலின் உள்நடைபாதையில் பக்தர்கள் நடந்து சென்று கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கிருக்கும் யானை சிலையின் வாயில் இருந்து வரும் தண்ணீரை புனித நீர் என நினைத்து சில பக்தர்கள் அதனை பேப்பர் கப்பில் பிடித்து குடிக்கின்றனர். அவர்களை கண்டு பின்னால் வந்த பக்தர்களும் அதே போல செய்கின்றனர். இதையெல்லாம் படம் பிடித்துக் கொண்டிருந்த நபர் ஒருவர், அது புனித நீர் இல்லை என்றும் அது ஏசியில் இருந்து வரும் கழிவு நீர் என்றும் கூறுகின்றார். ஆனால் பக்தர்கள் அவற்றைக் கண்டு கொள்ளாமல், அதை புனித நீர் என நினைத்துக்கொண்டு குடிக்கின்றனர்.

இதையும் படிங்க : 2 மாதங்களில் 48 லட்சம் திருமணங்கள்.. ரூ. 6 லட்சம் கோடி வர்த்தகம் எதிர்பார்ப்பு!

எச்சரிக்கையை கண்டுக்கொள்ளாத பக்தர்கள்

அவர்களை தொடந்து வந்த பக்தர்களிடம் இது புனித நீர் இல்லை. இது ஏசியில் இருந்து வரும் நீர் என கோயில் பூசாரியே சொல்லியிருக்கிறார். இந்த நீரை குடிப்பதால் பல உடல்நல பிரச்னைகள் ஏற்படலாம்  என அந்த நபர் பக்தர்களை எச்சரிக்கிறார். ஆனால் அவற்றை எல்லாம் கண்டுக்கொள்ளாத பக்தர்கள் தண்ணீரை பிடித்து குடித்துவிட்டு செல்கின்றனர். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சிகளில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Gold Price November 4 2024: வாரத்தின் முதல் நாள்.. குறைந்ததா தங்கம் விலை? ஒரு சவரன் ஏவ்வளவு?

இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ

இந்த வீடியோ இணையத்தில் பதிவிடப்பட்டதை அடுத்து மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அதாவது, மூட நம்பிக்கை எவ்வளவு ஆபத்தானது என்பதை இதன் மூலம் உணர்ந்துக்கொள்ளலாம் என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். நீங்கள் அதை ஏசி தண்ணீர், குடித்தால் ஆபத்து என கூறினால் கடவுள் அதை புனிதமாக்கி விடுவார் என அவர்கள் கூறுவார்கள் என மற்றொருவர் பதிவிட்டுள்ளார். மேலும் சிலர், இந்தியவர்களுக்கு ஆன்மீகம் குறித்து புரிதலை ஏற்படுத்த வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளனர்.

புகைப்படங்களை சோதிக்க வாட்ஸ் அப்பில் புதிய அம்சம் - விரைவில் அறிமுகம்!
அவரைப் போல இருக்க வேண்டும் - நடிகை பார்வதியின் ஆசை
நயன்தாராவிற்கு சன் டிவியின் இந்த சீரியல் பிடிக்குமாம்
இரவில் டீ குடிப்பதால் இவ்வளவு பிரச்னையா?