வைரலாகும், ‘பாம்புகளின் காதலி’.. யார் இந்த அஜிதா?
Ajitha Pandey the lover of snakes : பாம்புகள் மீது இரக்கம் கொண்டவர் அஜிதா பாண்டே. செவிலியான இவர், பாம்புகளுக்காக தனது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர் ஆவார்.
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரை சேர்ந்தவர் அஜிதா பாண்டே. நர்ஸிங் முடித்துள்ள இவர், பாம்பு உள்ளிட்ட உயிரினங்கள் மீது பெரிதும் இரக்கம் கொண்டவர் ஆவார். யாராவது தங்களது வீட்டுக்குள் பாம்பு புகுந்துவிட்டது என்று சொன்னால் இவர் உடனே சென்று பாம்பை மீட்பார். ஆகவே, இவரை இப்பகுதி மக்கள், ‘ஸ்னேக் கேர்ல்’ என்றே அழைக்கின்றனர். நர்ஸிங் ஆபீசராக பணிபுரியும் இவருக்கு இன்ஸ்டாகிராமில் 1.25 லட்சம் பின்தொடர்பவர்கள் உள்ளனர்.
இயற்கையிலே அஜிதா பாம்பு உள்ளிட்ட உயிரினங்களை கருணை உள்ளத்தோடு பார்க்கக் கூடியவர். இவரின் வீட்டில் 18-20 நாய்களை வளர்த்து வருகிறார்.
இவர் தனது 18 வயதில் பாம்பாட்டி ஓருவரை சந்தித்தார். அவரிடம் இருந்து பாம்புகள் மீதான ஆர்வம் இவருக்கு அதிகரித்தது.
இதையும் படிங்க : தூக்கி எறியப்பட்ட சிகரெட் துண்டுகளில் அழகிய பொம்மை.. இந்திய இளைஞர் அசத்தல்!
தொடர்ந்து பாம்பு இனங்கள், பாம்புகளின் வகைகள், பாம்புகளின் குணநலன்கள் என இணையம் மற்றும் புத்தகங்களில் தேடி தேடி படித்தார்.
இந்நிலையில் ஒருமுறை பிலாஸ்பூரில் உள்ள ஒரு வீட்டின் புல்வெளியில் பாம்பு மறைந்திருந்தது. அஜிதா சாமர்த்தியமாக ஒரு புதரில் இருந்த பாம்பை வெளியே இழுத்து ஒரு பையில் போட்டார்.
அதன்பின்னர் அஜிதாவுக்கு பாம்பு பிடிப்பது எளிதானது. தற்போது வரை அவர் பல முறை பாம்பு பிடித்துள்ளார். அவர் மார்ச் 2017 மற்றும் ஜூலை 2024 க்கு இடையில் 984 பாம்புகளை மீட்டுள்ளார்.
கோவிட்-19 பெருந்தொற்று காலத்திலும் அஜிதா பாண்டே பாம்புகளை மீட்கும் பணியை கைவிடவில்லை. அவரின் மீட்புப் பயணம் இன்றளவும் தொடர்கிறது.
இதையும் படிங்க : ‘இப்பிறப்பும், எப்பிறப்பும் தொடரும் இந்தப் பாசம்’.. மனைவிக்காக 4,400 கி.மீ சைக்கிள் பயணம்!