Viral Video : பிரதமர் மோடி முதல் கிம் ஜோங் உன் வரை.. உலக தலைவர்களுக்கு ஃபேஷன் ஷோ நடத்திய எலான் மஸ்க்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
எலான் மஸ்க் ட்விட்டர் பதிவு | உலக தலைவர்களுக்கு ஃபேஷன் ஷோ நடத்திய அவர் தன்னையும் விட்டு வைக்கவில்லை. அதில் எலான் மஸ்க், எக்ஸ் என எழுதப்பட்ட கருப்பு நிற உள்ளாடையில் நடந்து வரும் காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட எலான் மஸ்க் "High time for an AI fashion show" என பதிவிட்டுள்ளார்.
ஏஐ ஃபேஷன் ஷோ : உலக பணக்காரர், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர், டெஸ்லா நிறுவனர் என எலான் மஸ்க்கிற்கு பல முகங்கள் உள்ளன. இவற்றை போலவே எலான் மஸ்கிற்கு குரும்பு தனமாக முகமும் உள்ளது. உலக பிரச்னைகளை கிண்டல் செய்து பதிவிடுவது, தொழில்நுட்பங்கள் மற்றும் தொழில்நுட்ப கோளாறுகளை கிண்டல் செய்வது என எப்பொழுதும் இணையத்தில் அரட்டை அடித்துக்கொண்டிருப்பார் எலான். அவர் அவ்வப்போது வெளியிடும் வீடியோக்கள் மற்றும் பதிவுகள் வைரலும் ஆகும். அப்படி தான் அவர் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.
உலக தலைவர்களுக்கு ஃபேஷன் ஷோ நடத்திய எலான் மஸ்க்
உலக தலைவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு மூலம் ஃபேஷன் ஷோ செய்வது போன்ற வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் எலான் மஸ்க். அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இந்திய பிரதமர் மோடி தொடங்கி, அமெரிக்காவின் முன்னாள் அதிபர்கள் ஒபாமா, டொனால்ட் டிரம், தற்போதைய அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ், வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் உள்ளிட்ட உலக நாட்டு தலைவர்களுக்கு செய்ற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் விதவிதமான உடைகள் அணிவித்து ஃபேஷன் ஷோ நடப்பது போன்ற வீடியோவை பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க : America Election 2024 : அதிபர் தேர்தலில் இருந்து விலகினார் ஜோ பைடன்.. ஜனநாயக கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸை முன்மொழிந்தார்!
உலக தலைவர்களுக்கு ஃபேஷன் ஷோ நடத்திய அவர் தன்னையும் விட்டு வைக்கவில்லை. அதில் எலான் மஸ்க், எக்ஸ் என எழுதப்பட்ட கருப்பு நிற உள்ளாடையில் நடந்து வரும் காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட எலான் மஸ்க் “High time for an AI fashion show” என பதிவிட்டுள்ளார்.
High time for an AI fashion show pic.twitter.com/ra6cHQ4AAu
— Elon Musk (@elonmusk) July 22, 2024
சர்ச்சையை உருவாக்கி ஏஐ ஃபேஷன் ஷோ
எலான் மஸ்க் பதிவிட்ட இந்த நகைச்சுவையாக இருந்தாலும் உலக தலைவர்களை இப்படி கேலி செய்வது தவறு என்று அவர்களது ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க : Viral Video : குப்பையில் கிடந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான வைர நெக்லஸ்.. பத்திரமாக மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர்!