Optical Illusion : 9-களுக்கு நடுவில் மறைந்திருக்கும் “6”.. வெறும் 5 விநாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?
Find 6 | தற்போது இணையத்தில் வைரலாகும் ஒளியியல் மாயை புகைப்படத்தில் வரிசையாக ஒரே எண் இடம் பெற்றுள்ளது. அதாவது, புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள மொத்த 5 வரிகள் முழுவதும் 9 என்ற எண் இடம்பெற்றுள்ளது. இதுதான் சவால், இந்த 9 என்ற எண்கள் நிறைந்துள்ள புகைப்படத்தில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் 6 என்ற எண் இடம் பெற்றிருக்கும்.
இணையத்தில் அவ்வப்போது ஒளியியல் மாயை புகைப்படங்கள் வெளியாகி அவை வைரலாகும். அந்த வகையில், தற்போது ஒரு ஒளியியல் மாயை புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த புகைப்படம் மற்ற ஒளியியல் மாயை புகைப்படங்களை போல் ஒரே புகைப்படத்தில் பல உருவங்கள் இடம் பெற்றிருக்கும் புகைப்படம் அல்ல. ஒரே எண்களை கொண்ட ஒளியியல் மாயை புகைப்படமாக உள்ளது. அதில் இருக்கும் ஒரே ஒரு வித்தியாசமான எண்ணை கண்டுபிடிப்பதுதான் சவால். உங்களால் அந்த எண்ணை கண்டுபிடிக்க முடிகிறதா என சோதனை செய்து பாருங்கள். அவ்வாறு நீங்கள் 5 நொடிகளில் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் உங்களது மூளை கூர்மையாக உள்ளது என்று அர்த்தம்.
இதையும் படிங்க : Optical Illusion : கூர்மையான பார்வை கொண்டவரா நீங்கள்.. படத்தில் மறைந்திருக்கும் ஆமையை 5 விநாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?
ஒளியியல் மாயை புகைப்படங்கள் என்றால் என்ன?
ஒளியியல் மாயை புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் மிகவும் பிரபலமான விளையாட்டாக உள்ளது. பொதுவாக ஒளியியல் மாயை புகைப்படங்களில், ஒரே புகைப்படத்தில் வெவ்வேறு உருவங்கள் இடம் பெற்றிருக்கும். அந்த புகைப்படத்தை உற்று கவனிக்கும் போதுதான் அதில் பல உருவங்கள் அடங்கியுள்ளதை என்பதை நம்மால் கண்டறிய முடியும். அவ்வாறு அது, ஒரு ஒளியியல் மாயை புகைப்படம் என தெரியாமல் அந்த புகைப்படத்தை பார்ப்பவர்களுக்கு முதலில் ஏதேனும் ஒரு உருவம் மட்டுமே தெரியும்.
பண்புகளை அறிய உதவும் ஒளியியல் மாயை
இந்த ஒளியியல் மாயை புகைப்படம் ஒவ்வொருக்கும், ஒவ்வொரு மாதிரியான விடையை தரும். அவ்வாறு இந்த ஒளியியல் மாயை புகைப்படங்களை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் வேறு, வேறு உருவம் தெரிவதற்கு பின் ஒரு உலவியல் காரணம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமன்றி இந்த ஒளியியல் மாயை புகைப்படங்கள் மூலம் ஒருவரின் பண்புகளை தெரிந்துக்கொள்ளலாம் எனவும் கூறப்படுகின்றன. இந்த தற்போதை இணையத்தில் வைரலாகும் ஒளியியல் மாயை புகைப்படம் குறித்து பார்ப்போம்.
இதையும் படிங்க : Personality Test : இளவேனில் முதல் குளிர் காலம் வரை.. உங்களுக்கு பிடித்த காலமே உங்கள் பண்புகளை சொல்லும்!
இணையத்தில் வைரலாகும் ஒளியியல் மாயை
தற்போது இணையத்தில் வைரலாகும் ஒளியியல் மாயை புகைப்படத்தில் வரிசையாக ஒரே எண் இடம் பெற்றுள்ளது. அதாவது, புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள மொத்த 5 வரிகள் முழுவதும் 9 என்ற எண் இடம்பெற்றுள்ளது. இதுதான் சவால், இந்த 9 என்ற எண்கள் நிறைந்துள்ள புகைப்படத்தில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் 6 என்ற எண் இடம் பெற்றிருக்கும். அந்த எண்ணை கண்டுபிடிப்பதுதான் சவால். இந்த 6 என்ற எண்ணை கண்டுபிடிக்க வெறும் 5 விநாடிகளே கொடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு 5 விநாடிகளில் சரியான எண்ணை கண்டுபிடிக்கும் நபர்களுக்கு மிகவும் கூர்மையான அறிவுத் திறன் உள்ளது என அர்த்தம்.
இதையும் படிங்க : Optical Illusion : உங்களுக்கு முதலில் தெரிந்தது எது?.. முதியவரா அல்லது குடையா.. உங்களது பண்புகள் இவைதான்!
கண்டுபிடிக்கவில்லையா?
உங்களால் படத்தில் இருக்கும் 6 என்ற எண்ணை கண்டுபிடிக்க முடியவில்லையா. கவலை வேண்டாம், நாங்கள் அதற்கான விடையை கூறுகிறோம். புகைப்படத்தில் மொத்தம் 5 வரிகள் இடம்பெற்றுள்ளதா. அதில் 4வது வரியை உன்னிப்பாக கவனியுங்கள். 4வது வரியின் முதல் எண்ணுக்கு அருகில் தான் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய எண் 6 உள்ளது. இது அனைவருக்கும் சாத்தியமானது அல்ல. இவ்வாறு ஒளியியல் மாயை புகைப்படங்களை பயன்படுத்துதி விளையாடுவதன் மூலம் மூளையின் செயல்திறன் மற்றும் சிந்தித்து செயலாற்றும் பண்புகள் அதிகரிக்கும் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.