Optical Illusion : இலைகளுக்கு நடுவே மறைந்திருக்கும் பூனையை 8 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?
Viral Image | தற்போது இணையத்தில் வைரலாகி வரும் அந்த ஒளியியல் மாயை புகைப்படத்தில், இலைகள் நிறைந்துள்ளன. ஆனால், அந்த இலைகளுக்கு நடுவே பூனை ஒன்று மறைந்துள்ளது. இந்த புகைப்படத்தை உற்று கவனிக்கும்போது தான், புகைப்படத்தில் மறைந்திருக்கும் பூனையை உங்களால் கண்டுபிடிக்க முடியும்.
இணையத்தில் அவ்வப்போது சில ஒளியியல் மாயை புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வரும். அந்த வகையில் தற்போதும் ஒரு ஒளியியல் மாயை புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் இலைகள் நிறைந்துள்ள நிலையில், அதில் ஒரு பூனை குட்டி மறைந்திருக்கிறதாம். அந்த பூனை குட்டியை கண்டுபிடிக்க வேண்டியதுதான் டாஸ்க். அவ்வாறு இலைகளுக்கு நடுவே மறைந்திருக்கும் பூனை குட்டியை வெறும் 8 நொடிகளில் கண்டுபிடிக்கும் நபர்களுக்கு மூளை மிகவும் கூர்மையாக உள்ளது என அர்த்தம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், உங்களின் மூளை திறன் எப்படி உள்ளது என்பதை இப்போது சோதனை செய்து பாருங்கள்.
இதையும் படிங்க : Optical Illusion : இரவில் ரகசியமாக வெளியே சென்று வந்த குழந்தை யார்.. வெறும் 5 நொடிகளில் உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?
ஒளியியல் மாயை புகைப்படம் என்றால் என்ன?
ஒளியியல் மாயை புகைப்படம் என்பது ஒரு வகையான விளையாட்டாகும். இந்த ஒளியியல் மாயை புகைப்படங்கள் பார்ப்பதற்கு ஒரே புகைப்படம் போல தோன்றும். ஆனால், அந்த புகைப்படத்தில் பல வகையான உருவங்கள் இடம்பெற்றிருக்கும். அந்த புகைப்படத்தை உற்று கவனிக்கும்போது தான் அதில் பல உருவங்கள் இடம்பெற்றிருப்பது தெரிய வரும். இத்தகைய ஒளியியல் மாயை புகைப்படங்கள் மனிதர்களின் அறிவுத் திறனை மேம்படுத்த மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த நிலையில், தற்போது இணையத்தில் ஒரு ஒளியியல் மாயை புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : Optical Illusion : அணில் கூட்டத்தில் மறைந்திருக்கும் எலியை கண்டுபிடிக்க முடியுமா.. 10 நொடிகள் தான் அவகாசம்!
இணையத்தில் வைரலாகி வரும் ஒளியியல் மாயை புகைப்படம்
தற்போது இணையத்தில் வைரலாகி வரும் அந்த ஒளியியல் மாயை புகைப்படத்தில், இலைகள் நிறைந்துள்ளன. ஆனால், அந்த இலைகளுக்கு நடுவே பூனை ஒன்று மறைந்துள்ளது. இந்த புகைப்படத்தை உற்று கவனிக்கும்போது தான், புகைப்படத்தில் மறைந்திருக்கும் பூனையை உங்களால் கண்டுபிடிக்க முடியும். அவ்வாறு புகைப்படத்தில் இலைகளுக்கு நடுவே மறைந்திருக்கும் பூனையை நீங்கள் வெறும் 30 நொடிகளில் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் உஙக்ளால் மூளை மற்றும் அறிவுத் திறன் மிகவும் கூர்மையாக உள்ளது என்று அர்த்தம். எனவே, கீழே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தை வைத்து உடனே உங்கள் அறிவுத் திறனை சோதித்து பாருங்கள்.
பூனையை கண்டுபிடிக்க முடியவில்லையா?
கொடுக்கப்பட்ட 8 நொடிகளில் இலைகளுக்கு நடுவே மறைந்திருக்கும் பூனையை நீங்கள் கண்டுபிடித்து விட்டீர்கள் என்றால் உங்களது அறிவுத் திறன் மற்றும் கண் பார்வை மிகவும் கூர்மையாக உள்ளது என்று அர்த்தம். ஒருவேளை நீங்கள் புகைப்படத்தில் மறைந்திருக்கும் பூனையை கண்டுபிடிக்கவில்லை என்றால் கவலை வேண்டாம். பூனையை கண்டுபிடிக்க உங்களுக்கு நாங்கள் உதவி செய்கிறோம்.
இதையும் படிங்க : Optical Illusion : கூர்மையான பார்வை கொண்டவரா நீங்கள்.. படத்தில் மறைந்திருக்கும் ஆமையை 5 விநாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?
புகைப்படத்தில் பூனை எங்கே இருக்கிறது?
புகைப்படம் முழுவதும் இலைகள் நிறைந்துள்ளது. அதில் புகைப்படத்தின் இடது பக்கத்தில் தான் பூனை மறைந்திருக்கிறது. இலைகளுக்கு நடுவே ஆங்காங்கே இலைகளின் நிழல் படர்ந்துள்ளது. அதனால் பூனை மறைந்திருப்பதை உங்களால் அவ்வளவு எளிதாக கண்டுபிடிக்க முடியாது. புகைப்படத்தின் இடது பக்கத்தில் ஒன்றின் பின் ஒன்று அமைந்திருக்கும் இலைகளுக்கு நடுவே தான் பூனை இருக்கிறது. அதை பார்ப்பதற்கு மற்ற இடங்களில் இருக்கும் நிழலை போல தான் இருக்கும். ஆனால் நீங்கள் அதை உற்று கவனித்தீர்கள் என்றால் பூனையின் காதுகளை உங்களால் பார்க்க முடியும். கருப்பு நிற பூனை தான் அங்கு மறைந்துள்ளது. அதன் முகம் மட்டும் அந்த இலைகளுக்கு நடுவே தெரிகிறது.