Optical Illusion : அணில் கூட்டத்தில் மறைந்திருக்கும் எலியை கண்டுபிடிக்க முடியுமா.. 10 நொடிகள் தான் அவகாசம்!
Mind Game | தற்போது இணையத்தில் வைரலாகி வரும் அந்த ஒளியியல் மாயை புகைப்படத்தில் 50-க்கும் மேற்பட்ட அணில்கள் இடம்பெற்றுள்ளன. அவை பிரவுன், ஆரஞ்சு என 3 நிறங்களில் ஏராளமான அணில்கள் உள்ளன. அந்த புகைப்படத்தை பார்க்கும்போது அது முழுவதும் அணில்கள் நிறைந்து காணப்படுகிறது.
இணையத்தில் அவ்வப்போது சில ஒளியியல் மாயை புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வரும். அந்த வகையில் தற்போதும் ஒரு ஒளியியல் மாயை புகைப்படம் வெளியாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் அணில் கூட்டம் ஒன்று இடம் பெற்றுள்ளது. அந்த புகைப்படத்தை பார்ப்பதற்கு அணில் கூட்டம் போல தோன்றினாலும், அந்த புகைப்படத்தில் ஒரே ஒரு எலி மறைந்திருக்கிறதாம். அந்த எலியை கண்டுபிடிக்க வேண்டியது தான் தற்போதைய டாஸ்க். இந்த புகைப்படத்தில் மறைந்திருக்கும் எலியை கண்டுபிடிக்க வெறும் 10 நொடிகள் தான் கால அவகாசம் வழங்கப்படுள்ளது. அவ்வாறு 10 நொடிகளுக்குள் புகைப்படத்தில் மறைந்திருக்கும் எலியை கண்டுபிடிக்கும் நபர்களின் மூளை திறம் மிக கூர்மையாக இருக்கும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க : Optical Illusion : இரவில் ரகசியமாக வெளியே சென்று வந்த குழந்தை யார்.. வெறும் 5 நொடிகளில் உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?
ஒளியியல் மாயை புகைப்படம் என்றால் என்ன?
ஒளியியல் மாயை என்பது ஒரு வகையான புதிர் விளையாட்டு ஆகும். இந்த புதிர் விளையாட்டு புகைப்பட வடிவத்தில் இருக்கும். அதாவது ஒரே ஒரு புகைப்படத்தில் பல உருவங்கள் இடம் பெற்றிருக்கும். இந்த ஒளியியல் மாயை புகைப்படங்களை முதலில் பார்க்கும் எவருக்கும் அது ஒரே ஒரு புகைப்படம் என்றே தோன்றும். ஆனால், அந்த புகைப்படத்தை உற்று கவனிக்கும் போதுதான் அதில பல உருவங்கள் இடம் பெற்றிருப்பதை நம்மால் கண்டுபிடிக்க முடியும். தற்போது அத்தகைய புகைப்படம் ஒன்றுதான் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் இருக்கும் புதிரை 10 விநாடிகளுக்குள் கண்டுபிடிக்கும் நபர்களின் மூளை திறன் மிக சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. உங்களால் அந்த புதிரை கண்டுபிடிக்க முடிகிறதா என்பதை சோதித்து பாருங்கள்.
இதையும் படிங்க : Optical Illusion : கூர்மையான பார்வை கொண்டவரா நீங்கள்.. படத்தில் மறைந்திருக்கும் ஆமையை 5 விநாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?
இணையத்தில் வைரலாகு ஒளியியல் மாயை புகைப்படம்
தற்போது இணையத்தில் வைரலாகி வரும் அந்த ஒளியியல் மாயை புகைப்படத்தில் 50-க்கும் மேற்பட்ட அணில்கள் இடம்பெற்றுள்ளன. அவை பிரவுன், ஆரஞ்சு என 3 நிறங்களில் ஏராளமான அணில்கள் உள்ளன. அந்த புகைப்படத்தை பார்க்கும்போது அது முழுவதும் அணில்கள் நிறைந்து காணப்படுகிறது. ஆனால், அந்த அணில் கூட்டத்தில் ஒரு எலி மறைந்திருக்கிறதாம். அந்த எலியை கண்டு பிடிப்பவர்களுக்கு புத்தி கூர்மை அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால் புகைப்படத்தில் மறைந்திருக்கும் எலியை கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதல்ல. காரணம், அந்த எலியும் அணில்களை போலவே தோற்றம் அளிப்பதால் அதை எளிதாக கண்டுபிடிக்க முடியாது.
இதையும் படிங்க : Optical Illusion : உங்களுக்கு முதலில் தெரிந்தது காகமா, முகமா?.. அதை வைத்தே உங்கள் ஆளுமை பண்பை சொல்லாம்!
விடையை கண்டுபிடிக்க முடியவில்லையா?
புகைப்படத்தில் மறைந்திருக்கும் எலியை உங்களால் கண்டு பிடிக்க முடியவில்லையா. கவலை வேண்டாம், அதற்கான விடையை நாங்களே சொகிறோம். இணையத்தில் வைரலாகும் அந்த ஒளியியல் மாயை புகைப்படத்தில், இரண்டாவது வரியில் தான் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய எலி உள்ளது. எலியும் மற்ற அணில்களை போலவே ஒரே நிறத்தில் இருப்பதால், அதை கண்டுபிடிப்பது சற்று சவாலானது தான். ஆனால், காதுகளை வைத்து மிக எளிதாக எலியை கண்டுபிடித்து விடலாம். படத்தில் இடம்பெற்றிருக்கும் அணில்களின் காதுகள் மிக நீளமாக இருக்கும். ஆனால், எலியின் காதுகளோ பெரியதாக வளைந்த வடிவில் இருக்கும். இந்த ஒரு வித்தியாசத்தை வைத்து புகைப்படத்தில் மறைந்திருக்கும் எலியை சுலபமாக கண்டுபிடித்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.