5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Optical Illusion : “FUN”-க்கு நடுவில் மறைந்திருக்கும் “SUN”.. 10 விநாடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா?

Intelligence | இந்த புகைப்படத்தில் நூற்றுக்கணக்கான "FUN" என்ற வார்த்தைகள் நிறைந்துள்ளன. அவற்றில், "SUN" என்ற வார்த்தையை கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் டாஸ்க். இந்த புகைப்படத்தில் "SUN" என்ற வார்த்தையை 10 விநாடிகளுக்குள் கண்டுபிடிப்பவர்களின் கண் பார்வை மற்றும் மூளை திறன் சிறப்பாக உள்ளது என கூறப்படுகிறது.

Optical Illusion : “FUN”-க்கு நடுவில் மறைந்திருக்கும் “SUN”.. 10 விநாடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா?
ஒளியியல் மாயை
vinalin
Vinalin Sweety | Published: 16 Nov 2024 17:49 PM

சமீப காலமாக ஒளியியல் மாயை புகைப்பட விளையாட்டுக்கள் பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளன. அந்த வகையில் தற்போது ஒரு ஒளியியல் மாயை புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.  இந்த புகைப்படம் மற்ற ஒளியியல் மாயை புகைப்படங்களை போன்றது அல்ல. அதாவது, இந்த ஒளியியல் மாயை ஒரே புகைப்படத்தில் பல உருவங்கள் இடம் பெற்றிருக்கும் புகைப்படம் அல்ல. இந்த ஒளியியல் மாயை, பல எழுத்துக்களை கொண்டுள்ளது. இந்த புகைப்படத்தில் நூற்றுக்கணக்கான “FUN” என்ற வார்த்தைகள் நிறைந்துள்ளன. அவற்றில், “SUN” என்ற வார்த்தையை கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் டாஸ்க். இந்த புகைப்படத்தில் “SUN” என்ற வார்த்தையை 10 விநாடிகளுக்குள் கண்டுபிடிப்பவர்களின் கண் பார்வை மற்றும் மூளை திறன் சிறப்பாக உள்ளது என கூறப்படுகிறது. உங்களால் 10 விநாடிகளுக்குள் கண்டுபிடிக்க முடிகிறதா என்பதை சோதித்து பாருங்கள்.

இதையும் படிங்க : Optical Illusion : 9-களுக்கு நடுவில் மறைந்திருக்கும் “6”.. வெறும் 5 விநாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?

ஒளியியல் மாயை புகைப்படங்கள் என்றால் என்ன?

ஒளியியல் மாயை புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் மிகவும் பிரபலமாக உள்ள விளையாட்டாக உள்ளது. பொதுவாக இணையத்தில் வைரலாகும் ஒளியியல் மாயை புகைப்படங்களில், ஒரே புகைப்படத்தில் வெவ்வேறு உருவங்கள் இடம் பெற்றிருக்கும். மனிதர்கள் அந்த புகைப்படத்தை உற்று கவனிக்கும் போதுதான், அதில் பல உருவங்கள் அடங்கியுள்ளதை என்பதை அவர்களால் கண்டறிய முடியும். அவ்வாறு அது, ஒரு ஒளியியல் மாயை புகைப்படம் என தெரியாமல் அந்த புகைப்படத்தை பார்க்கும் நபருக்கு, முதலில் அந்த புகைப்படத்தில் இருந்து ஏதேனும் ஒரு உருவம் மட்டுமே தெரியும்.

பண்புகளை அறிய உதவும் ஒளியியல் மாயை

இந்த ஒளியியல் மாயை புகைப்படம் அதனை பார்க்கும் ஒவ்வொருக்கும், ஒவ்வொரு மாதிரியான விடையை தரும். அவ்வாறு இந்த ஒளியியல் மாயை புகைப்படங்களை பார்ப்பவர்களுக்கு வேறு, வேறு உருவம் தெரிவதற்கு பின்னால் ஒரு உலவியல் காரணம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமன்றி இந்த ஒளியியல் மாயை புகைப்படங்கள் மூலம் ஒருவரின் பண்புகளை தெரிந்துக்கொள்ள முடியும் என கூறப்படுகின்றது. இந்த நிலையில், தற்போதை இணையத்தில் வைரலாகும் ஒளியியல் மாயை புகைப்படம் குறித்து பார்ப்போம்.

இதையும் படிங்க : Optical Illusion : கூர்மையான பார்வை கொண்டவரா நீங்கள்.. படத்தில் மறைந்திருக்கும் ஆமையை 5 விநாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?

எழுத்துக்கள் நிறைந்த ஒளியியல் மாயை

தற்போது இணையத்தில் வைரலாகு ஒளியியல் மாயை புகைப்படத்தில் மஞ்சள் நிறத்தில், கருப்பு நிற எழுத்துக்களால் FUN என எழுதப்பட்டுள்ளது. அந்த புகைப்படம் முழுவது அந்த எழுத்து மட்டுமே உள்ளது. படம் முழுவதும் FUN என எழுதப்பட்டிருக்கும் நிலையில், ஒரே ஒரு இடத்தில் மட்டும் SUN என எழுதப்பட்டுள்ளது. அதை கண்டுபிடிப்பதுதான் விளையாட்டு. பெரும்பாலானவர்களால் அந்த எழுத்தை அவ்வளவு எளிதாக கண்டுபிடித்துவிட முடியாது. அவ்வாறு நீங்கள் சுலபமாக அதை கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால், உங்களது கண்களும், மூளையும் மிகவும் கூர்மையாக உள்ளது என அர்த்தம். அந்த எழுத்தை கண்டுபிடிப்பதற்கு உங்களுக்கான நேரம் வெறும் 10 விநாடிகள் மட்டும்தான்.

இதையும் படிங்க : Personality Test : இளவேனில் முதல் குளிர் காலம் வரை.. உங்களுக்கு பிடித்த காலமே உங்கள் பண்புகளை சொல்லும்!

கண்டுபிடிக்கவில்லை

10 விநாடிகளுக்குள் உங்களால் அந்த எழுத்தை கண்டுபிடிக்க முடியவில்லையா. சரி, நாங்களே அதற்கான விடையை கூறுகிறோம். புகைப்படத்தில் 3வது வரியில் வலது புறமாக உள்ளது நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய “SUN” வார்த்தை. இந்த விளையாட்டில் நீங்கள் வெற்றி பெறவில்லை என கவலை வேண்டாம். இதுபோன்ற விளையாட்டுகளில் தொடர்ந்து பங்கேற்பதன் மூலம் எளிதாக வெற்றி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News