Viral Video: காருக்கே இறுதிச் சடங்கு செய்த விவசாயி.. 4 லட்சம் செலவு.. யார்ரா இவரு?

குஜராத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் தனக்கு சொந்தமான பழைய காருக்கு ரூ.4 லட்சம் செலவு செய்து இறுதிச் சடங்குகள் நடத்தி அடக்கம் செய்த வினோ சம்பவம் நிகழ்ந்துள்ளது. குடும்பத்திற்கு அதிருஷ்டம் தந்த காரை தங்கள் சந்ததியினர் நினைவுகூர வேண்டும் என்பதற்காக அடக்கம் செய்யப்பட்டது என்று அவர் கூறினார்.

Viral Video: காருக்கே இறுதிச் சடங்கு செய்த விவசாயி.. 4 லட்சம் செலவு.. யார்ரா இவரு?

காருக்கு இறுதிச் சடங்கு

Updated On: 

09 Nov 2024 15:49 PM

இறந்தவர்களை நினைவுகூரும் விதமாக இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மனிதர்களுக்கு இறுதிச் சடங்கு நடத்துவதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால், நம் ஊரில் காருக்கே ஒருவர் இறுதிச் சடங்கு நடத்திய வினோத நிகழ்வு நடந்துள்ளது. அது வேறு எங்கும் இல்லை குஜராத் மாநிலத்தில் தான்.  குஜராத்தில் உள்ள ஒரு குடும்பம் பாரம்பரிய சடங்குகளுடன் காருக்கு இறுதி சடங்கு செய்துள்ளனர். குஜராத் அம்ரேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சஞ்சய் போலாரா. இவர் 12 ஆண்டுகளுக்கு முன் வேகன் ஆர் காரை வாங்கி உள்ளார்.

காருக்கே இறுதிச்சடங்கு செய்த விவசாயி

அந்த காரை தங்கள் அதிர்ஷ்டமாக எண்ணி அதை பொக்கிஷமாக வைத்து அவரது குடும்பத்தினர் பாதுகாத்து வந்தனர். எனினும் கார் பழையதாகி விட்டதால் அதனை பயன்படுத்த முடியாமல் போனது.

இந்த நிலையில், அந்த காருக்கு பிரியாவிடை கொடுக்கும் விதமாக உயிரிழந்தவர்களுக்கு செய்வது போல் இறுதி சடங்குகளை சஞ்சய் போலாரா குடும்பத்தினர் செய்துள்ளனர். இந்து முறைப்படி இறுதிச் சடங்கு செய்யப்பட்டு வண்ண மலர்களால் அலகரிக்கப்பட்ட அந்த கார், ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு குழிதோண்டி புதைக்கப்பட்டது.

கிராமத்தில் உள்ள பண்ணை இல்லத்தில் இறுதிச் சடங்கு நடத்தப்பட்டு கார் புதைக்கப்பட்டது. இந்த இறுதிச் சடங்கு நிகழ்வில் சுமார் 1,500 பேர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.  12 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய காரை புதைப்பதற்காக 15 அடி ஆழத்தில் குழி தோண்டப்பட்டது.

Also Read : முதலமைச்சரின் சமோசாவை சாப்பிட்டது தப்பு.. இமாச்சலில் 5 பேருக்கு நோட்டீஸ்!

வைரல் வீடியோ

அந்த கார் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, பச்சை நிற துணியால் மூடி இருந்தது. மேலும், புல்டோசர் உதவியுடன் கார் குழிக்குள் இறக்கப்பட்டது. உயிரிழந்தவர்களுக்கு செய்வது போல சஞ்சய் போலாரா குடும்பத்தினர் காருக்கு இறுதிச் சடங்கு செய்தனர்.

மேலும், மலர் தூவி காருக்கு இறுதி மரியாதை அவர்கள் செலுத்தினர். அங்கிருந்தவர்களுக்கு இறுதிச் சடங்கு மந்திரங்களை கூறி, மலர் தூவி இறுதி மரியாதை செலுத்தினர். இறுதியாக பொக்லைன் மூலம் கார் மீது மண்டு கொட்டப்பட்டு முழுமையாக மூடப்பட்டது.


தொடர்ந்து, இறுதிச் சடங்கில் கலந்து கொண்டவர்களுக்கு உணவும் வழங்கப்பட்டது.  இதற்கு மொத்தம் ரூ.4 லட்சம் செலவு செய்தார் சஞ்சய் போலாரா. இது தொடர்பான வீடியோ காட்சிகளுக்கு சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. குடும்பத்திற்கு அதிர்ஷ்டம் தந்த காரை தங்கள் சந்ததியினர் நினைவுகூர அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டதாக சஞ்சய் போலாரா கூறியுள்ளார்.

Also Read : உருவானது ஏஐ வழக்கறிஞர்.. வியந்து பார்த்த தலைமை நீதிபதி.. வைரல் வீடியோ!

காரணத்தை சொன்ன குஜராத் விவசாயி

சூரத்தில் கட்டுமானத் தொழிலை செய்து வரும் சஞ்சய் போலாரா, தனது குடும்பத்தின் வெற்றியில் கார் முக்கியப் பங்கு வகித்ததாகப் பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து சஞ்சய் போலாரா கூறுகையில், “நான் இந்த காரை ஏறக்குறைய 12 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கினேன். இந்த காரை வாங்கியதில் இருந்து எங்களது குடும்பத்திற்கு செழிப்பை கொடுத்தது.

நாங்கள் தொழிலில் மகத்தான வெற்றியைக் கண்டோம். மேலும் எங்கள் பொருளாதார நிலையும் மேம்பட்டது. இந்த கார் எங்கள் குடும்பத்திற்கு அதிர்ஷ்டத்தை தந்ததாக நம்புகிறேன். எனவே அதனை விற்பனை செய்வதற்கு பதிலாக எனது பண்ணையில் முழு மரியாதையுடன் அடக்கம் செய்ய முடிவு எடுத்தேன்.

கார் புதைத்த இடத்தில் மரக்கன்றுகளை நட இருக்கிறோம். குடும்பத்திற்கு அதிர்ஷ்டம் தந்த காரை தங்கள் சந்ததியினர் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துவார்கள்” என்றார்.  குஜராத்தில் உள்ள ஒரு குடும்பம் பாரம்பரிய சடங்குகளுடன் காருக்கு இறுதி சடங்கு செய்துள்ள வினோத சம்பவம் பார்ப்போரை வியப்படைய வைத்தது.

இணையத்தை கலக்கும் பார்வதியின் நியூ லுக்
சன் டிவியா? விஜய் டிவியா? இந்த வாரம் டிஆர்பி-யில் முந்தியது யார்
மன அழுத்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி?
குளிர்காலத்தில் நாம் செல்ல முடியாத இந்தியாவின் இடங்கள்!