5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Viral Video : காட்டில் பதிவு செய்யப்பட்ட “Big Foot” வீடியோ? அதில் இருக்கும் ராட்சத விலங்கு உண்மையானதா?

Big Foot | இந்த வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இது உண்மையில்லை, பிக் ஃபூட் விலங்கின் தோற்றம் இவ்வளவு துல்லியமாக தெரிய வாய்ப்பே இல்லை என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். மெற்றொருவர், பிக் ஃபூட் ஏன் மனிதர்களை போல நடக்கிறது. அதற்கும் மனிதர்களுக்கு ஒரே மாதிரியான உடல் அமைப்பு உள்ளதா என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

Viral Video : காட்டில் பதிவு செய்யப்பட்ட “Big Foot” வீடியோ? அதில் இருக்கும் ராட்சத விலங்கு உண்மையானதா?
இணையத்தில் வைரலாகும் வீடியோ
Follow Us
vinalin
Vinalin Sweety | Published: 04 Oct 2024 12:25 PM

அமெரிக்காவின் ஓக்லஹோமாவில் உள்ள காட்டு பகுதியில் ராட்சத உருவம் கொண்ட “Big Foot” என்று அழைக்கப்படும் உயிரினத்தை தான் பார்த்ததாக ஹைக்கிங் சென்ற நபர் ஒருவர் தெர்வித்துள்ளார். அதுமட்டுமன்றி, அது குறித்த வீடியோ காட்சிகளையும் அவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், Big Foot என்ற உயிரினம் உண்மையாகவே உள்ளது, அந்த ஹைக்கர் வெளியிட்ட வீடியோவில் இருப்பது Big Foot தானா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Big Foot மிருகத்தை நேரில் கண்டதாக பதிவிட்ட நபர்

ஓக்லஹோமாவின் லாடன் பகுதியில் உள்ள பேர்லல் காட்டு பகுதியில் மனித தோற்றம் கொண்ட ராட்சத உயிரினத்தை தான் கண்டதாக ஹைக்கர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “இதை என் வாழ்வின் பயங்கரமன நிமிடங்களாக கருதுகிறேன். பேர்லல் காட்டு பகுதியில் Big Foot மிருகத்தை எனது கேமராவில் நான் பதிவு செய்துள்ளேன். காட்டுக்குள் நான் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போதுதான் தூரத்தில் எதோ இருப்பதை கண்டேன். இதை நான் டைப் செய்யும்போது கூட எனது கைகள் நடுங்குகின்றன” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க : Viral Video : பள்ளி கட்டணம் செலுத்தாத மாணவர்கள்.. பள்ளிக்கு வெளியே அமர வைத்த நிர்வாகம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து

இந்த வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இது உண்மையில்லை, பிக் ஃபூட் விலங்கின் தோற்றம் இவ்வளவு துல்லியமாக தெரிய வாய்ப்பே இல்லை என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். மெற்றொருவர், பிக் ஃபூட் ஏன் மனிதர்களை போல நடக்கிறது. அதற்கும் மனிதர்களுக்கு ஒரே மாதிரியான உடல் அமைப்பு உள்ளதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க : Viral Photo : சக்கர நாற்காலி வழங்காத விமான நிர்வாகம்.. கழிவறைக்கு தவழ்ந்து சென்ற செய்தியாளர்.. வைரல் புகைப்படம்!

Big Foot விலங்கு உண்மையில் இருக்கிறதா?

இந்த பிக் ஃபூட் விலங்கு குறித்து பல காலங்களாக பேசப்பட்டு வருகிறது. இந்த விலங்கு அதிக உயரம், பெரிய கால்கள் மற்றும் மனிதர்களை போல தோற்றம் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. எனினும் அது குறித்து இதுவரை எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Viral Video : ஓடும் பைக்கில் ரொமான்ஸ் செய்த ஜோடி.. வலுக்கும் கண்டம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இணையத்தில் மிக விரைவாக வைரலாகும் வீடியோ

சமூக ஊடகங்களின் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், எந்த ஒரு அசாத்தியமான அல்லது ஆச்சர்யமான விஷயம் என்றாலும் அது எளிதாக இணையத்தில் வைரலாகி விடுகிறது. முன்பெல்லாம் வெளி மாநிலங்களிலோ அல்லது வெளி நாடுகளிலோ ஏதேனும் அசாத்தியமான அல்லது முக்கிய நிகழ்வுகள் நடந்தால் அது தெரிய வருவதற்கே ஒரு நாள் ஆகிவிடும். ஆனால் இப்போது அப்படியெல்லாம் இல்லை. சம்பவம் நடந்த சில நொடிகளிலேயே தகவல சென்று சேர்ந்து விடுகிறது. இவ்வாறு செய்தி விரைவாக சென்று சேர்வது பல வகைகளில் நன்மையாக இருக்கிறது.

Latest News