Viral Video : கணவனின் ரத்தம் படிந்த படுக்கை.. மனைவியை வைத்து சுத்தம் செய்த மருத்துவமனை!

Madhya Pradesh | மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் சிவராஜ், ரோஷினி தம்பதி. இவர்கள் பெற்றோரின் தடையை மீறி கடந்த 2016 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துக்கொண்டுள்ளனர். தற்போது இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன.

Viral Video : கணவனின் ரத்தம் படிந்த படுக்கை.. மனைவியை வைத்து சுத்தம் செய்த மருத்துவமனை!

வைரல் வீடியோ

Updated On: 

05 Nov 2024 19:15 PM

நில தகராறில் உயிரிழந்த கணவன் படுத்திருந்த படுக்கையை, கர்ப்பிணி மனைவியை மருத்துவ நிவாகம் சுத்தம் செய்ய வைத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், மருத்துவமனையின் இந்த மனிதாபிமானம் அற்ற செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையி, இந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Viral Video : இடம் இல்லாததால், ரயில் பெட்டியில் படுக்கை தயாரித்த பயணி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

ஆட்டோ ஓட்டுநருக்கு நேர்ந்த கொடூரம்

மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் ஷிவராஜ், ரோஷினி தம்பதி. இவர்கள் பெற்றோரின் தடையை மீறி கடந்த 2016 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துக்கொண்டுள்ளனர். தற்போது இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஷிவராஜ் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றிவரும் நிலையில், கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி அதாவது தீபாவளி பண்டிகை அன்று ஷிவராஜை எதிர்ப்பர்த்து அவரது மனைவி ரோஷினி மற்றும் இரண்டு மகள்கள் காத்துக்கொண்டிருந்துள்ளனர்.

இதையும் படிங்க : Viral Video: விபத்தில் சிக்கிய இந்திய போர் விமானம்.. நூலிழையில் உயிர்தப்பிய விமானிகள்.. திக்திக் வீடியோ!

நில தகராறில் கொலை வெறி தாக்குதலுக்கு உள்ளான குடும்பம்

ஆனால் ஷிவாராஜ் வருகைக்கு பதிலாக போன் கால் வந்துள்ளது. அதாவது நில தகராறில் ஷிவாரஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அவரது உறவினர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் ஷிவராஜ், அவரது சகோதரர் ரகுராஜ் மற்றும் அவர்களது தந்தை தர்மா ஆகியோர் பலத்த தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். இதில் ஷிவராஜ் மற்றும் அவரது தந்தை தர்மராஜ் தர்மா ஆகியோர் உயிரிழந்த நிலையில், ஷிவாராஜின் சகோதரர் ரகுராஜ் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையும் படிங்க : Nellai Crime News: ”அதிக லக்கேஜ் ஏன் ஏத்துற?” பயணி கன்னத்தில் அறைந்த நடத்துனர்.. அதிர்ச்சி வீடியோ!

கர்ப்பிணி மனைவியை படுக்கையை சுத்த செய்ய வைத்த மருத்துவமனை

இந்த விவகாரம் குறித்து ரோஷினி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர் நில மோசடி தகராறில் தங்கள் குடும்பத்தில் உள்ள அனைத்து ஆண்களும் உயிரிழந்துவிட்டதாகவும், தான் ஒரே பெண் மட்டும் மிஞ்சியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தனது இரண்டு பெண் குழந்தைகளும் அப்பாவை கேட்டுக்கொண்டே இருப்பதாகவும், அடித்து கொலை செய்யப்பட்டதில் தனது கணவரின் முகம் சிதைந்துள்ள நிலையில், குழந்தைகளால் அடையாளம் கண்டுக்கொள்ள முடியவில்லை என்றும் வலியுடன் பேசியுள்ளார்.

இதையும் படிங்க : Viral Video: சிறுவனை பலி வாங்கிய சைக்கிள் சாகசம்.. அதிர்ச்சியடைய வைக்கும் காட்சிகள்!

மருத்துவமனைக்கு வலுக்கும் கண்டனங்கள்

தொடர்ந்து பேசிய ரோஷினி தான் 5 மாதங்கள் கர்ப்பமாக இருப்பதகாவும் தனது குழந்தைக்கு எப்படி தந்தையை காட்டுவது என்றும் அவர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த போது தனக்கு நடைபெற்ற கசப்பான சம்பவத்தை அவர் பகிர்ந்துள்ளார். அதாவது, உறவினர்கள் தாக்கியதால் பலத்த காயமடைந்த தனது கணவனை மருத்துவமனையில் அனுமதித்திருந்த நிலையில், அவர் சிகிச்சை பல்னின்றி உயிரிழந்தார். அவர் இறந்த பிறகு அவரை படுக்க வைத்திருந்த படுக்கை ரத்தக்கரை ஆனதால், அதனை தன்னை சுத்தம் செய்யுமாறு மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டதாகவும் தனது கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க : Viral Video : “Alexa Launch the Rocket”.. நவீன முறையில் பட்டாசு வெடித்த இளைஞர்.. இணையத்தை கலக்கும் வீடியோ!

மருத்துவமனையின் இந்த இறக்கமற்ற செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!