தூக்கி எறியப்பட்ட சிகரெட் துண்டுகளில் அழகிய பொம்மை.. இந்திய இளைஞர் அசத்தல்!
beautiful toys from cigarette butts: தூக்கி எறியப்படும் சிகரெட் துண்டுகளில் இருந்து அழகிய பொம்மைகளை உருவாக்கி சாதனை படைத்து வருகிறார் இந்திய இளைஞர் நமன் குப்தா.
இன்றைய காலத்தில் இளைஞர்கள் மத்தியில் மிகவும் ஆபத்தான பழக்கமாக புகைபிடித்தல் உள்ளது. இது ஓர், ஆபத்தான பழக்கமாகும். மேலும், இந்தப் பழக்கம் புற்றுநோய் உள்ளிட்ட கடுமையான உடல் நலப் பிரச்னைகளுக்கு காரணமாகிறது.
எனினும், புகைப் பிடித்தல் பழக்கத்தில் சிக்கிய நபர்கள் அதிலிருந்து விடுபடுவதாக இல்லை. அதில், தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர்.
சிகரெட் குப்பையில் உருவாகும் பொம்மை
சிகரெட் துண்டுகளை குப்பையாக தூக்கி வீசுகின்றனர். இந்தப் சுற்றுச்சூழல் பிரச்சினைக்கு பதிலளிக்கும் விதமாக, நொய்டாவைச் சேர்ந்த நமன் குப்தா செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், இவரின் வீடியோ சமீபத்தில் இணையத்தில் வைரலானது. அந்த வீடியோவில், நமன் குப்தா தூக்கி எறியப்பட்ட சிகரெட் துண்டுகளை சிறிய சிறிய கரடி பொம்மைகளாக மாற்றும் வழிமுறையை காண்பிக்கிறார்.
இதையும் படிங்க : பாகிஸ்தான் டிக்டாக் பிரபலம் இம்ஷா ரெஹ்மான் வீடியோ வைரல்: மற்றொரு நடிகைக்கும் சிக்கல்!
நொய்டா இளைஞர் நமன் குப்தா
முதலில் இந்த வீடியோ, “ஆண்டுதோறும் 4.5 டிரில்லியன் சிகரெட் துண்டுகள் உலகம் முழுவதும் பொதுவான குப்பைகளாக வீசப்படுகின்றன” எனத் தொடங்குகிறது.
மேலும், இந்த வீடியோவில் குப்தா, சிகரெட் துண்டுகளை மறுசுழற்சி செய்யும் முறையை விளக்குகிறார். இதையடுத்து, பிரித்தெடுக்கப்பட்ட இந்த சிகரெட் துண்டுகள் 24 மணிநேர மக்கும் மறுசுழற்சி செயல்முறைக்கு உட்படுகின்றன. அதன் பிறகு அவை மீண்டும் உருவாக்கப்படுகின்றன.
View this post on Instagram
இந்தப் பொம்மைகள் சுற்றுச் சூழல் மற்றும் குழந்தைகள் பயன்படுத்த உகந்தவை என உத்தரவாதம் அளிக்கிறார் நமன் குப்தா. இவரின் இந்தச் செயல் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மறுசுழற்சி ஏன்? நமன் குப்தா பேட்டி
இந்நிலையில் இது குறித்து பேசிய நமன் குப்தா, “நமது இளைஞர்களுடன் தொடர்புடைய ஒரு பொருளைத் தயாரிக்க திட்டமிட்டேன். சிகரெட் நமது நாட்டின் அழகிய சூழலை மாசுபடுத்துகிறது. உடலுக்கும் சுற்றுச்சூழலுக்கும் தீங்கிழைக்கிறது.
மேலும், தூக்கி எறியப்படும் இந்தச் சிகரெட் துண்டுகள் நமது அழகிய சூழலை மாசுபடுத்துகின்றன. இந்த விழிப்புணர்வை இளைஞர்களுக்கு அளிக்க விரும்புகிறேன். இந்த விஷயத்தில் மனிதாபிமானமாக சிந்திக்க வேண்டும். நாம் அனைவரும் ஒன்றாகச் செயல்பட்டால், இந்தப் பிரச்சனையைத் தீர்க்க முடியும். இதற்கு சிகரெட் கழிவுகளை மறுசுழற்சி செய்வது அவசியம்” என்றார்.
இதையும் படிங்க : மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது அதிகரிக்கிறதா? காட்டுத் தீப் போல் பரவும் செய்தி.. உண்மை என்ன?