5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ஃபென்கல் புயல்.. சென்னையில் தரையை தொட்டு, பறந்த விமானம்.. ஷாக்கிங் வீடியோ!

Cyclone Fengal: ஃபென்கல் புயல் காரணமாக சென்னையில் மோசமான வானிலை நிலவியது. இதன் காரணமாக இண்டிகோ விமானம் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இது தொடர்பான ஷாக்கிங் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

ஃபென்கல் புயல்.. சென்னையில் தரையை தொட்டு, பறந்த விமானம்.. ஷாக்கிங் வீடியோ!
இண்டிகோ விமானம் வைரல் வீடியோ
jayakrishnan-ramakrishnan
Jayakrishnan Ramakrishnan | Published: 01 Dec 2024 15:53 PM

சென்னையில் இண்டிகோ விமானம் தரையிறங்குவதில் சிக்கல் : ஃபென்கல் புயல் வட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை (டிச.1,2024) அதிகாலை கரையைக் கடந்தது. இந்தப் புயல் காரணமாக, தமிழ்நாடு மற்றும் அண்டை யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் வியாழக்கிழமை (நவ.28, 2024) முதல் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, சென்னை விமான நிலையம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணி வரை மூடப்பட்டது. இந்நிலையில், இண்டிகோ ஏர்லைன்ஸின் ஏர்பஸ் ஏ320 நியோ விமானம் சூறாவளி புயலின் போது தரையிறங்க போராடும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

தரையிறங்க தடுமாறிய விமானம்

அந்த வீடியோவில், கன மழை மற்றும் பலத்த காற்றின் போது இண்டிகோ விமானம் தரையைத் தொட மேல் இருந்து கீழ்நோக்கி தயாராகவரும்.

ஆனால், விமானத்தின் சக்கரங்கள் தரையில் இருந்து ஒரு அங்குலத்தை அடையும் போது, ​​​​அது மீண்டும் பறந்து, தரையிறங்குவதை நிறுத்திவிடும். இந்தக் காணொலி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. மேலும், இந்த விமானக் காட்சிகள் காண்போரை கெதி கலங்க செய்துள்ளன.

இதையும் படிங்க : மோனிஷா ராணியா இல்லை மோனிகா பாபியா? ஓர் பெயர் சூட்டுங்க!

ஷாக்கிங் வீடியோ

இந்த ஷாக்கிங் வீடியோவை பலரும் சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர். @aviationbrk என்ற டவிட்டர் தளத்திலும் வீடியோ பகிரப்பட்டுள்ளது.
அதில், “ஃபெங்கல் புயல் புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என்பதால், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சவாலான சூழ்நிலைகள் உள்ளன. அடுத்த மூன்று அல்லது நான்கு மணி நேரத்தில் தமிழகத்தில் புயல் கரையை கடக்கும். மருத்துவமைனகள் கூட பாதிக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம்

இதற்கிடையில், இந்திய வானிலை ஆய்வு மையம், “ஃபென்கல் (Fengal) புயல் கரையைக் கடந்த பின்னரும் மிகவும் மெதுவாகவே உள்ளது. மேலும், இந்தப் புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கிமீ வேகத்தில் தென்மேற்கு நோக்கி நகர்ந்தது.
இது மெதுவாக மேற்கு நோக்கி நகர்ந்து படிப்படியாக வலுவிழந்து வட கடலோர தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : ரீல்ஸ் மோகத்தில் பள்ளத்தாக்கில் விழுந்த இளம்பெண்.. பகீர் வைரல் வீடியோ!

Latest News