5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Food: கலக்கியை கண்டுபிடித்த தமிழ்நாட்டுக்காரர் யார் தெரியுமா? – ட்ரெண்டாகும் வீடியோ!

Egg Kalakki: நான் தான் 1989ல் கண்டுபிடித்தேன். அதற்கான ஆதாரம் அன்றைய கால வார இதழ்களில் வெளியானதை எல்லாம் நான் வைத்திருக்கிறேன். அந்த நேரத்தில் வெங்காயத்தின் விலை அதிகமாக இருந்தது. ஒரு கிலோ வெங்காயம் ரூ.80க்கு விற்றது. அப்போது முட்டைக்கு வெங்காயம் சேர்க்க முடியாத காரணத்தால் கலக்கியை கண்டுப்பிடித்தோம்.

Food: கலக்கியை கண்டுபிடித்த தமிழ்நாட்டுக்காரர் யார் தெரியுமா? – ட்ரெண்டாகும் வீடியோ!
கோப்பு புகைப்படம்
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 17 Jul 2024 11:47 AM

வைரல் வீடியோ: இந்த பொறப்பு தான் நல்ல ருசிச்சி சாப்பிட கிடைச்சது என பாடல் வரிகளுக்கு ஏற்ப, உணவின் பெயரை கேட்டாலே நாவில் பலருக்கு எச்சில் ஊறி விடும். அந்த அளவுக்கு ஒவ்வொரு வகையான உணவும் நம் ரத்தத்தோடு கலந்து விட்டது போல உணர்வில் மிதக்கிறோம். ஜாதி, மதம், இனம், கலாச்சாரம், எந்த நாடு என்பதெல்லாம் பார்ப்பதில்லை. ஒரு கை பார்த்துவிட்டு அதில் என்ன ஸ்பெஷல் உள்ளது என்றே கேட்போம். சில உணவுகளை யார் கண்டுபிடித்தது என தெரிந்தால் ஆச்சரியப்பட்டு பார்ப்போம். நம்ம ஊர் இட்லி உப்மா தொடங்கி வெளிநாடுகளில் அதிகம் விற்பனையாகும் பீட்சா, பர்க்கர், சாண்ட்விச் போன்றவை வரை யாரோ ஒரு தனி நபர் அல்லது குழுவால் கண்டுபிடிக்கப்பட்டது தான். அந்த வகையில் இன்றைக்கும் நம் ஊர் ஹோட்டல்களில் மிகவும் பேமஸாக உள்ள கலக்கி பிறந்த கதையை பார்ப்போம்.

இதையும் படிங்க: Baby Foods: 6 மாத குழந்தைக்கு கொடுக்க வேண்டிய சத்தான உணவுகள் என்ன?  

கலக்கி உருவானது இப்படித்தான்!

சமூக வலைத்தளங்களில் வைரலாக ஒரு வீடியோ பரவி வருகிறது.அதில் பேசும் நபர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கிச்சா கடை என்ற ஹோட்டல் நடத்தி வரும் கிருஷ்ணமூர்த்தி என்பவர் தான் கலக்கியை கண்டுபிடித்தவராம். அந்த வீடியோவில் பேசும் அவர், “கலக்கியை நான் தான் 1989ல் கண்டுபிடித்தேன். அதற்கான ஆதாரம் அன்றைய கால வார இதழ்களில் வெளியானதை எல்லாம் நான் வைத்திருக்கிறேன். அந்த நேரத்தில் வெங்காயத்தின் விலை அதிகமாக இருந்தது. ஒரு கிலோ வெங்காயம் ரூ.80க்கு விற்றது. அப்போது முட்டைக்கு வெங்காயம் சேர்க்க முடியாத காரணத்தால் கலக்கியை கண்டுப்பிடித்தோம். முதல் முதலாக கலக்கிக்கு “கொல கொல” என பெயர் வைத்திருந்தோம்.ஊர் முழுக்க கலக்கியாக மாறி விட்டது. சில ஊர்களுக்கு ஊர் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு வருகிறது.

கிருஷ்ணமூர்த்தி சொல்வது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை என்றாலும், அந்த கதை கேட்பதற்கு சூப்பராக இருப்பதாகவும், அத்தகைய கலக்கியை கண்டுபிடித்த அவருக்கு வாழ்த்துகள் எனவும் இணையவாசிகள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Also Read: Aadi Month: ஆடி மாதத்தில் பிறப்பவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும் தெரியுமா?

கலக்கி செய்வது எப்படி?

ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து அதில் உப்பு, மிளகுத்தூள், வெங்காயம், சிறிதளவு குழம்பு ஆகியவை சேர்த்துக் கலக்கி கொள்ளவும். தோசை கல்லில் இந்த கலவையை ஊற்றி நான்கு பக்கமும் இருந்து மூடவும். இப்போது உள்பகுதியில் இருக்கும் முட்டை கலவை ஓரிடத்தில் திரளும். அப்படியே கல்லில் இருந்து தட்டுக்கு மாற்றினால் போதும். சுவையான கலக்கி ரெடி. இதனை வெங்காயம், குழம்பு சேர்க்காமலும் செய்யலாம்.

Latest News