IRS Officer : பெண்ணாக இருந்து ஆணாக மாறிய IRS அதிகாரி.. பாலினத்தை மாற்ற ஒப்புதல் வழங்கிய அமைச்சகம்! - Tamil News | IRS officer Anusuya changed her name and gender center approves it | TV9 Tamil

IRS Officer : பெண்ணாக இருந்து ஆணாக மாறிய IRS அதிகாரி.. பாலினத்தை மாற்ற ஒப்புதல் வழங்கிய அமைச்சகம்!

IRS officer transformation | ஹைதராபத்தை சேர்ந்த ஐஆர்எஸ் அதிகாரி தனது பெயரை எம்.அனுசியா என்பதில் இருந்து எம். அனுகதிர் சூர்யா என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றும், தனது பாலினத்தை பெண்ணிலிருந்து ஆணாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இந்நிலையில் அவரின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. 

IRS Officer : பெண்ணாக இருந்து ஆணாக மாறிய IRS அதிகாரி.. பாலினத்தை மாற்ற ஒப்புதல் வழங்கிய அமைச்சகம்!

எம்.அனுகதிர் சூர்யா

Updated On: 

10 Jul 2024 15:57 PM

பெண்ணிலிருந்து ஆணாக மாறிய ஐஆர்எஸ் அதிகாரி : ஹைதராபாத்தை சேர்ந்த ஐஆர்எஸ் அதிகாரி தனது பெயர் மற்றும் பாலினத்தை மாற்றியுள்ளார். இதற்கு மத்திய நிதி அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம் இந்திய சிவில் சர்வீஸ் வரலாற்றில் இது போன்ற சம்பவம் நடந்தது இதுவே முதல் முறை. தற்போது ஹைதராபத்தில் உள்ள சுங்க வரி மற்றும் வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைமை ஆணையர் அலுவலகத்தில் இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளவர் எம்.அனுசியா. இவர் தனது பெயரை எம்.அனுகதிர் சூர்யா என்றும், தனது பாலினத்தை பெண்ணிலிருந்து ஆணாக மாற்ற கோரிக்கை வைத்துள்ளார்.

எம்.அனுசியா முதல் எம்.அன்கித் சூர்யா வரை

கடந்த 2013 ஆம் சென்னையில் ஐஆர்எஸ் அதிகாரியாக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கிய அனுசியா, கடந்த 2018 ஆம் ஆண்டு துணை ஆணையராக பதவி உயர்வு பெற்றார். இவர் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷனில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் தேசிய சட்ட நிறுவன பல்கலைக்கழகத்தில் டைபர் சட்டம் மற்றும் சைபர் தடயவியல் ஆகியவற்றில் முதுகலை பட்டைய படிப்பை முடித்தார். தற்போது அவர் ஹைதராபத்தில் உள்ள சுங்க வரி மற்றும் வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைமை ஆணையர் அலுவலகத்தில் இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒப்புதல் வழங்கிய சுங்க வாரியம்

இவர் தனது பெயரை எம்.அனுசியா என்பதில் இருந்து எம். அனுகதிர் சூர்யா என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றும், தனது பாலினத்தை பெண்ணிலிருந்து ஆணாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இந்நிலையில் அவரின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : NIT Trichy: ஜேஇஇ தேர்வில் கலக்கிய பழங்குடியின மாணவி.. சவால்களை சாதனைகளாக மாற்றி சாதித்தது எப்படி?

அதில், எம்.அனுசியாவின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டது. இனிமேல் அனைத்து அதிகாரப்பூர்வ பதிவுகளிலும் ஐஆர்எஸ் அதிகாரி எம்.அனுசியா என்பதற்கு பதிலாக எம்.அனுகதிர் சூர்யா என்று அங்கீகரிக்கப்படுவார் என்று மத்திய வருவாய் துறையின் மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பட்ட மாற்றம்

மூன்றாம் பாலினத்தை அங்கீகரித்த NALSA வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்புக்கு கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மற்றம் ஏற்பட்டுள்ளது. பாலின அடையாளம் என்பது தனிப்பட்ட விருப்பம் என்று நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : விண்வெளியில் சாக்லேட் தினத்தை கொண்டாடிய ஆராய்ச்சியாளர்கள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தாமரை விதை எனப்படும் மக்கானாவில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!