Viral Video : போரின் நடுவே நடனமாடிய காதல் ஜோடி.. வைரலாகும் வீடியோ!
வைரல் வீடியோ : தற்போது இணையத்தைத் திறந்தாலே இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடந்துவரும் போர் தான் சமூக ஊடகங்களில் வைரலாக நடந்து வரும் செய்தியாக இருக்கிறது. இந்த இஸ்ரேல் மீது ஈரானின் ஏவுகணைத் தாக்குதல் நாட்டையே தஞ்சம் அடைய வைக்கும் போது, புதுமணத் தம்பதிகள் நடனம் ஆடி வெளியிட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தற்போது உள்ள காலத்தில் இணையதளங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் பயன்படுத்துவது மக்களுக்கு அன்றாட வாழ்வில் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. தற்போது இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல் நடந்துவரும் நிலையில் புதுமணத் தம்பதிகள் அந்த போரின் நடுவே தங்களது திருமண நடனம் ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த ஜோடியின் மனதைக் கவரும் வகையில் நடனமாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை மாலை ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏறக்குறைய 200 ஏவுகணைகள் ஏவப்பட்டு இருநாட்டிற்கும் இடையே போர் ஆரம்பித்தது.
இந்த நிலையில் அன்று தங்கள் காதல் மற்றும் பகிரப்பட்ட நம்பிக்கைகள் இரண்டையும் கொண்டாடப் புனித நகரமான ஜெருசலேமில் இந்த ஜோடிகள் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இருப்பினும் இந்த திருமணமான ஜோடிகள் போரிலிருந்து தப்பிக்க நிலத்தடியில் பதுங்கி தஞ்சம் புகுந்துள்ளனர்.
இதையும் படிங்க :Viral Video: வழிகாட்டி பலகை மீது ஏறி உடற்பயிற்சி.. நெடுஞ்சாலையில் இளைஞர் விபரீதம்!
இஸ்ரேல் நாட்டில் தற்காப்புப் படைகள் (IDF) உள்ளூர் நேரப்படி 19:30 மணிக்கு நாடு முழுவதும் வான் சைரன்களை ஒலித்து, ஏற்படவுள்ள தாக்குதல் குறித்து குடிமக்களை எச்சரித்துள்ளனர். குடியிருப்பாளர்கள் நிலத்தடி தங்குமிடங்களில் தஞ்சம் அடையுமாறு வலியுறுத்தப்பட்டனர், அங்கு தான் தம்பதிகளும் அவர்களது விருந்தினர்களும் தங்கள் திருமண நாளை கொண்டாடியுள்ளனர். இந்த வீடியோவானது போரிலும் தனது திருமணத்தைக் கொண்டாடியுள்ளனர் என்ற ஆச்சிரியத்தில் இணையத்தில் பரவிவருகிறது.
இதையும் படிங்க :Kerala: விளக்கேற்ற சென்ற ஆளுநர்.. திடீரென பற்றிய தீ.. பதறிய அதிகாரிகள்!
இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ..!
Iran couldn’t stop the joy at this Jerusalem wedding even for a moment. ❤️ pic.twitter.com/kMWzbhrNRA
— Saul Sadka (@Saul_Sadka) October 1, 2024
வைரல் வீடியோ :
இந்த வீடியோவை எக்ஸ் பயனரான “சவுல் சட்கா”, “இந்த ஜெருசலேம் திருமணத்தில் ஈரானால் ஒரு கணம் கூட மகிழ்ச்சியை நிறுத்த முடியவில்லை” என்ற தலைப்புடன் இந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில், தம்பதியினர் இருவரும் தங்கள் திருமண உடையை அணிந்து, நடனமாடியுள்ளனர் இந்த கட்சியில் மேலே நடக்கும் போரின் பதற்றம் தாங்காமல், காதல் ஜோடிகள் இருவரும் ஒருவரையொருவர் கண்களைப் பார்த்துக் கொண்டு நடனமாடுவதில் அந்த பதற்றம் தெரிகிறது. தற்போது இந்த வீடியோவானது இணையத்தில் வேகமாகப் பரவிவருகிறது.
இதையும் படிங்க :Iran Israel War: மத்திய பெய்ரூட்டில் இஸ்ரேல் தாக்குதல்.. பணவீக்கம் குறித்து முற்றுபுள்ளி வைத்த அமெரிக்கா..
இந்த வீடியோவின் கீழ் நெட்டிசன்கள் கருத்து :
இந்த வீடியோவின் கீழ் இணையதள வாசிகள் பலர் தங்களின் கருத்துக்களைத் தெரிவித்துவருகின்றனர். அந்தவகையில் ஒருவர் “வாழ்க்கையை நேசிக்கும் கலாச்சாரம் மரணத்தை விரும்பும் கலாச்சாரத்தை எப்போதும் தோற்கடிக்கும்” என்றும்.
இதையும் படிங்க :Iran – Israel War: ஈரான் – இஸ்ரேலுக்கு இடையே என்னதான் பிரச்னை? போர் நடக்க என்ன காரணம்.. முழு விவரம்!
மற்றொருவர் “இது இன்று மட்டுமல்ல. இஸ்ரேலியர்களின் அன்றாட வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது. ஒரு கணம் நீங்கள் வேலைக்காக அழைக்கிறீர்கள் அல்லது உங்கள் குழந்தைகளுக்காகச் சமைக்கிறீர்கள், அடுத்த கணம், நீங்கள் தங்குமிடத்திற்கு ஓடுகிறீர்கள். அதனால் வாழ்க்கை தொடர்கிறது. இஸ்ரேலியர்கள் முற்றிலும் மீள் திறன் கொண்டவர்கள் மற்றும் ஒவ்வொரு ஏவுகணையும் அவர்களை வலிமையாக்குகிறது” என்றும் தனது கருத்தை இந்த பதிவின் கீழ் பகிர்ந்துள்ளார்.
தற்போது இணையத்தில் வெளியான இந்த வீடியோவானது இணையதள வாசிகளை கடும் சோகத்திற்கு உள்ளாக்கி வருகிறது. இந்த மீளத் துயரிலிருந்து இஸ்ரேல் எப்போது மீளும் என்று மக்கள் தங்களின் வருத்தத்தையும் இந்த வீடியோவில் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோவானது இணையத்தில் வேகமாகப் பரவிவருகிறது.
இதையும் படிங்க :Iran Attacks Israel Updates: இஸ்ரேல் – ஈரான் சண்டை.. அக்டோபர் 2ல் நடந்தது என்ன?