Viral Video : குழந்தையின் கையிலிருந்த போனை திருடிய நபர்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!
Viral Video : சமீபகாலத்தில் மக்களிடையே இணையதளங்களின் பயன்பாடுகள் அதிகரித்து வருகின்றனர். இதனால் பல இடங்களில் நடக்கும் விஷயங்கள் மற்றும் அறிவிப்புகள் போன்றவை மக்களிடம் மிக எளிதில் சென்று விடுகின்றனர். இந்த மாற்றத்தால் தற்போது குழந்தைகள் வரை ஊடகங்களைப் பயன்படுத்தி வருகின்றன. அந்த வகையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் குழந்தையின் கையிலிருந்து போனை திருடிச் செல்லுவது போல் உள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோ : தற்போது உள்ள காலத்தில் சமூக ஊடகங்கள் மற்றும் இணையதளங்கள் போன்றவற்றின் பயன்பாடுகள் மக்களிடையே மிகுதியாக இருந்து வருகிறது. இதனால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இணையதளங்களில் தற்போது தனக்கென தனிப் பக்கத்தையும் வைத்துள்ளனர். இந்த வகையில் குழந்தைகளின் மொபைல் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. அந்த வகையில் பெற்றோர்கள் தங்களின் குழந்தையைச் சமாளிக்க மொபைல்போனை அவர்களின் கையில் கொடுத்துவிடுகின்றனர். அதன் தொடர்ச்சியாக ஒரு குழந்தையானது ரயிலின் ஜன்னல் பகுதியில் உள்ள சீட்டில் அமர்ந்திருந்து தனது மொபைல்போனை பார்த்துக்கொண்டு இருக்கும் போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அந்த குழந்தையின் கையிலிருந்து அந்த தொலைப்பேசியைப் பறித்துச் செல்லுவது போல் உள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க :Narayanpur Encounter: சத்தீஸ்கரில் போலீசார் அதிரடி தாக்குதல்.. 30 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
நமது அன்றாட வாழ்வில் போக்குவரத்து என்பது ஒரு முக்கியமான பங்குவகிக்கிறது. அதில் நாம் அடிக்கடி பயன்படுத்துவது ரயில் போக்குவரத்து. இந்த வீடியோவை பார்ப்பதன் மூலமாக ரயில் பயணம் பாதுகாப்பானதா என்பதைக் கேள்விக்குறியாக்குகிறது.? ரயில் பயணத்தில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டு இந்த வீடியோ இருக்கிறது.
இந்த வீடியோவானது தற்போது X தளத்தில் மனோஜ் சர்மா என்பவர் பகிர்ந்துள்ளார். இது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த வீடியோவில் ரயிலின் ஜன்னல் வழியாக ஒரு குழந்தையிடமிருந்து திருடன் ஒருவன் செல்போனை திருடுவது போல் இந்த வீடியோவில் காட்டப்படுகிறது. மேலும் அந்த நபர் வேண்டும் என்றே செய்தாரா இல்லை, திருடனா என்பது உறுதியாகத் தெரியவில்லை.
இதையும் படிங்க :Arvind Kejriwal: ”மோடிக்காக பரப்புரை செய்ய தயார்” திடீரென ரூட்டை மாற்றும் அரவிந்த கெஜ்ரிவால்
இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ..!
“ट्रेन में बैठते समय सावधानी बरतें”
देखिए कैसे खिड़की में से बच्ची से फोन छीनकर चला गया !!
आजकल फोन चोरी वाली घटनाएं कुछ ज्यादा बढ़ रही हैं !!#ViralVideo #Trending #tren pic.twitter.com/C4bRzGKcfY— MANOJ SHARMA LUCKNOW UP🇮🇳🇮🇳🇮🇳 (@ManojSh28986262) October 2, 2024
வைரல் வீடியோ :
இந்த வீடியோவில் ரயிலின் ஜன்னலில் தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு நபர், குழந்தையிடமிருந்து செல்போனைப் பறிக்க முயல்வது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. ரயில் ஜன்னலின் குறுகலான இடைவெளிகளினூடே அந்த நபர் கைகளைக் கொண்டு அந்த குழந்தையிடம் இருந்து வேகமாக செல்போனை பறிக்க முயல்கிறார். “அப்போது அந்த குழந்தை “எனது போனை விட்டு விடுங்கள் “என்று இந்தி மொழியில் கூச்சலிடுவதும் இடம் பெற்றுள்ளது. சில நொடிகளில் அந்த நபர் அந்த குழந்தையின் கையிலிருந்து பிடுங்கிக் கொண்டு அந்த இடத்தை விட்டு ஓடிவிடுகிறார், இதனால் அந்த பெண் குழந்தை தான் என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்து போனது.
இந்த வீடியோவை பகிர்ந்தவர் “ரயிலில் ஏறும் போது கவனமாக இருங்கள், ஜன்னல் வழியாக அந்த பெண்ணிடம் இருந்து போனை பறித்து எப்படிச் சென்றான் பாருங்க என்றும் தற்போது போன் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என்றும் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க :Tirupati: திருப்பதியில் தங்க கொடிமரம் சேதமா? – உண்மை என்ன தெரியுமா?
இந்த வீடியோவின் கீழ் நெட்டிசன்கள் கருத்து..!
இந்த வீடியோவின் கீழ் ஒருவர் “இப்போதெல்லாம் ஒவ்வொரு கணமும் நீங்கள் குழந்தையாக இருந்தாலும் சரி, மூத்த குடிமக்களாக இருந்தாலும் சரி கவனமாக இருக்க வேண்டும், ஏனென்றால் குற்றவாளிகள் உங்களைச் சுற்றிலும் வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர்”வசதியாக அமர்ந்து வீடியோ எடுக்கப்படும் விதம் மற்றும் நமக்கு நெருக்கமான பயணிகள் பிஸியாக இருப்பது போன்றவற்றின் அடிப்படையில் இது ஸ்கிரிப்ட் தான் என்றும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க :Chennai Air Show: ரக ரகமாய் பறந்த விமானங்கள்.. மெரினாவை அதிரவைத்த விமான சாகசம்!
மூன்றாவது நபர் “ஒருமுறை நான் என் 4 வயதுக் குழந்தையுடன் ஏசி கோச்சில் பயணம் செய்து கொண்டிருந்தேன் நான் வழக்கமாக ரயிலில் பயணம் செய்யும் போது முழுவதுமாக தூங்கிவிட்டு என் மகளைப் பார்த்துக் கொண்டு 5 நிமிடம் கண்ணை மூடிக்கொண்டேன் . நான் கண்ணைத் திறந்தபோது யாரோ என் மகளைத் தூக்க முயன்றனர் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க :“மனைவியுடன் கட்டாய உறவு குற்றமல்ல” உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்!