Viral : அமேசான் டெலிவரியில் வந்த உடும்பு.. பதரிப்போன வாடிக்கையாளர்.. அடுத்து நடந்தது என்ன? - Tamil News | lizard delivered with air fryer from amazon twitter post goes viral on internet | TV9 Tamil

Viral : அமேசான் டெலிவரியில் வந்த உடும்பு.. பதரிப்போன வாடிக்கையாளர்.. அடுத்து நடந்தது என்ன?

Lizard Delivered in Amazon | பெண் ஒருவர் அமேசான் ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் ஏர் ஃப்ரையர் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். ஆர்டர் செய்த பொருள் டெலிவரி செய்யப்பட்ட உடனே அதை ஆசை, ஆசையாக பிரித்து பார்த்துள்ளார். ஆனால் அவருக்கு அதில் அதிர்ச்சி காத்திருந்துள்ளது. அந்த பெண் ஆர்டர் செய்த ஏர் ஃப்ரையர் பார்சலில் உயிருடன் ஒரு உடும்பு இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், தனது எக்ஸ் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார்.

Viral : அமேசான் டெலிவரியில் வந்த உடும்பு.. பதரிப்போன வாடிக்கையாளர்.. அடுத்து நடந்தது என்ன?

பார்சலுடன் டெலிவரி செய்யப்பட்ட உடும்பு

Published: 

25 Jul 2024 15:24 PM

அதிர்ச்சி சம்பவம் : ஆன்லைன் ஷாப்பிங் அனைவருக்கும் பழக்கமாகிவிட்டது. முன்பெல்லாம் கடைகளுக்கு ஏறி, இறங்கி பார்த்து பார்த்து வாங்கிய பொருட்களை, இப்போது வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் எளிதாக வாங்கிவிட முடிகிறது. அலைச்சல் இன்றி பொருட்களை வாங்க முடியும் என்பதால் பலரும் ஆன்லைன் ஷாப்பிங் செய்து வருகின்றனர். ஆனால் இந்த ஆன்லைன் ஷாப்பிங் அவ்வளவு பாதுகாப்பானது அல்ல. இதில் அதிக மோசடிகள் நடைபெறுகின்றன. பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றுவது, ஆர்டர் செய்த பொருட்களுக்கு பதிலாக வேறு பொருட்களை அனுப்புவது, ஏற்கனவே பயன்படுத்திய பொருட்களை அனுப்புவது என பல மோசடிகள் நடைபெறுகின்றன. ஆனால் அமேசானில் பொருளை ஆர்டர் செய்த பெண்ணுக்கோ பார்சலுடன் சேர்ந்து ஒரு உடும்பும் வந்துள்ளது.

ஏர் ஃப்ரையருடன் டெலிவரி செய்யப்பட்ட உடும்பு

பெண் ஒருவர் அமேசான் ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் ஏர் ஃப்ரையர் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். ஆர்டர் செய்த பொருள் டெலிவரி செய்யப்பட்ட உடனே அதை ஆசை, ஆசையாக பிரித்து பார்த்துள்ளார். ஆனால் அவருக்கு அதில் அதிர்ச்சி காத்திருந்துள்ளது. அந்த பெண் ஆர்டர் செய்த ஏர் ஃப்ரையர் பார்சலில் உயிருடன் ஒரு உடும்பு இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், தனது எக்ஸ் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் எக்ஸ் தளத்தில் பதிவு

அதில், “நாங்கள் அமேசானில் ஏர் ஃப்ரையர் ஒன்றை ஆர்டர் செய்தோம். ஆனால் அது ஒரு உயிருள்ள உடும்புடன் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. இது அமேசான் நிறுவனத்தின் தவறா அல்லது கொரியர் சர்வீஸின் தவறா என தெரியவில்லை” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

பெண்ணின் பதிவிற்கு பதிலளித்த அமேசான்

அந்த பெண்ணின் எக்ஸ் பதிவிற்கு பதிலளித்த அமேசான் நிறுவனம் “இந்த தவறுக்கு நாங்கள் வருந்துகிறோம். இந்த பொருளை நீங்கள் எதில் ஆர்டர் செய்தீர்கள் என கூற முடியுமா” என்று பதில் அளித்துள்ளது.

பெங்களூருவில் அமேசான் டெலிவரியுடன் வந்த பாம்பு

கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூருவரை சேர்ந்த ஒரு பெண் அமேசானில் ஆர்டர் செய்த பொருள், பாம்புடன் டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது அதேபோல ஏர் ஃப்ரையர் ஆர்டர் செய்த பெண்ணின் பார்சலில் உடும்பு டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Viral Video : பிறக்கும்போதே 32 பற்களுடன் பிறந்த குழந்தை? இணையத்தில் வைரலாகும் வீடியோ!

12 வயதுக்குள் உங்கள் குழந்தை கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம்!
உங்கள் பயணங்களை சிறப்பான மாற்ற சில டிப்ஸ்!
கீரை ஃப்ரெஷாக இருக்க சில டிப்ஸ்
காலையில் எழுந்தவுடன் செல்போன் பார்ப்பதால் இவ்வளவு பிரச்னையா?