Viral Video : சிமெண்டால் செய்யப்பட்ட பூண்டு.. காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்பட்டதால் அதிர்ச்சி!
Artificial Garlic | கெட்டுப்போன பொருட்களை பயன்படுத்துவது, தரமற்ற பொருட்களை பயன்படுத்துவது என மோசடிகள் அரங்கேறி வந்த நிலையில் செயற்கை உணவு பொருட்களை தயாரித்து விற்பனை செய்வதும் அதிகமாகிவிட்டது. அந்த வகையில் மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடைபெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செயற்கை உணவு பொருட்கள் : ஒரு புறம் உலகம் நவீன மயமாகிக்கொண்டே செல்லும் நிலையில், மற்றொரு புறம் குற்ற சம்பவங்களும், மோசடிகளும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. மோசடிகளில் உணவு மோசடி அதிகமாக உள்ளது. கெட்டுப்போன பொருட்களை பயன்படுத்துவது, தரமற்ற பொருட்களை பயன்படுத்துவது என மோசடிகள் அரங்கேறி வந்த நிலையில் செயற்கை உணவு பொருட்களை தயாரித்து விற்பனை செய்வதும் அதிகமாகிவிட்டது. அந்த வகையில் மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடைபெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : வாஷிங் மெஷினில் மறைந்திருந்த 5 அடி நீள ராஜநாகம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
சிமெண்டில் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்ட பூண்டு
மகாராஷ்டிரா மாநிலம், அகோலா மாவட்டத்தில் தான் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள ஒரு காய்கறி மார்கெட்டில் பூண்டு விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. ஆனால் அது உண்மையான பூண்டு இல்லை என்பதுதான் அதிர்ச்சியூட்டும் விதமாக அமைந்துள்ளது. அந்த காய்கெறி மர்கெட்டில் விற்பனை செய்யப்பட்டது உண்மையான பூண்டு இல்லை. அது சிமெண்டால் தயாரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இணையத்தில் வெளியான வீடியோ ஒன்றில், செயற்கையாக தயாரிக்கப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும் அந்த பூண்டின் தோல் பிரிந்து உள்ளே இருக்கும் சிமெண்ட் தெரிகிறது. அந்த பூண்டை கையில் எடுத்து பார்த்தபோது அதிக எடையுடன் இருந்ததால் சந்தேகமடைந்த பொதுமக்கள் அதை பிரித்து பார்த்தபோது தான் அந்த அதிர்ச்சியூட்டும் உண்மை தெரியவந்துள்ளது. அந்த பூண்டை முழுமையாக தோல் உரித்த நிலையில் அதில் வெறும் சிமெண்ட் மட்டுமே இருக்கும் புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
In a shocking revelation, vendors in Maharashtra’s Akola district have been caught selling garlic made from cement. Yes, you read that correctly. Recent videos exposing this bizarre scam have surfaced online, raising questions about how such deception went unnoticed. pic.twitter.com/82EO7jR1Eh
— The Siasat Daily (@TheSiasatDaily) August 19, 2024
இணையத்தில் வைரலான வீடியோவால் கொதித்தெழுந்த நெட்டிசன்கள்
இந்த வீடியோ இணையத்தில் வெளியானதை அடுத்து வேகமாக வைரலாகி வருகிறது. இதுபோன்ற குற்றங்களால் இனி வரும் காலங்களில் உணவே விஷமாக மாறிவிடும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். சமீப காலமாகவே பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் காய்கறிகள் குறித்து செய்திகள் அவ்வப்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்தன. இந்த நிலையில் சிமெண்டால் செய்யப்பட்ட பூண்டு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.