“பேண்டிலேயே சிறுநீர் கழித்தேன்” மும்பை இசை நிகழ்ச்சி… கொந்தளித்த பார்வையாளர்!
மும்பையில் நடந்த இசை நிகழ்ச்சியில் தன்னுடைய பேண்டிலேயே சிறுநீர் கழித்தாக பார்வையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். போதுமான கழிவறை வசதிகள் இல்லாததால் நீரிழிவு நோயாளியான நான் பேண்டிலேயே சிறுநீர் கழித்ததாக சமூக வலைதளத்தில் பார்வையாளர் ஷெல்டன் அரன்ஜோ கூறியுள்ளார்.
மும்பையில் நடந்த இசை நிகழ்ச்சி போதுமான கழிவறை வசதிகள் இல்லாததால் தன்னுடைய பேண்டிலேயே சிறுநீர் கழித்தாக பார்வையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் 13ஆம் தேதி பிரையன் ஆடம்ஸின் இசை நிகழ்ச்சி நடந்தது. இந்த இசை நிகழ்ச்சியில் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட ஒருவர் தான் மும்பையைச் சேர்ந்த ஊடக நிபுணரான ஷெல்டன் அரன்ஜோ. இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஊடக துறையில் அனுபவம் உள்ளவர். மும்பையில் கடந்த 13ஆம் தேதி இசை நிகழ்ச்சில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியை சோமேட்டோ உட்பட பல்வேறு நிறுவனங்கள் ஏற்பாடு செய்தனர்.
பேண்டிலேயே சிறுநீர் கழித்த பார்வையாளர்
இந்த நிலையில், இசை நிகழ்ச்சியில் கழிவறை வசதிகள் இல்லாததால் தன்னுடைய பேண்டிலேயே சிறுநீர் கழித்தாக ஊடக நிபுணரான ஷெல்டன் அரன்ஜோ தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறது. இவரது குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டளரான சோமேட்டோ சிஇஓ தீபிந்தர் கோயல் மற்றும் EVA குளோபல் நிறுவனத்திற்கு கடிதம் எழுதினார். அதில், சர்க்கரை நோயாளி என்று கூறிக்கொண்ட ஆரஞ்சோ, கச்சேரி நடைபெறும் இடத்தில் 1000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இருந்ததாக தெரிவித்தார். ஆனால், நிகழ்ச்சி நடந்த இடத்தில் மூன்று கழிவறைகள் மட்டுமே உள்ளன என்பதை வெளிப்படுத்தினார்.
நீரிழவு நோயாளியான இவர், கழிவறைக்காக நீண்ட நேரமாக காத்திருந்ததாக கூறினர். கடைசியில் நான் எனது பேண்டில் சிறுநீர் கழித்தேன் என்று கூறினார். மேலும் அவர் கூறுகையில், “இசை நிகழ்ச்சியில் பங்கேற்க காசு கொடுத்தது பேண்டில் சிறுநீர் போகவா? நான் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன் என்று கூற வெட்கப்படவில்லை.
Also Read : ரூ.4க்கு விற்கப்பட்ட சிக்கன் பிரியாணி.. சாலையை மறித்த பொதுமக்கள்!
”எனக்கு அசிங்கம் இல்ல.. நீங்க தான் அசிங்கப்படனும்”
நீங்கள் தான் 1000 பேருக்கு 3 கழிவறைகளை வழங்கியதற்கு வெட்கப்பட வேண்டும் என்றார். அரன்ஜோ தான் சிறுநீர் கழிக்காமல் அவதிப்பட்டதை விளக்கமாக பகிர்ந்தார். முதலில் கழிவறைக்கு சென்று வரிசையில் நின்றதாகவும், ஆனால் நீண்ட வரிசை இருப்பதால் காத்திருக்க வேண்டி இருந்தது என்றார்.
அங்கிருந்தவர்கள் தன்னை வேறு கழிவறைக்கு செல்லம்படி அறிவுறுத்தினர் என்றும் நானும் அங்கு சென்றபோது எனக்கு அனுமதி கிடைக்கவில்லை என்று கூறினார். மேலும் அவர் கூறுகையில், “என்னால் இவ்வளவு நேரம் தாங்கிக் கொண்டு வரிசையில் நிற்க முடியாது. இதனால் நான் எனது பேண்டிலே சிறுநீர் கழித்தேன்” என்றார்.
Also Read : கம்பிக்கு நடுவில் சிக்கிய குழந்தையின் தலை.. மீட்டது எப்படி? திக்திக் வீடியோ!
மேலும், “இது கதறல் இல்லை. இது உதவிக்கான அழுகுரல். எங்களிடம் பணம் வசூலித்து, சர்வதேசக் கலைஞர்களை வரவழைத்து கச்சேரி நடத்துவதற்கு முன் முறையான வேலையை செய்யுங்கள். தயவு செய்து உங்கள் பங்களிப்பைச் செய்யுங்கள். நிகழ்ச்சியை நடத்துவதில் அவசரம் காட்டியதாக தெரிகிறது” என்று கூறினார்.