5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Watch Video : லிப் சிங்க் செய்து ஆன்லைன் நேர்காணலில் வசமாக மாட்டிக்கொண்ட நபர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Interview | நேர்காணலின் போது வேறுஒருவர் பேச அதற்கு லிப் சிங்க் செய்த நபர் வசமாக மாட்டிக்கொண்டார். கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. எப்படியேனும் நேர்காணலில் வெற்று பெற வேண்டும் என்று கடினமாக உழைப்பவர்கள் மத்தியில் இதுபோன்று ஆள்மாறாட்டம் செய்வது அநாகரிகமானது என பலரும் அந்த வீடியோவின் கீழ் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Watch Video : லிப் சிங்க் செய்து ஆன்லைன் நேர்காணலில் வசமாக மாட்டிக்கொண்ட நபர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
ஆள்மாறாட்டம் செய்தவர்
Follow Us
intern
Tamil TV9 | Published: 03 Jul 2024 12:09 PM

நேர்காணல் மோசடி : நாளுக்கு நாள் நவீனமயமாகிக்கொண்டிருக்கும் இந்த உலகில் போட்டிகளும் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கின்றன. கல்வி முதல் வேலை என அனைத்திற்கும் போட்டி தேர்வும், நேர்காணலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. எனவே ஒவ்வொருவரும் இவற்றை கடந்து தான் கல்வி அல்லது பணியில் சேர முடியும். ஆனால் நேர்காணல்களில் தேர்ச்சி பெறுவது அவ்வளவு எளிதானது அல்ல. சில நுணுக்கமான கேள்விகளுக்கு பதில் சொல்ல தெரியாமல் விட்டு விட்டால் வெற்றி பெற முடியாது. எனவே நேர்காணலில் பங்கேற்று தேர்ச்சி பெறுவதற்கு சில பயிற்சிகளை மேற்கொள்வது அவசியம் ஆகும். இவ்வளவு சவால் நிறைந்த நேர்காணல்களில் வெற்றிபெற வேட்பாளர்கள் ஏமாற்றிய பல நிகழ்வுகள் உண்டு. அதுபோல தான் கடந்த 2017 ஆம் ஆண்டு ஆன்லைன் நேர்காணலில் ஆள்மாறாட்டம் செய்ய முயற்சித்த நபர் வசமாக மாட்டிக்கொண்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் ஆன்லைன் நேர்காணலில் ஒருவர் பங்கேற்கிறார். அவரிடம் உங்கள் அனுபவத்தில் ஏதேனும் தூண்டுதளின் பேரில் நீங்கள் வேலை செய்திருக்கிறீர்களா என நேர்காணல் செய்பவர் கேட்கிறார். அதற்கு அந்த நபர் ஆம் என பதிலளிக்கிறார். ஆனால் அவரது உதடுகள் அசையவே இல்லை. ஆனால் அவர் பேசு சத்தம் மற்றும் கேட்கிறது. உதடசைவும், வார்த்தைகளும் முரணாக இருப்பதை உணர்ந்த நேர்காணல் செய்பவர் பேசுவது அவரில்லை என கண்டுபிடித்து விடுகிறார்.

அவர் பேசிக்கொண்டிருக்கும்போது குறுக்கிட்ட நேர்காணல் செய்பவர், “நீங்கள் பேசவில்லை உங்களுக்கு அருகில் இருப்பவர் பேசுகிறார், நீங்கள் அதற்கு உதடுகளை அசைக்கிறீர்கள், நான் கண்டுபிடித்துவிட்டேன் என அவர் கூறுகிறார். அதற்கு அந்த நபர் அப்படியே அமைதியாக இருக்கிறார். பிறகு நேர்காணல் செய்பவர் “நீங்கள் வசமாக மாட்டிக்கொண்டீர்கள் என்னால் இரண்டு குரல்களை கேட்க முடிகிறது. உங்களுக்கு அருகில் இருப்பவர் பேசுகிறார். நீங்கள் அதற்கு உதடுகளை அசைக்கிறீர்கள், ஆனால் என்னால் உங்களது குரலையும் கேட்க முடிகிறது. இது தவறான நடைமுறை” என கூறுகிறார். தான் மாட்டிக்கொண்டதை உணர்ந்த அந்த நபர் எதுவும் பேசாமல் அப்படியே இருக்கிறார்.

இதையும் படிங்க : கணவனின் மூன்றாவது திருமணத்திற்கு ஏற்பாடு செய்த மனைவிகள்.. ஆந்திராவில் விநோத திருமணம்!

கடந்த 2017 ஆம் நடைபெற்ற இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது மீண்டும் இணையத்தில் வைரலாக தொடங்கியுள்ளது. இந்த வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள் எப்படியேனும் நேர்காணலில் வெற்றி பெற வேண்டும் என்று கடினமாக உழைப்பவர்களுக்கு மத்தியில் இதுபோன்று ஆள்மாறாட்டம் செய்வது அநாகரிகமானது என பலரும் அந்த வீடியோவின் கீழ் கமெண்ட் செய்து வருகின்றனர்.