5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Viral Video : ஊபரில் போகக் கூடாது அட்டோவில் தான் வர வேண்டும்.. இளைஞரிடன் தகராறு செய்த ஆட்டோ ஓட்டுநர்கள்!

Karnataka Uber Issue | கர்நாடகாவில் தாமஸ் என்பவர் ஊபரில் பைக் புக் செய்துள்ளார். புக் செய்த பைக் வந்தது அவரி பைக்கில் ஏறி புறப்பட தயாரிகியுள்ளார். ஆனால் அங்கிருந்த ஆட்டோ காரர்கள் தாமஸை ஊபரில் செல்ல கூடாது என்றும் ஆட்டோவில் தான் செல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளனர். அவர்கள் கூறுவதை கேட்காத தாமஸ், வட்டியில் ஏற தயாராகி இருக்கிறார். அப்போது பின்னால் இருந்து அவரை ஆட்டோ காரர்கள் இழுத்துள்ளனர். அதுமட்டுமன்றி ஊபர் ஓட்டுநரையும்  அவர்கள் மிரட்டியுள்ளனர்.

Viral Video : ஊபரில் போகக் கூடாது அட்டோவில் தான் வர வேண்டும்.. இளைஞரிடன் தகராறு செய்த ஆட்டோ ஓட்டுநர்கள்!
வைரல் வீடியோ
Follow Us
vinalin
Vinalin Sweety | Published: 27 Jul 2024 18:27 PM

ஊபர் பயணம் : முன்பெல்லாம் பல மணி நேரம் காத்திருந்து செய்த வேலைகளை தற்போது சில நொடிகளிலே மொபைல் போன் மூலம் செய்து முடித்துவிட முடிகிறது. உணவு முதல் பயணம் வரை அனைத்தையும் ஆன்லைனில் புக் செய்துக்கொள்ள முடியும். பேருந்துகள், ரயில்கள், விமானங்களை ஆன்லைனின் புக் செய்த காலம் மாறி டூ வீலர்கள் மற்றும் ஆட்டோக்களை மொபைல் போன் மூலம் புக் செய்யும் வசதியும் உள்ளது. இது பலருக்கும் பயனுள்ளதாக உள்ளது. பொதுவாக ஆட்டோக்களில் பயணம் செய்த மக்கள், தற்போது ஓலா, ஊபர் உள்ளிட்ட ஆப்களை பயன்படுத்து பயணம் செய்கின்றனர். இவை ஆட்டோ சவாரிக்களை விட சற்றும் கம்மியாக கட்டணம் வசூலிப்பதால் பெரும்பாலான மக்கள் அவற்றில் பயணம் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.

ஊபரில் பயணம் செய்யவிடாமல் தடுத்த ஆட்டோ ஓட்டுநர்கள்

கர்நாடகாவில் தாமஸ் என்பவர் ஊபரில் பைக் புக் செய்துள்ளார். புக் செய்த பைக் வந்ததும் அவர் பைக்கில் ஏறி புறப்பட தயாரிகியுள்ளார். ஆனால் அங்கிருந்த ஆட்டோ காரர்கள் தாமஸை ஊபரில் செல்ல கூடாது என்றும், ஆட்டோவில் தான் செல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளனர். அவர்கள் கூறுவதை கேட்காத தாமஸ், வட்டியில் ஏற தயாராகி இருக்கிறார். அப்போது பின்னால் இருந்து அவரை ஆட்டோ காரர்கள் இழுத்துள்ளனர். அதுமட்டுமன்றி ஊபர் ஓட்டுநரையும்  அவர்கள் மிரட்டியுள்ளனர்.

இதையும் படிங்க : Shocking News : விவாகரத்துக்கு விண்ணப்பித்த பெண்.. கோடாலியால் கால்களை வெட்டிய தந்தை.. அதிர்ச்சி சம்பவம்!

இதனால் ஆத்திரமடைந்த தாமஸ் எதில் செல்ல வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். நீங்கள் யார் என்னை தடுப்பதற்கு, என்னை போக விடுங்கள் என்று கூறியுள்ளார். ஆனால், அபோது ஆட்டோ காரர்கள் அவரை போக விடாமல் நிறுத்தி வைத்துள்ளனர். அவர்களின் தொடர் அழுத்தம் காரணமாக, தாமஸ் ஊபரை கேன்சல் செய்துள்ளார். இதனை தொடர்ந்து அங்கிருந்த ஒருவர், தாமஸை தாக்க முற்படும் வீடியோவும் அதில் பதிவாகியிருந்தது.

எக்ஸ் தளத்தில் பதிவிட்ட இளைஞர்

இந்த முழு சம்பவத்தையும் தாமஸ் தனது மொபைல் போனில் வீடியோ பதிவு செய்துள்ளார். அதை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அவர், சவாரி ஆட்டோவிற்கு பதிலாக ஊபர் பைக் புக் செய்ததால் நான் இந்த தாக்குதலுக்கு ஆளானேன் என்று பதிவிட்டு அதில் பெங்களூரு போலீசை அவர் டேக் செய்துள்ளார். இந்த பதிவுக்கு பதிலளித்த போலீஸ், விரிவான விசாரணைக்காக உங்கள் மொபைல் எண்ணை அனுப்பி வையுங்கள் என்று பதிலளித்துள்ளது.

இதையும் படிங்க : Pakistan : உலகின் ஆபத்தான நகரங்கள்.. 2ஆம் இடம் பிடித்த பாகிஸ்தான்.. முதல் இடம் யாருக்கு?

தாமஸின் இந்த பதிவை பார்த்த மற்ற பயனர்கள் தங்களது கருத்துக்களை, விமர்சனங்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

Latest News