5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

‘இப்பிறப்பும், எப்பிறப்பும் தொடரும் இந்தப் பாசம்’.. மனைவிக்காக 4,400 கி.மீ சைக்கிள் பயணம்!

Man travels 4400 km in China: பிரிந்துப் போன மனைவியை பார்க்க 7 ஆயிரம் கிலோ மீட்டர் ஒருவர் சைக்கிளில் பயணித்துள்ளார். இந்தச் சம்பவம் சீனாவில் நடந்துள்ளது. இது குறித்து பார்க்கலாம்.

‘இப்பிறப்பும், எப்பிறப்பும் தொடரும் இந்தப் பாசம்’.. மனைவிக்காக 4,400 கி.மீ சைக்கிள் பயணம்!
சீனாவில் மனைவியை தேடி 4400 கிமீ பயணம் செய்த நபர்
jayakrishnan-ramakrishnan
Jayakrishnan Ramakrishnan | Published: 20 Nov 2024 18:04 PM

காதல் என்பது வலுவான மற்றும் நேர்மறையான மன நிலைகளை உள்ளடக்கியது. அது மிகவும் தூய்மையானது என தமிழ் இலக்கியங்கள் வகைப்படுத்துகின்றன. அதை மெய்பிக்கும் வகையில் சீனாவில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சீனாவை சேர்ந்த ஸோகு, பிரிந்து சென்ற தனது மனைவிக்காக 100 நாள்கள் 4 ஆயிரம் கிலோ மீட்டர் சைக்கிளில் பயணம் செய்துள்ளார். இவர் அவர் மனைவி மீது அவர் கொண்டுள்ள ஆழ்ந்த தனிப்பட்ட பாசத்தை குறிக்கிறது.

அதானி மனைவி லீ-ஐ பார்க்க ஸோகு சுமார் 4,400 கிலோமீட்டர் தென்மேற்கு சீனாவிற்கு 100 நாட்களுக்கு மேல் பயணம் செய்துள்ளார். ஜியாங்சு மாகாணத்தில் உள்ள லியான்யுங்காங்கைச் சேர்ந்த 40 வயது ஸோகு, தனது பயணத்தை ஜூலை 28ஆம் தேதி தொடங்கியுள்ளார்.

காதல் வாழ்க்கை

ஸோகு ஷாங்காயில் அவரது மனைவி லியை சந்தித்தார், இருவரும் 2007 இல் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் நீண்ட காலம் நீடிக்கவில்லை.
ஆம். அவர்கள் 2013 இல் விவாகரத்து செய்தனர். இருப்பினும், அவர்களது உறவு மேம்பட்டது, மேலும் அவர்கள் மீண்டும் திருமணம் செய்து கொண்டனர்.

இதையும் படிங்க : Viral Video : சரமாரியாக தாக்கிக்கொண்ட கும்பல்.. இடையில் வந்த ஆம்புலன்ஸ்.. அடுத்து நடந்தது என்ன?

இந்தத் தம்பதியருக்கு ஓர் மகன் உள்ளார். இது குறித்து, ஸோ, “எங்களுக்கு இடையே ஒரு தீவிரமான பிரச்சினை இல்லை; நாங்கள் இருவரும் மிகவும் பிடிவாதமாக இருக்கிறோம்” என்றார்.
இது குறித்து அவரின் மனைவி லீ, “நான் அவரிடம் பெரிதளவில் சண்டையிடவில்லை. அவரை பைக்கில் வரச் சொன்னேன்” என்றார்.

பயண சவால்

சோவின் குறிப்பிடத்தக்க பயணம் சவால்கள் இல்லாமல் இல்லை. அவரது 4,400 கிலோமீட்டர் பயணத்தின் போது, ​​​​பல்வேறு விதமான சவால்களை எதிர்கொண்டுள்ளார்.
அவருக்கு ஹீட் ஸ்டிரோக் ஏற்பட்டுள்ளது. அதீத பயணம், களைப்பு காரணமாக நீரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மயக்கம் அடைந்து விழுந்துள்ளார்.
அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஸோ நேபாளம் மற்றும் ஐரோப்பாவிற்கு தனது அடுத்த சைக்கிள் சாகசத்தைத் திட்டமிடுகிறார். அதே நேரத்தில் லி ஜியாங்சு மாகாணத்திற்குத் திரும்ப உறுதியளித்துள்ளார்.

இதையும் படிங்க :  Viral Video : உல்லாசமாக பாராகிளைடிங் செய்த நாய்.. இணையத்தை ஆச்சர்யத்துக்கு உள்ளாக்கிய வீடியோ!

Latest News