5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

வாவ்.. 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும்.. நீலகிரியில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலர்கள்!

Neelakurinji Flower: சுமார் 12 வருடங்களிற்கு ஒருமுறை பூக்கும் நீலகுறிஞ்சி மலரானது தற்போது நீலகிரியில் மாவட்டத்தில் பூத்துக் குலுங்குகிறது. இந்த காட்சியை இந்திய ஐஏஎஸ் அதிகாரியான சுப்ரியா சாஹு இணையத்தில் இதைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாவ்.. 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும்.. நீலகிரியில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலர்கள்!
நீலக்குறிஞ்சி
Follow Us
barath-murugantv9-com
Barath Murugan | Published: 28 Sep 2024 19:17 PM

வைரல் வீடியோ : சுமார் 12 வருடங்களிற்கு ஒருமுறை பூக்கும் நீலகுறிஞ்சி மலரானது தற்போது நீலகிரியில் மாவட்டத்தில் பூத்துக் குலுங்குகிறது. இந்த காட்சியை இந்திய ஐஏஎஸ் அதிகாரியான சுப்ரியா சாஹு இணையத்தில் இதைப் பகிர்ந்துள்ளார். சுமார் 12 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் இந்த பூவானது இந்திய மேற்குத் தொடர்ச்சி மலைகளை அடிப்படையாகக் கொண்டு பரவலாகப் பூத்துக்குலுங்கும் ஒரு பூ வகையாகும்.

Also Read :Mpox: அச்சுறுத்தும் குரங்கு அம்மை.. தடுப்பு நடவடிக்கைகளை வெளியிட்ட மத்திய சுகாதார அமைச்சகம்..

இந்த குறிஞ்சி மலருக்கு ஸ்ட்ரோபைலைன்தீஸ் குந்தியானா என்ற அறிவியல் பெயரும் உண்டு. சங்க இலக்கியங்களில் குறிஞ்சி எனப் பெயர் வரக் காரணமாக இருந்தது. இந்த பூச்செடியானது கடல் மட்டத்திலிருந்து 1300 முதல் 2400 மீ. உயரத்தில் வளரும். பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறையே பூக்கும். பொதுவாக 30 முதல் 60 செ.மீ. உயரம் வரை வளரும் இது, இதற்கு ஏற்றத் தட்ப வெப்ப சூழ்நிலை இருந்தால் 180 செ.மீ. உயரம் வரையிலும் வளரும். இது தற்போது நீலகிரி மாவட்டத்தில் பரவலாகப் பூத்துக் குலுங்குகிறது.

Also Read :தேர்தல் பத்திரங்கள் மூலம் பணம் பறிப்பு – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு..

இந்த நீலக்குறிஞ்சி பூவானது பல சுற்றுல்லா பயணிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது. நீலகிரி மலையில் பூக்கும் இந்த குறிஞ்சி பூவின் சுழற்சியை வைத்து நீலகிரியில் உள்ள ‘தோடர்” என்ற இன ஆதிவாசி மக்கள் தங்களது வயதை கணக்கிட்டுள்ளனர். இதைபோல் மேற்குத் தொடர்ச்சி மலைவாழ் பழங்குடியினர் எத்தனை முறை குறிஞ்சி பூத்ததைப் பார்த்தார்கள் என்பதைக் கொண்டு தங்கள் வயதை கணித்துள்ளானார். இத்தனை பெருமைகளையுடைய இந்த பூவானது நீலகிரி மட்டுமில்லாமல் கேரளாவில் இடுக்கி மலைப்பகுதியில் இந்த குறிஞ்சி மலர் பூக்கும். தற்போது இந்த குறிஞ்சி மலரின் வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Also Read :Tamilnadu Weather Alert: அடுத்த 3 நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை.. 18 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்?

 

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ..!

 

வைரல் வீடியோ :

இந்த இயற்கை நிகழ்வு உலகெங்கிலும் உள்ள இயற்கை ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கிறது. இந்த வீடியோவை இந்திய ஐஏஎஸ் அதிகாரியான சுப்ரியா சாஹு இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். இவர் வேற யாருமில்லை தமிழகத்தில் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையும் பணியாற்றி வருபவர் தான் இவர் . இந்த நீலக்குறிஞ்சி பூக்களின் மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகளை X இல் வெளியிட்டு பலரது கவனத்தை ப்ரியா சாஹு ஈர்த்துள்ளார்.

இவர் இந்த வீடியோவில் நீலகிரியில் பூத்துக் குலுங்கும் நீலக்குறிஞ்சிப் பூக்களுக்கு மத்தியில்  பழங்குடியினர் ஒருவர் பெருமையுடன் அமர்ந்திருக்கிறார். இந்த வீடியோவில் நீலக்குறிஞ்சி மலரின் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தும் வேண்டும் ” என்ற வகையில் ஐஏஎஸ் அதிகாரியான சுப்ரியா சாஹு தனது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார்.

Also Read :TVK Vijay: பூமி பூஜை நடத்தும் விஜய்.. மாநாட்டுக்கு ரெடியாகும் த.வெ.க.. புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு

வைரல் வீடியோ குறித்து நெட்டிசன்களின் கருத்து :

இந்த வீடியோவின் கீழ் எக்ஸ் பயனர்கள் “ஆஹா, நீலக்குறிஞ்சி பூக்கள் நீலகிரிக்கு எப்படி வண்ணம் தருகின்றன எனக்கு இது மிகவும் பிடிக்கும். வருங்கால சந்ததியினருக்கு இந்த அழகுகளைப் பாதுகாப்போம்” என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார்.  மற்றொருவர் நீலக்குறிஞ்சி மலர்ந்தது! நீலகிரியில் இது ஒரு மாயாஜால காலம்.

நான் அங்குச் செல்ல விரும்புகிறேன்” என்றும் “இந்தப் பூக்களைப் பார்க்கச் சிறந்த பகுதி எது?” என்று கேட்டார். அதற்கு அவர் நிலகிரில் மாவட்டத்தின் பல பகுதிகளில் பூக்கும்.” என அவர் பதிலளித்துள்ளார் .

இயற்கை ஆர்வலர்கள் இந்த வீடியோவை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர். தற்போது இயற்கை எழில் கொஞ்சும் வியப்புடன் இருக்கும் இந்த அறிய மலரான குறிஞ்சி மலர் மக்கள் மத்தியில் மிக வேகமாக இந்த வீடியோ பரவி வருகிறது.

Also Read :பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த பேருந்து கவிழ்ந்து விபத்து.. 15க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி..

Latest News