ஓணம் பூக்கோலத்தை அழித்த பெண்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..! - Tamil News | North Indian Woman Destroys Onam Pookalam Made By Children the video viral on internet | TV9 Tamil

ஓணம் பூக்கோலத்தை அழித்த பெண்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

Published: 

24 Sep 2024 20:21 PM

Viral Video : ஓணம் பண்டிகையை முன்னிட்டு பெங்களூரில் ஒரு தனியார் குடியிருப்பில் குழந்தைகளால் போடப்பட்டிருந்த பூக்கோலத்தில் பெங்களூரைச் சார்ந்த பெண் ஒருவர் கோலத்தை வேண்டுமென்று அழித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்பெண்ணின் இந்த நடவடிக்கைக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்

ஓணம் பூக்கோலத்தை அழித்த பெண்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

வைரல் வீடியோ

Follow Us On

பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் குடியிருப்பு வளாகத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு போடப்பட்டிருந்த பூக்கோலத்தை பெண் ஒருவர் அழிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் கேரளா பாரம்பரியமான ஓணம் கோலத்தைப் பெண் ஒருவர் தரம் குறைந்து பேசும் வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரல் வீடியோவில் “சிமி நாயர்” என்ற பெண் தனது அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர்களுடன் வாதாடிக்கொண்டே “கோலம் என்றால் உங்கள் வீட்டிற்குள் போடவேண்டியதுதானே என் அனைவரும் பயன்படுத்தும் பொது இடத்தில் இக்கோலத்தைப் போட்டு இருக்கிறீர்கள்” என்று கேள்வி எழுப்புகிறார். அந்தப் பெண் தன் கால்களால் அந்த கோலத்தை மிதித்து நாசம் செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் இந்த சம்பவத்துக்கு கண்டனக் குரல்களை எழுப்பியுள்ளனர்

Also Read :Viral Video : ரயிலின் அப்பர் பர்த்தில் இருந்து எட்டி பார்த்த பாம்பு.. பதறிப்போன பயணிகள்.. அடுத்து நடந்தது என்ன?

ஓணம் பண்டிகை :

கேரளா மாநிலத்தில் பாரம்பரியமாகக் கொண்டாடப்படும் விழா தான் ஓணம். இந்த பண்டிகையைக் கேரளாவில் மட்டுமில்லாமல் பல மாநிலங்களில் வசிக்கும் கேரளா மக்களும் கொண்டாடுவது உண்டு. அந்த வகையில் “பூக்களம்” என்பது வண்ணமயமான, மலர்களால் தரையில் போடப்படும் கோலம் , பெரும்பாலும் ரங்கோலி வடிவத்தில் இருக்கும். இது கேரளாவில் ஒரு பிரபலமான பாரம்பரியமாகும், இது பத்து நாள் ஓணம் பண்டிகையின் போது இந்த பூக்கோலம் போடப்படுகிறது .

Also Read : Bengaluru Murder: ஃபிரிட்ஜில் 50 துண்டுகளாக கிடந்த பெண்.. அதிர்ந்த போலீஸ்.. விசாரணையில் ஷாக்!

அந்த விதத்தில் தற்போது முடிந்த ஓணம் பண்டிகையை முன்னிட்டு பெங்களூரில் ஒரு தனியார் குடியிருப்பில் குழந்தைகளால் போடப்பட்டிருந்த பூக்கோலத்தில் பெங்களூரைச் சார்ந்த பெண் ஒருவர் கோலத்தை வேண்டுமென்று அழித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்பெண்ணின் இந்த நடவடிக்கை ஒரு கலாச்சாரத்தைச் சீரழிக்கும் விதமாக இருப்பதாகவும்,  அந்த பெண் செய்த காரியமானது ஒரு கலாச்சாரத்தை அவமதிப்பது போல் இருப்பதாகவும் இணையவாசிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்

Also Read : ColdPlay : சில நிமிடங்களில் விற்று தீர்ந்த கோல்டு பிளே டிக்கெட்.. ரசிகர்கள் ஏமாற்றம்!

இணையத்தில் பரவும் அந்த வீடியோ..!

 

வைரல் வீடியோ குறித்து நெட்டிசன்களின் கருத்து :

இந்த சம்பவத்துக்கு சமூக ஊடகத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சமூகத்தின் கலாச்சார மரபுகள் மற்றும் குழந்தைகளின் முயற்சிகளை அப்பெண் புறக்கணித்ததற்காகப் பலர் சீற்றத்தையும் அவர் மீது கடும் கோபத்தையும் இணையத்தில்  வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த  வீடியோவின்  கீழ் பலர் தனது விமர்சனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அதில் ஒருவர்  “அப்பெண் சொல்வது சரிதான். குடியிருப்பாளர்கள் மற்ற குடியிருப்பாளர்களுக்கு இதுபோன்ற தடைகளை உருவாக்கக்கூடாது. ஒரு குழு திருவிழா என்பது அனைவருக்கும் ஒரு திருவிழா அல்ல. உங்கள் பண்டிகைகளை உங்கள் வீடுகளில் கொண்டாடுங்கள் அல்லது சமுதாயக் கூடத்தைப் பதிவு செய்து கொண்டாடுங்கள்” என்று அப்பெண்ணுக்கு ஆதரவு செய்யும் விதத்தில் கமெண்ட் செய்துள்ளார்.
மற்றொருவர் “இந்த செயலை பொறுத்துக் கொள்ளக் கூடாது. ஓணம் பண்டிகை அது ஒரு கலாச்சாரம்  அதில்  என்ன தவறு இருக்கிறது.அது பூக்கள் நிறைந்தது அழகான கோலம் அதை ரசிக்கலாம்.! ஆனால் இந்த பெண்மணி வெறித்தனமாக நடந்து கொண்டார் எனவும் அவரை எதிர்த்தும் வருகின்றனர்.

Also Read :இளம் பெண் படுகொலை.. 30 துண்டுகளாக வெட்டி ப்ரிட்ஜில் அடைத்த கொடூரம்.. பெங்களூருவில் திடுக்கிடும் சம்பவம்!

ஆரோக்கியத்தை அள்ளி தரும் ஆலிவ் ஆயிலின் நன்மைகள்..!
சருமத்திற்கு பல நன்மைகளை தரும் கற்றாழை..!
புதினாவை தினமும் மென்று சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 சீரியல்கள் லிஸ்ட்
Exit mobile version