Optical Illusion : இரவில் ரகசியமாக வெளியே சென்று வந்த குழந்தை யார்.. வெறும் 5 நொடிகளில் உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?
Viral Image | தற்போது இணையத்தில் வைரலாகும் அந்த ஒளியியல் மாயை புகைப்படத்தில், ஒரு படுக்கை அறையில் 5 குழந்தைகள் தூங்கி கொண்டிருக்கின்றனர். பச்சை நிறத்தில் வண்ணம் அடிக்கப்பட்ட அந்த அறையில் 5 கட்டில்களில் 5 குழந்தைகள் தூங்கிக்கொண்டிருக்கின்றனர்.
இணையத்தில் அவ்வப்போது பல வகையான ஒளியியல் மாயை புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், தற்போது 5 குழந்தைகள் ஒரே அறையில் தூங்கிக்கொண்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 5 குழந்தைகள் ஒரே அறையில் தூங்குவதற்கும், ஒளியியல் மாயைக்கும் என்ன தொடர்பு என உங்களுக்கு கேள்வி எழலாம். நிச்சயம் இரண்டிற்கும் தொடர்பு உள்ளது. அந்த ஒளியியல் மாயை புகைப்படத்தில், படுக்கை அறையில் தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தைகளில் ஒரே ஒரு குழந்தை மட்டும் ரகசியமாக இரவில் வெளியே சென்று வந்துள்ளது. அந்த குழந்தை யார் என்பதை கண்டறிவதுதான் இந்த ஒளியியல் மாயை புகைப்படத்தின் டாஸ்க். இந்த ஒளியியல் மாயை புகைப்படத்தை பார்த்து எந்த குழந்தை வெளியே சென்று வந்துள்ளது என்பதை 5 நொடிகளில் கண்டுபிடிப்பபர்களுக்கு சிறந்த அறிவு கூர்மை உள்ளதாக கூறப்ப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Optical Illusion : உங்களுக்கு முதலில் தெரிந்தது காகமா, முகமா?.. அதை வைத்தே உங்கள் ஆளுமை பண்பை சொல்லாம்!
இணையத்தில் வைரலாகும் ஒளியியல் மாயை புகைப்படம்
தற்போது இணையத்தில் வைரலாகும் அந்த ஒளியியல் மாயை புகைப்படத்தில், ஒரு படுக்கை அறையில் 5 குழந்தைகள் தூங்கி கொண்டிருக்கின்றனர். பச்சை நிறத்தில் வண்ணம் அடிக்கப்பட்ட அந்த அறையில் 5 கட்டில்களில் 5 குழந்தைகள் தூங்கிக்கொண்டிருக்கின்றனர். அந்த குழந்தைகளில் ஒரே ஒரு குழந்தை மட்டும் இரவில் வெளியே சென்று வந்துள்ளது. அந்த குழந்தை யார் என்பதை கண்டுபிடிப்பதுதான் தற்போதைய டாஸ்க். இதை கண்டுபிடிக்க சற்று வித்தியாசமாக யோசிக்க வேண்டும். அவ்வாறு இந்த புகைப்படத்தில் இரவில் வெளியே சென்று வந்த குழந்தை யார் என வெறும் 5 விநாடிகளில் கண்டுபிடிக்கும் நபர் சிறந்த அறிவு கூர்மை கொண்ட நபராக இருப்பார் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. நீங்களும் உங்கள் அறிவு திறன் எவ்வளவு கூர்மையாக உள்ளது என்பதை இந்த விளையாட்டு மூலம் சோதனை செய்து பாருங்கள்.
இதையும் படிங்க : Optical Illusion : “FUN”-க்கு நடுவில் மறைந்திருக்கும் “SUN”.. 10 விநாடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா?
வெளியே சென்று வந்த குழந்தை யார்?
இணையத்தில் வைரலாகி வரும் அந்த புகைப்படத்தில் 5 வெவ்வேறு கட்டில்களில் 5 குழந்தைகள் தூங்கிக்கொண்டிருக்கின்றனர். ஆனால், அந்த குழந்தைகளில் ஒரே ஒரு குழந்தை மட்டும் காலில் ஹூ அணிந்துக்கொண்டு தூங்குகிறது. மற்ற குழந்தைகளில் கால்களின் ஷூ அல்லது செருப்பு இல்லை. இதன் மூலம், ஷூ அணிந்துக்கொண்டு தூங்கிய குழந்தை தான் இரவில் வெளியே சென்று வந்துள்ளது என்பது உறுதியாகிறது. இது மிகவும் எளிதான புதிர் தான். ஆனால், வித்தியாசமான கோணத்தில் யோசிக்கும்போது அதற்கான பதில் எளிதாக தெரிந்துவிடும். நீங்கள் ஒருவேளை 5 நொடிகளுக்குள் இந்த புகைப்படத்திற்கான விடையை கண்டுபிடிக்கவில்லை என்றால் கவலை வேண்டாம். இது மாதிரியான ஒளியியல் மாயை விளையாட்டுகளை தொடர்ந்து விளையாடி வந்தால் மிகவும் சுலபமாக கண்டுபிடித்துவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Optical Illusion : 9-களுக்கு நடுவில் மறைந்திருக்கும் “6”.. வெறும் 5 விநாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?
ஒளியியல் மாயை என்றால் என்ன?
ஒளியியல் மாயை என்றால் அது ஒரு வகையான புதிர் விளையாட்டு ஆகும். அத்தகைய புகைப்படங்களில் ஒரே ஒரு உருவம் மட்டும் இடம் பெற்றிருப்பது போல் தோன்றும். ஆனால், அந்த புகைப்படத்தில் பல்வேறு உருவங்கள் அல்லது காட்சிகள் அடங்கியிருக்கும். இந்த ஒளியியல் மாயை புகைப்படங்கள் பல்வேறு வகைப்படும். அவை பல்வேறு உருவங்கள், காட்சி பிழை, புதிர் ஆகியவற்றை கொண்டிருக்கும். தற்போது, அத்தகைய புகைப்படங்களில் ஒன்றுதான் இணையத்தில் வேகமாக வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.